கிருபா பாத்திரம் vs கோபாக்கினை பாத்திரம்


கிருபா பாத்திரம் 
vs
கோபாக்கினை பாத்திரம் 

1. ஆரோக்கியமான துக்கம் :
உடன் சகோதரர்கள் இரட்சிக்கப்பட வேண்டும்..

எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது, 
ரோமர் 9:1

நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்தஆவிக்குள் என்மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது. 
ரோமர் 9:2

மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே. 
ரோமர் 9:3

2. இஸ்ரவேலர்கள் தேவனுடைய மகுடம்..ஆனாலும் இரட்சிப்பு அவசியம்..

அவர்கள் இஸ்ரவேலரே, புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும்,நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே, 
ரோமர் 9:4

பிதாக்கள் அவர்களுடையவர்களே, மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென். 
ரோமர் 9:5

3. மாம்சத்தின்படி அதாவது பிறப்பின்படி இஸ்ரவேலர்கள் உண்மையான தேவனுடைய பிள்ளைகள் அல்ல..

தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது, ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே. 
ரோமர் 9:6

அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே, ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே. 
ரோமர் 9:7

அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள். 
ரோமர் 9:8

4. தேவனுடைய தீர்மானம் நம்முடைய கிரியைகளினால் அல்ல..
அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு...

அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே. 
ரோமர் 9:9

இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது, 
ரோமர் 9:10

பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு, 
ரோமர் 9:11

மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது. 
ரோமர் 9:12

அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது. 
ரோமர் 9:13

ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே. 
ரோமர் 9:14

அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன்,எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மெல் உருக்கமாயிருப்பேன் என்றார். 
ரோமர் 9:15

ஆகையால் விரும்புகிறவனாலும்அல்ல, ஓடுகிறவனாலும்அல்ல, இரங்குகிறதேவனாலேயாம். 
ரோமர் 9:16

மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது. 
ரோமர் 9:17

ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். 
ரோமர் 9:18

இப்படியானால், அவர் இன்னும் ஏன்குற்றம்பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்துநிற்பவன் யார்? என்று என்னுடனே சொல்லுவாய். 
ரோமர் 9:19

5. கனமான பாத்திரம் 
கனவீனமான பாத்திரம்..
VESSEL OF HONOR 
VESSEL OF DISHONOR 

அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா? 
ரோமர் 9:20

மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? 
ரோமர் 9:21

தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், 
ரோமர் 9:22

தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன? 
ரோமர் 9:23

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

TWO SIDES OR SEAL OF SALVATION 
GOD'S SIDE & OUR SIDE

ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது.
 🧭கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், 
🧭கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது
2 தீமோத்தேயு 2:19

Nevertheless the foundation of God standeth sure, having this seal, 

🧭The Lord knoweth them that are his. And,
🧭 let every one that nameth the name of Christ depart from iniquity. 
2 Timothy 2:19

ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன்

 🫖பரிசுத்தமாக்கப்பட்டதும், 
🫖எஜமானுக்கு உபயோகமானதும்,
🫖 எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான 
🫖கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான். 
2 தீமோத்தேயு 2:21

 If a man therefore purge himself from these, He shall be a 
🫖vessel unto honour,
🫖 sanctified, and 
🫖meet for the master's use, and 
🫖prepared unto every good work. 
2 Timothy 2:21


கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: 
எரேமியா 18:1

நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ, அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார். 
எரேமியா 18:2

அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன், இதோ, அவன் திரிகையினாலே வனைந்துகொண்டிருந்தான். 
எரேமியா 18:3

குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று, அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான். 
எரேமியா 18:4

 And the vessel that He made of clay was marred in the hand of the potter: so He made it again another vessel, as seemed good to the potter to make it. 
Jeremiah 18:4

1. TO HOLD JESUS IN OUR VESSEL ( BODY )

 இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். 2 கொரிந்தியர் 4.7

உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: 
1 தெசலோனிக்கேயர் 4.5



♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

அவர் யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே. 
ரோமர் 9:24

அந்தப்படி: எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன். 
ரோமர் 9:25

நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள். என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது. 
ரோமர் 9:26

அல்லாமலும் இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள்மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள் என்றும், 
ரோமர் 9:27

அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார், கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான். 
ரோமர் 9:28

அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம். 
ரோமர் 9:29

இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினாலாகும் நீதியே. 
ரோமர் 9:30

நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை. 
ரோமர் 9:31

என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை, இடறுதற்கான கல்லில் இடறினார்கள். 
ரோமர் 9:32

இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன், அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று. 
ரோமர் 9:33

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA