தேவனே.. ஒரு விசுவாசிக்கு சகலமும்...!!!யெகோவா யீரே..கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும்..



காலைதோறும் கிருபை..

தேவனே.. ஒரு விசுவாசிக்கு சகலமும்...!!!

யெகோவா யீரே..
கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும்..

தேவன் பார்த்துக்கொள்வார்..

 அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான். அப்புறம் இருவரும் கூடிப்போய், 
ஆதியாகமம் 22:8

ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான். அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. 
ஆதியாகமம் 22:14
__________________________


1. தேவனே நீதிமான்களாக்குகிறவர்..

தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். 
ரோமர் 8:33, 3.24

2. தேவனே..பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
ரோமர் 8. 3

3. நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே..


உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.
2 கொரி 1.21

4. நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே.

இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே. ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே.
2 கொரிந்தியர் 5.5

5. தேவனே..விருப்பத்தையும் செய்கையையும் உண்டாக்குகிறவராயிருக்கிறார்..

 ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
பிலிப்பியர் 2.13

6. தேவனே விளையச்செய்கிறார்..

நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.
1 கொரிந்தியர் 3.6

7. தேவனே..சகலத்திலும் சகலமாயிருக்கிறார்

 சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.
1 கொரிந்தியர் 15.28

கடைசியாக என் சகோதரரே..

தேவனே சத்தியபரர் என்று சொல்வோமாக..

அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.
ரோமர் 3. 4

Shalomjjj@gmail.com 
WhatsApp 91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA