கர்த்தர் திறந்தருளுகிறவர்..GOD WHO OPENETH..
இன்றைய சிந்தனை..
கர்த்தர் திறந்தருளுகிறவர்..
GOD WHO OPENETH..
1. கண்களைத் திறந்தருளும்..
தேவனுடைய மகத்துவத்தைக் காண..
அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான், உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார், இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.
2 இராஜாக்கள் 6.17
2. கண்களைத் திறந்தருளும்..
நம்மை சுற்றியுள்ள சத்துருக்களை காண..
அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படி இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான், பார்க்கும்படி கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது, இதோ, அவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.
2 இராஜாக்கள் 6.20
3. உதடுகளைத் திறந்தருளும்..
கர்த்தருடைய புகழை அறிவிக்க...
ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும், அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
சங்கீதம் 51.15
4. கண்களைத் திறந்தருளும்..
வேதத்திலுள்ள அதிசயங்களை காண..
உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.
சங்கீதம் 119.18
5. இருதயத்தைத் திறந்தருளினார்...
கர்த்தருடைய வசனத்தை கவனிக்க...
அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள். பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.
அப்போஸ்தலர் 16.14
6. செவிகளை திறந்தீர் ..
பலியினால் தேவனுடைய இரட்சிப்பை உறுதி செய்ய..
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர், சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை.
சங்கீதம் 40. 6
7. சுவிசேஷ வாசலைத் தேவன் திறந்தருளுவார்.
திருவசனம் எல்லா இடங்களிலும் செல்ல..
திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.
கொலோசெயர் 4. 4
ஜெபம் :
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.
இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
2 கொரிந்தியர் 4:4-6
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
Comments
Post a Comment