தேவனால் பிறந்தவன்..BORN OF GOD..தேவனால் பிறப்பது என்றால் என்ன?
இந்த வாரம் சபைக்கு செய்தி
தேவனால் பிறந்தவன்..
BORN OF GOD..
தேவனால் பிறப்பது என்றால் என்ன?
இரண்டு வசனங்கள் வாசிப்போம்..
சொந்தமானவர்கள்
Vs
தேவனாலே பிறந்தவர்கள்
அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் *சொந்தமானவர்களோ* அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
யோவான் 1:11
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் *தேவனுடைய பிள்ளைகளாகும்படி,* அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
யோவான் 1:12
தேவனால் பிறந்தவன் என்பதை வேதம் 3 நிலைகளில் விவரிக்கிறது..
1. தேவனாலே பிறப்பது..
யோவான் 1.12,13
அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
யோவான் 1:13
2. ஆவியினாலும் ஜலத்தினாலும் பிறப்பது..
யோவான் 3.5
இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 3:5
3. ஆவியினால் பிறந்தவன்..
காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது: ஆவியினாலும் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
யோவான் 3:8
__________________________
ஆபிராகமுக்கு 2 குமாரர்கள் இருந்தார்கள்..
கலா 4.22
ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது. ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன்.
கலாத்தியர் 4:22
1. அடிமையானவளிடத்தில் பிறந்தவன்,ஆகார்.. இஸ்மவேல்.. மாம்சத்தின்படி பிறத்தல்
2. சுயாதீனமுள்ளவளிடத்தில்பிறந்தவன்..சாராள். ஈசாக்கு.. ஆவியின் படி பிறத்தல்
அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான்.
கலாத்தியர் 4:23
மாம்சம் ஆவிக்கு விரோதமாக இச்சிக்கிறது..
சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகயாயிருக்கிறோம்.
கலாத்தியர் 4:28
ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது.
கலாத்தியர் 4:29
அதைக்குறித்து வேதம் என்னசொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது.
கலாத்தியர் 4:30
இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம்.
கலாத்தியர் 4:31
மாம்சம்
Vs
ஆவி
பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.
கலாத்தியர் 5:16
மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
கலாத்தியர் 5:17
ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.
கலாத்தியர் 5:18
மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
கலாத்தியர் 5:19
விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
கலாத்தியர் 5:20
பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவாகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் உங்களுக்குச் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கலாத்தியர் 5:21
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
கலாத்தியர் 5:22
சாந்தம், இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
கலாத்தியர் 5:23
கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
கலாத்தியர் 5:24
நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்.
கலாத்தியர் 5:25
__________________________
தேவனால் பிறந்தவனின் தெய்வீக குணங்கள்..
தேவனால் பிறந்தவன்..
1. இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிறான்..
இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான். பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.
1 யோவான் 5:1
2. தேவனை அறிந்திருக்கிறான்..
பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம். ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
1 யோவான் 4:7
3. தேவனால் பிறப்பிக்க ப் பட்டவர்களிடத்தில் அன்பு கூறுகிறான்..
இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான். பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.
1 யோவான் 5:1
4. அவருடைய வசனங்களுக்கு செவி கொடுக்கிறான்..
தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான், நீங்களும் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.
யோவான் 8:47
5. பாவம் செய்யான்..
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
1 யோவான் 3:9
6. நீதியை செய்கிறான்..
அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.
1 யோவான் 2:29
7. உலகத்தை ஜெயிக்கிறான்..
தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
1 யோவான் 5:4
இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
1 யோவான் 5:5
8. தன்னைக் காக்கிறான்..
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்.
1 யோவான் 5:18
நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.
1 யோவான் 5:19
அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்
1 யோவான் 5:20
பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.
1 யோவான் 5:21
Double Fold Protection.
உபதேசம் :
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன், அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.
யோவான் 10:28
அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார், அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
யோவான் 10:29
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
யோவான் 10:30
நடைமுறை ஜீவியம் :
Protection on Lord's side :
அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன். ஆயினும் நான் வெட்கப்படுகிறதில்லை. ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.
2 தீமோத்தேயு 1:12
Protection on Holy Spirit Side :
உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.
2 தீமோத்தேயு 1:14
What is my Responsibility?
நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு.
2 தீமோத்தேயு 1:13
கர்த்தர் உங்கள் இருதயங்களை ஆளுகை செய்வாராக!!!
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
Comments
Post a Comment