இந்த வாரம் சபைக்கு செய்தி...தேவனால் பிறந்தவன்
இந்த வாரம் சபைக்கு செய்தி... தேவனால் பிறந்தவன் தேவனால் பிறப்பது என்றால் என்ன? சொந்தமானவர்கள் vs தேவனாலே பிறந்தவர்கள்.. சொந்தமானவர்களோ தேவனை ஏற்றுக்கொள்ளாதவர்கள்.. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. யோவான் 1:11 தேவனை ஏற்றுக்கொண்டவர்கள் தேவனுடைய பிள்ளைகள்.. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். யோவான் 1:12 தேவனால் பிறந்தவர்கள்.. 1. தேவனால் மறுபடியும் பிறக்கிறார்கள்.. கவனியுங்கள் .. ஆபிரகாமுக்கு 2 குமாரர்கள் இருந்தார்கள்.. ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது. ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன். கலாத்தியர் 4:22 1. இஸ்மவேல்.. இவன் அடிமையான ஆகாரிடத்தில் பிறந்தவன்.. இது மாம்ச பிறப்பு.. மாம்ச பிறப்பை பற்றி வேதம் இவ்வாறு கூறுகிறது.. இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத...