⭕⭕⭕⭕கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஐனமுமிராது⭕⭕⭕⭕
நியாயப்பிரமாணமா?
கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசமா?
இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால், கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஐனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கலாத்தியர் 5:2
நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து, கிருபையினின்று விழுந்தீர்கள். கலாத்தியர் 5.4
இப்படிப்பட்ட போதனைகள் சுயஇஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.
கொலோசெயர் 2.23
புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு. அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்.
தீத்து 3.9
ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது. கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.
எபிரேயர் 4.2
உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள். அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே. எபிரேயர் 13.17
உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? யாக்கோபு 2.16
இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
யோவான் 8.54
கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும். நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.
1 கொரிந்தியர் 15.17
நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை. நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.
கலாத்தியர் 2.21
உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
யாக்கோபு 1.26
Comments
Post a Comment