GENEALOGY OF FIRST ADAM VS SECOND ADAM JESUS
1 ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார். ஆதியாகமம் 5:1 2 அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார். ஆதியாகமம் 5:2 3 ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான். ஆதியாகமம் 5:3 4 ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ஆதியாகமம் 5:4 5 ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம், அவன் மரித்தான். ஆதியாகமம் 5:5 6 சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றான். ஆதியாகமம் 5:6 7 சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ஆதியாகமம் 5:7 8 சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம், அவன் மரித்தான். ஆதியாகமம் 5:8 9 ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான். ஆதியாகமம் 5:9 10ஏனோஸ் கேனானைப் பெற்றபின், ...