அங்கே அவரை சிலுவையில் அறைந்தார்கள்..THERE THEY CRUCIFIED HIM..எங்கே?


அங்கே அவரை சிலுவையில் அறைந்தார்கள்..

THERE THEY CRUCIFIED HIM..

எங்கே?

கபாலஸ்தலம்..

கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது, 
மத்தேயு 27.33

கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய். 
மாற்கு 15.22

கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். 
லூக்கா 23.33

அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள். 
யோவான் 19.17


கபாலஸ்தலம் என்பது பைபிளின் புதிய ஏற்பாட்டின்படி, பழங்கால எருசலேம் நகரின் மதில்களுக்கு வெளியே இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட இடத்தைக் குறிக்கிறது. 

இந்த இடத்தைப் பற்றிய முக்கிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பெயர்க்காரணம்..

தலை ஓட்டு இடம்: 

'கபாலம்' என்றால் மண்டை ஓடு, 'ஸ்தலம்' என்றால் இடம் என்று பொருள்.
 எனவே, இது "மண்டை ஓட்டு இடம்" (Place of the Skull) என்று அழைக்கப்படுகிறது.

வேறு பெயர்கள்: 

இந்த இடம் அரமேய மொழியில் கொல்கொதா (Golgotha) என்றும், லத்தீன் மொழியில் கல்வாரி (Calvary) என்றும் அழைக்கப்படுகிறது.

லூக்கா மட்டும் இயேசு கிறிஸ்து தான் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு மொழிந்த இறுதி வார்த்தைகளை எழுதுகிறார்..

கவனியுங்கள்..

பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார். 
லூக்கா 23:31

மனித சுபாவம் நன்மையானவைகளை தள்ளி விடுவதும் தீமையானவைகளை ஏற்றுக்கொள்ளுவதுமே ஆகும்.

காரணம் ஒன்று தான் :
பாவ சுபாவம்.

🍒பாவம் கொடுங்கோலத்துவம் கொடுங்கோன்மை கொண்டது.
Tyranness

🍒பாவத்தின் ஆதாரமும் பிறப்பிடமும் கொடுங்கோலன்..
Tyrant 

🍒பாவத்தின் தன்மைகள் கணக்கில் அடங்காதது..


அதில் ஒரு சில காரியத்தை சொல்கிறேன்..

⭕1. பாவ சுபாவத்தை நாம் நிரல் படுத்த முடியாது.
Not Programmable

⭕2. பாவ விளைவுகளை நாம் நிதானிக்கவோ தீர்ப்பளிக்கவோ முடியாது..
Cannot be anticipated
Not Judgeable

பாவம்..சபலம்..whim
whimsical விளையாட்டானா 
whimsy திடீர் சுபாவம் 

⭕The greatest punishment the worrld ever known is CRUCIFIXION 

இது வரை உலகம் கண்டிராத அறிந்திராத கொடூர தண்டனை " சிலுவையில் அறைதல் " ஆகும்.

நீங்கள் இந்த பாவ பயங்கரத்தை ஒப்பிட்டு பார்ப்பதற்கு வேதம் 2 கொடூர நோய்களை குறிப்பிடுகிறது.

🧠1. குஷ்டரோகம் Leprocy 
🧠2. படர் நோய்..Cancer

ஒன்று சிந்தியுங்கள்..
இந்த இரண்டு நோய்களின் விளைவுகளை எந்த மருத்துவ விஞ்ஞான உலகமும் அனுமானிக்க முடியாது.
We cannot predict the severity and effects of the diseases..

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த கொடிய தண்டனையையும் அவமானத்தையும் அக்கிரமாக்காரன் பாவி என்கிற பெயரையும் தாங்கி சிலுவையில் தொங்குகிற பரிசுத்தர் மொழிந்த முதல் வார்த்தையில் 3 தேவனுடைய மாறாத தன்மைகள் அடங்கியிருக்கிறது..

💯1. His Goodness
💯2. His Holiness
💯3. His Sinlessness

1. கிறிஸ்துவின் நன்மைகள் 
2. கிறிஸ்துவின் பரிசுத்தம் 
3. கிறிஸ்துவின் பாவமில்லாத தன்மை 

இந்த வார்த்தையை கவனிக்கிறவர்களுக்கு..

💯1. He rebuked our badness
💯2. He shows our impurity
💯3. He reveals our sin..

1. நம் தீமையானவைகளை கர்த்தர் கடிந்து கொள்ளுகிறார்
2. நம் அசுத்தத்தை சுட்டிக் காட்டுகிறார் 
3. நம் பாவத்தை வெளிப்படுத்தகிறார்.

ஆராதனை சிந்தனை :

மேஜையில் பங்கு பெறும் முன்பு..

⚠️1. தன்னை தான் சோதித்து அறிவோம் 
1 கொரி 11:28

⚠️2. நம்மை நாமே நிதானித்து அறிவோம் 
1 கொரி 11:31

⚠️3. பந்தியில் பங்கு பெறும் அபாத்திரத்தை தவிர்ப்போம் 
1 கொரி 11:27

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA