இந்த வாரம் சபைக்கு செய்தி...தேவனால் பிறந்தவன்
இந்த வாரம் சபைக்கு செய்தி...
தேவனால் பிறந்தவன்
தேவனால் பிறப்பது என்றால் என்ன?
சொந்தமானவர்கள் vs தேவனாலே பிறந்தவர்கள்..
சொந்தமானவர்களோ தேவனை ஏற்றுக்கொள்ளாதவர்கள்..
அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
யோவான் 1:11
தேவனை ஏற்றுக்கொண்டவர்கள் தேவனுடைய பிள்ளைகள்..
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
யோவான் 1:12
தேவனால் பிறந்தவர்கள்..
1. தேவனால் மறுபடியும் பிறக்கிறார்கள்..
கவனியுங்கள்..
ஆபிரகாமுக்கு 2 குமாரர்கள் இருந்தார்கள்..
ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது. ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன்.
கலாத்தியர் 4:22
1. இஸ்மவேல்..
இவன் அடிமையான ஆகாரிடத்தில் பிறந்தவன்.. இது மாம்ச பிறப்பு..
மாம்ச பிறப்பை பற்றி வேதம் இவ்வாறு கூறுகிறது..
இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறப்பவர்கள்..
அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான்,23a
2. ஈசாக்கு..
இவன்..
சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான்.
கலாத்தியர் 4:23b
இது ஆவிக்குரிய பிறப்பு..
ஆவிக்குரிய பிறப்பை பற்றி வேதம் இவ்வாறு கூறுகிறது..
இன்னும் ஆழமாக சிந்தித்தால்..
ஜலத்தினால் பிறப்பது..
ஜலம்..கர்த்தருடைய வசனம்..
இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 3:5
மாமிசத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.
யோவான் 3:
பிறப்பது என்றால் ஜெனிப்பித்தல் என்றும் அர்த்தம்..
அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.
1 பேதுரு 1:23
ஆவியினால் பிறப்பது..
ஆவி...ஆவியானவர்..
நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
தீத்து 3:5
நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்
யோவான் 3:7
காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது: ஆவியினாலும் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
யோவான் 3:8
ஆனால் தேவனால் பிறந்தவர்கள் (அவர்கள்), இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
யோவான் 1:13
மாம்சத்தின்படி பிறந்தவர்கள்.. இஸ்மவேல் வம்சம்... இவர்கள் அரேபியர்கள்..
...... இவன் நம் பழைய மனிதன்..
ஆவியின்படி பிறந்தவர்கள்..
ஈசாக்கின் வம்சம்..இவர்கள் யூதர்கள்..
...... இவன் நம் புதிய மனிதன்
ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது.
கலாத்தியர் 4:29
ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை. எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
2 கொரிந்தியர் 4.16
தேவனால் பிறந்தவனின் 8 குணாதிசயங்கள்..
யோவான் நற்செய்தி மற்றும் நிருபத்தில் இருந்து...
தேவனால் பிறந்தவன்.......
1. இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிறான்..
இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான். பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.
1 யோவான் 5:1
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
எபிரேயர் 11:6
2. தேவனை அறிந்திருக்கிறான் ..
பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம். ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
1 யோவான் 4:7
அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
1 யோவான் 2.4
3. அவரால் பிறப்பிக்கப்பட்டவரிடத்தில் அன்பு கூறுகிறான்..
இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான். பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.
1 யோவான் 5:1
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்.
1 யோவான் 3.14
4. தேவனுடைய வசனங்களுக்கு செவி கொடுக்கிறான்..
தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான், நீங்களும் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.
யோவான் 8:47
அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும். நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
1 யோவான் 2.5
5. பாவம் செய்யான்..
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
1 யோவான் 3:9
இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்.
1 யோவான் 3:10a
அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள். அவரிடத்தில் பாவமில்லை.
1 யோவான் 3:5
அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை. பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.
1 யோவான் 3:6
6. நீதியை செய்கிறான்..
அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.
1 யோவான் 2:29
இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும். நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.
1 யோவான் 3:10
பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள். நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.
1 யோவான் 3.7
7. உலகத்தை ஜெயிக்கிறான் ..
தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
1 யோவான் 5:4
இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
1 யோவான் 5:5
ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான், நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.
வெளிப்படுத்தினத விசேஷம் 21.7
8. தன்னைக் காக்கிறான் ..
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்.
1 யோவான் 5:18
வேதத்தை காத்து கொள்ளுதல்..
கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும், முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.
சங்கீதம் 119.33
விசுவாசத்தை காத்துக்கொள்ளுகிறவர்கள்..
தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.
வெளிப்படுத்தினத விசேஷம் 14.12
விக்கிரகங்களுக்கு காத்துக் கொள்ளுதல் ..
பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.
1 யோவான் 5.21
தன்னைக் காத்துக் கொள்ளுதல்..
திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைப்படாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
யாக்கோபு 1.27
தன்னைக் காக்கிறான் ...
அதன் அர்த்தம் என்ன?
நாம் தான் பெற்றுக்கொண்ட இரட்சிப்பை காத்துக்கொள்ள வேண்டுமா?
2 வசனங்கள் ஒரே அதிகாரத்தில் வருகின்றது..
அவர் ( கிறிஸ்து ) காத்துக்கொள்வார்..
அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன். ஆயினும் நான் வெட்கப்படுகிறதில்லை. ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.
2 தீமோத்தேயு 1:12
பரிசுத்த ஆவியினால்.. நாம்..காத்துக்கொள்ள வேண்டும்..
உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.
2 தீமோத்தேயு 1:14
நம்முடைய அர்ப்பணம் மட்டுமே..
கிறிஸ்துவும் ஆவியானவரும் பெரும் பங்கு வகிக்கிறார்கள்..
closing thought...
இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.
வெளிப்படுத்தினத விசேஷம் 16.15
whatsapp 91 9965050301
Comments
Post a Comment