மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh


PLAN YOUR DEATH..

Youtube link கேளுங்கள் பகிருங்கள் 

https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

தாவீது தன் காலத்தில் தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான். 
அப்போஸ்தலர் 13.36

அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான். 
லூக்கா 1.23

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

மரணம் மங்களம்..
மரணக்கட்டுகள்

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை..

♥️1. ஆரம்ப ஜெபம்..
♥️2. பாடல்

  கர்த்தர் என் மேய்ப்பரே
  குறை எனக்கில்லையே
  அனுதினம் நல்மேய்ச்சல்
  அன்புடன் அளித்திடுவார்.

1 மரணத்தின் இருள் தன்னில்
  நடந்திட நேர்ந்தாலும்
  மீட்பரின் துணையுடனே
  மகிழ்வுடன் நடந்திடுவேன்.
                      - கர்த்தர்

2. பகைவரின் கண்களின் முன்
  பரமன் எனக்கோர் விருந்தை
  பாங்குடன் அருளுகின்றார்
  பரவசம் கொள்ளுகிறேன்.
                      - கர்த்தர்

3. எண்ணெயால் என் தலையை
  இன்பமாய் அபிஷேகம்
  செய்கிறார் என் தேவன்
  உள்ளமும் பொங்கிடுதே.
                      - கர்த்தர்

4. ஜீவனின் நாட்களெல்லாம்
  நன்மையும் கிருபையுமே
  தொடர்ந்திட வாழ்ந்திடுவேன்
  கர்த்தரின் வீட்டினிலே.
                      - கர்த்தர்

3. பாடல்

1. இன்ப இயேசு ராஜாவை நான்
     பார்த்தால் போதும்
  மகிமையில் அவரோடு நான்
     வாழ்ந்தால் போதும்
  நித்தியமாம் மோட்ச வீட்டில்
     சேர்ந்தால் போதும்
  பரிசுத்தர் கூட்டத்தில்
     நான் மகிழ்ந்தால் போதும்.

2. இயேசுவின் இரத்தத்தாலே
     மீட்கப்பட்டு
  வசனமாம் வேலியாலே
     காக்கப்பட்டு
  கறை திரையற்ற
     பரிசுத்தரோடு
  ஏழையான் பொன் வீதியில்
     உலாவிடுவேன். 

3. தூதர்கள் வீணைகளை
     மீட்டும் போது
  நிறைவான ஜெய கோஷம்
     முழங்கும் போது
  அல்லேலூயா கீதம் பாடிக்
     கொண்டு
  அன்பராம் இயேசுவோடு
     அக மகிழ்வேன்.

4. முட்கிரீடம் சூட்டப்பட்ட
     தலையைப் பார்ப்பேன்
  பொற்கிரீடம் சூட்டி நானும்
     புகழ்ந்திடுவேன்
  வாரினால் அடிபட்ட முதுகைப்
     பார்ப்பேன்
  ஒவ்வொரு காயங்களாய்
     முத்தம் செய்வேன்.

5. என்னுள்ளம் நன்றியால்
     நிறைந்திடுதே
  எந்தனின் பாக்ய வீட்டை
     நினைக்கையிலே
  அல்லேலூயா ஆமென்
     அல்லேலூயா
  வர்ணிக்க எந்தன் நாவு
     போதாதய்யா

6. ஆஹா எக்காளம் என்று
     முழங்கிடுமோ
  ஏழை என் ஆவல் என்று
     தீர்ந்திடுமோ
  அப்பா என் கண்ணீர் என்று
     துடைக்கிறாரோ?
  ஆவலாய் ஏங்கிடுதே
     என்னுள்ளமும்.

4. வேத பகுதி..
சங்கீதம் 116

கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன். 
சங்கீதம் 116:1

அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன். 
சங்கீதம் 116:2

மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது, இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன். 
சங்கீதம் 116:3

The sorrows of death compassed me, and the pains of hell gat hold upon me: I found trouble and sorrow. 
Psalms 116:3

அப்பொழுது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன். 
சங்கீதம் 116:4

கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனஉருக்கமானவர். 
சங்கீதம் 116:5

கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார், நான் மெலிந்துபோனேன், அவர் என்னை இரட்சித்தார். 
சங்கீதம் 116:6

என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு. 
சங்கீதம் 116:7

என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர். 
சங்கீதம் 116:8

நான் கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன். 
சங்கீதம் 116:9

விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன், நான் மிகுதியும் வருத்தப்பட்டேன். 
சங்கீதம் 116:10

எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன். 
சங்கீதம் 116:11

கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். 
சங்கீதம் 116:12

இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன். 
சங்கீதம் 116:13

நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன். 
சங்கீதம் 116:14

கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது. 
சங்கீதம் 116:15

கர்த்தாவே, நான் உமது அடியேன், நான் உமது அடியாளின் புத்திரனும், உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன், என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர். 
சங்கீதம் 116:16

நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன். 
சங்கீதம் 116:17

நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும், 
சங்கீதம் 116:18

கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களிலும், எருசலேமே உன் நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா. 
சங்கீதம் 116:19

♥️5. பாடல்

1. ஜோதி தோன்றும் ஒர்
     தேசமுண்டு
  விசுவாசக் கண்ணால்
     காண்கிறோம்
  நம் பிதா அழைக்கும்
     பொழுது
  நாம் அங்கே வசிக்கச்
     செல்லுவோம்.

 பல்லவி

  இன்பமாய் சீக்கிரம் மோட்ச
     கரையில்
  நாம் சந்திப்போம்
  இன்பமாய் சீக்கிரம் மோட்ச
     கரையில்
  நாம் சந்திப்போம்.

2. அந்த வான் கரையில் நாம் நின்று
  விண்ணோர் கீதங்களைப்
     பாடுவோம்
  துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
  சுத்தரின் ஆறுதல் அடைவோம்.
  
  - இன்ப

3. நம் பிதாவின் அன்பை நினைத்து
  அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
  மீட்பின் நன்மைகளை உணர்ந்து
  அவரை வணங்கி துதிப்போம்.
  
  - இன்ப

4. அந்த மோட்ச கரை அடைந்து
  வான் சேனையுடன் நாம்
     களிப்போம்
  நம் தொல்லை யாத்திரை முடித்து
  விண் கிரீடத்தை நாம் தரிப்போம்.
  
  - இன்ப

5. சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்
  சந்திப்போம், பாடுவோம்,
     ஆளுவோம்
  துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
  ஷேமமாய் நாம்
     இளைப்பாறுவோம்.
  - இன்ப

6. அங்கே நம் இரட்சகர் என்றென்றும்
  ஆளுகைசெய்து வீற்றிருப்பார்
  துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
  தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார்.
  
  - இன்ப

7. ஏழைக்கும் மாளிகை அங்குண்டு
  என்று நல் மீட்பர் அழைக்கிறார்
  மாந்தர் யாவர்க்கும் இடமுண்டு
  எல்லோரும் வாருங்கள்
     என்கிறார். - இன்ப


♥️6. செய்தி

SIN WORKING DEATH IN ME..
DEATH IS A LAW

PHYSICAL LAW
CHEMICAL LAW
BIOLOGICAL LAW
SOCIAL LAW
WORLD IS RUNNING BASED ON LAW

பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது. 
ரோமர் 7:11

ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது. 
ரோமர் 7:12

இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல, பாவமே எனக்கு மரணமாயிற்று, பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது ( பாவம் ) நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.
 ரோமர் 7:13

 Was then that which is good made death unto me? God forbid. But sin, that it might appear sin, working death in me by that which is good; that sin by the commandment might become exceeding sinful. 
Romans 7:13

நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல் தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான். நீதிமொழிகள் 11.19

அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது: நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும். நீதிமொழிகள் 10. 2

  கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும். நீதிமொழிகள் 11.4


 மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி. நீதிமொழிகள் 24.11

நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும், பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம், வாதை பெரு வெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது, நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. ஏசாயா 28.15

நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோம், வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள். ஏசாயா 28.16

பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது. மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. 2 சாமுவேல் 22.6

மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
 சங்கீதம் 18.4

பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. 
சங்கீதம் 18.5

மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது, இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன். 
சங்கீதம் 116.3

ஞானவான்களுடைய போதகம் ஜீவ ஊற்று: அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்;. நீதிமொழிகள் 13.14

கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று: அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். நீதிமொழிகள் 14.27

என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது, என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது, என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.
 சங்கீதம் 22.15

இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. ரோமர் 5.12

ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்தச் சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும்.
 எபிரேயர் 9.16

எப்படியெனில், மரணமுண்டான பின்பே மரணசாதனம் உறுதிப்படும். அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே. 
எபிரேயர் 9.17

அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார், இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. வெளிப்படுத்தினத விசேஷம் 21.4

மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா.) சங்கீதம் 89.48

துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்: நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்
நீதிமொழிகள் 14.32


✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகையில், இயேசு அவர்களுக்கு முன்னே நடந்துபோனார், அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார். 
மாற்கு 10:32

இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்திநடந்துபோனார்
லூக்கா 19:28

அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான். மாற்கு 15.44



♥️தேவ குமாரன் மரணத்தை எவ்வாறு கையாண்டர்?

🌺1. நிறைவேற்றப்போகிற அவருடைய மரணம்
ACCOMPLISHED DEATH...

அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் 

🌺2.பேசிக்கொண்டிருந்த மரணம்
SPOKEN OF DEATH..
 லூக்கா 9:31

Who appeared in glory, and spoke of his decease which He should accomplish at Jerusalem. 
Luke 9:31

🌺3.ருசி பார்க்கப்பட்ட மரணம்..
TASTED THE DEATH..

என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த 

இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
 மத்தேயு 16:28

 அன்றியும், அவர் அவர்களை நோக்கி, இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
 மாற்கு 9:1

இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
 லூக்கா 9:27

🌺4. இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம்
SUFFERING OF DEATH..

மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். எபிரேயர் 2.9

 But we see Jesus, who was made a little lower than the angels for the suffering of death, crowned with glory and honour; that He by the grace of God should taste death for every man. 
Hebrews 2:9

🌺5. மரணத்திலூற்றினார்..
POURED HIS SOUL UNTO DEATH

அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன், பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார். ஏசாயா 53.12

Therefore will I divide him a portion with the great, and He shall divide the spoil with the strong; because He hath poured out his soul unto death: and He was numbered with the transgressors; and He bare the sin of many, and made intercession for the transgressors. 
Isaiah 53:12

🍅6. மரணத்தைப் பரிகரித்தார்
ABOLISHED THE DEATH..

நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது. அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.
 2 தீமோத்தேயு 1:10

🍅7.மரணத்தை ஜெயமாக விழுங்குவார், 
VICTORIOUS DEATH..

அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார், கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார், கர்த்தரே இதைச் சொன்னார்.
 ஏசாயா 25:8

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

🍅 விசுவாசிகளுக்கு சரீர மரணம் ஒரு பலி..
DEATH IS A SACRIFICE..

ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன். நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது.
 2 தீமோத்தேயு 4:6

 For I am now ready to be offered, and the time of my departure is at hand. 
2 Timothy 4:6

காற்படி திராட்சரசம் ஒரு ஆட்டுக்குட்டிக்கு அடுத்த பானபலி,; பரிசுத்த ஸ்தலத்திலே கர்த்தருக்கு அந்த இரசம் பானபலியாக வார்க்கப்படக்கடவது.
 எண்ணாகமம் 28:7

And the drink offering thereof shall be the fourth part of an hin for the one lamb: in the holy place shalt thou cause the strong wine to be poured unto the LORD for a drink offering. 
Numbers 28:7

🍅 மரணத்தில் நம் நம்பிக்கை என்ன?
🍅 நாம் எவ்வாறு மரணத்தை கையாளுகிறோம்?

♥️1.மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
 1 கொரிந்தியர் 11:26

♥️2.மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.

கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.
 2 கொரிந்தியர் 4:10

♥️ நேச வலிமை..
♥️ நேச வைராக்கியம்..

நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும், நேசம் மரணத்தைப்போல் வலிது, நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது, அதின் தழல் அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது.
 உன்னதப்பாட்டு 8:6

நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்.
 1 யோவான் 3:14

♥️ குடும்பத்தாருக்கு ஆறுதல்..

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். 
தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர். 
2 கொரிந்தியர் 1:,3-4


♥️7. MEMORIAL TALK
♥️8. MEMORIAL TALK 

♥️9. பாடல்..

1. கொஞ்சக்காலம் இயேசுவுக்காக 
  கஷ்டப்பாடு சகிப்பதினால்
  இந்த துன்பம் இன்பமாய் மாறும் 
  இயேசுவை நாம் காணும்போது

 பல்லவி

  அவர் பாதம் வீழ்ந்து பணிந்து 
  ஆனந்தக் கண்ணீர் வடிப்பேன்
  எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் 
     முடியும் 
  அந்த நாடு சுதந்தரிப்பேன்.

2. கஷ்டம் கண்ணீர் நிறைந்த 
     உலகை 
  கடந்தென்று நான் 
     மறைவேன்
  ஜீவ ஊற்றருகே என்னை 
     நடத்திச் சென்று 
  தேவன் கண்ணீரைத் 
     துடைத்திடுவார்.

3. இந்த தேகம் அழியும் கூடாரம் 
  இதை நம்பி யார் பிழைப்பான்?
  என் பிதா வீட்டினில் 
     வாசஸ்தலங்கள் உண்டே
  இயேசுவோடு நான் 
     குடியிருப்பேன்.

4. வீணை நாதம் தொனித்திடும் 
     நேரம் 
  வரவேற்பு அளிக்கப்படும்
  என்னைப் பேர் சொல்லி இயேசு 
     அழைத்திடுவார்
  எனக்கானந்தம் பொங்கிடுமே.

5. பலியாக காணிக்கையாக 
  படைத்தேனே உமக்காக
  என்னை ஏற்றுக் கொள்ளும் 
     இயேசு ஆண்டவரே
  ஏழை நான் என்றும் உம் 
     அடிமை.

♥️10. இறுதி ஜெபமும் ஆசிர்வாதமும்.

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். 
தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர். 
2 கொரிந்தியர் 1:3-4

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️



Comments

Popular posts from this blog

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA