✨✨✨✨✨✨✨"சபையில் ஒருவன்"✨✨✨✨✨✨✨TCBA @NIGHTWATCH


✨✨✨✨✨✨✨

"சபையில் ஒருவன்"

✨✨✨✨✨✨✨

TCBA @NIGHTWATCH

✨✨✨✨✨✨✨

⚠️தேவனுடைய படைப்பின் திட்டத்தில் 
" *ஒருவன்* " 
என்பது மிக முக்கியமான அம்சம் ஆகும்..

⚠️அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. . மல்கியா 2. 15a

⚠️ஒரே மனுஷன் ( முதல் ஆதாம் ) பாவம்..

⚠️ஒரே மனுஷன்
( இரண்டாம் ஆதாம் ) கீழ்ப்படிதல்..

⚠️தேவனுடைய அழைப்பும் தனி மனிதனை மையமாகவே வைத்து அமைந்திருக்கும்..

🍒ஆபிரகாம்.. 
🍒ஈசாக்கு
🍒யாக்கோபு
🍒மோசே..
🍒யோசுவா..
🍒பவுல்..

இன்னும் ஏராளம் வேதத்தில் காணலாம்..

⚠️சபையிலும் ஒருவன் என்கிற தனிப்பட்ட மனிதத்துவம் கவனத்துக்குரியது..

⚠️சபையில் ஒருவன் செய்கிற சில தவறுகள் கண்டிக்கப்பட வேண்டும்...

⚠️சில தவறுகளை பவுல் மற்றும் யாக்கோபு உணர்த்துகிறதை கவனித்து உணர்ந்து கொள்வோம்..

♥️1. ஒருவன்...

 பிரிவினைக்கு காரணம்..

நானோ?

 *ஒருவன்* நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களல்லவா? 
1 கொரிந்தியர் 3:4

♥️2. ஒருவன்..

ஒழுக்ககேட்டுக்கு காரணம்..

நானோ?

உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே. *ஒருவன்* தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே. அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே. 
1 கொரிந்தியர் 5:1

♥️3. ஒருவன்..

சகோதரனுக்கு எதிர் வழக்கு தொடுக்க காரணம்..

நானோ?

உங்களில் *ஒருவனுக்கு* வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகத் துணியாமல், அநீதிக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன? 
1 கொரிந்தியர் 6:1

♥️4. ஒருவன்..

குற்றத்தில் அகப்பட காரணம்..

நானோ?

சகோதரரே, *ஒருவன்* யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு. 
கலாத்தியர் 6:1

ஆகான் குறிக்கப்பட்டான்..
யோசுவா 7:18

♥️5. ஒருவன்..

சத்தியத்தை விட்டு விலக காரணம்..

நானோ?

சகோதரரே, உங்களில் *ஒருவன்* சத்தியத்தைவிட்டு விலகி மோசம் போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், 
தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். 
யாக்கோபு 5:19-20

♥️சகோதரரே...

🍒ஒருவன்..

தன்னை வஞ்சிக்க வேண்டாம்?

ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக. 

இவ்வுலகத்திலே உங்களில் *ஒருவன்* தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.
 1 கொரிந்தியர் 3:18

✨✨✨✨✨✨✨

shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
TCBA TUTICORIN 3

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST

GATHERING OF SAINTS CHURCH AS FAMILY 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA