✨✨✨✨✨✨✨♥️நீ சுகமாயிருக்கிறாயா? ♥️✨✨✨✨✨✨✨💯TCBA @ CHURCH TRUTHS 💯


✨✨✨✨✨✨✨

♥️நீ சுகமாயிருக்கிறாயா? ♥️

✨✨✨✨✨✨✨

💯TCBA @ CHURCH TRUTHS 💯

✨✨✨✨✨✨✨

📈 IS YOUR CHURCH HEALTHY OR DYING 📈

✨✨✨✨✨✨✨

🧡 சபை சோர்வடைந்து கொண்டிருக்கிறது என்பதற்கான 7 அறிகுறிகள்..

பல சபையின் பொறுப்புள்ள தேவனுடைய பிள்ளைகள் கவனிக்காத (அல்லது சொல்ல விரும்பாத) உண்மைகள்

✝️ ஒரு ஆரோக்கியமான சபை எப்போதும் சீஷர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும். மற்ற எல்லாம் அதிலிருந்தே புறப்படுகிறது.

1️⃣ ஆராதனை ஒரு நிகழ்ச்சியாக மாறிவிட்டது..
பங்கேற்பு அல்ல, பார்வை மட்டும்..

மக்கள் தேவனை ஆராதிப்பதை விட நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள்.

2️⃣ வருகையாளர்கள் ஒருமுறை வந்து மறைந்து விடுகிறார்கள்..

அவர்கள் இனி வராததை யாரும் கவனிக்கவில்லை..

 என்றால், அது வரவேற்பு மற்றும் உறவின் குறைபாட்டைக் காட்டுகிறது.

3️⃣ அதே மக்கள், அதே இருக்கைகளில், பல ஆண்டுகளாக
நிலைத்தன்மை நல்லது. 

ஆனால் வளர்ச்சியற்ற நிலை (தேக்கம்) ஆபத்தானது.

4️⃣ முரண்பாடுகளைத் தவிர்ப்பது வழக்கமாகிவிட்டது.

சத்தியமில்லாத ஒற்றுமை உண்மையான ஒற்றுமை அல்ல;

 அது வெறும் அமைதி மட்டுமே.

5️⃣ அடுத்த தலைமுறை காணப்படவில்லை.

இளைஞர்கள் இல்லாத சபைக்கு எதிர்காலம் இல்லை.

6️⃣ ஊழியங்கள் இருக்கின்றன,

 ஆனால் இலக்கு இல்லை..

பணிகளில் பிஸியாக இருப்பது, தேவனுக்கு உண்மையாய் இருப்பதற்கு சமம் அல்ல.

7️⃣ கீழ்ப்படிதலை விட சுகவாழ்வு முக்கியமாகிறது.

சுகவாழ்வு வழிநடத்தும்போது, தேவனுடைய அழைப்பு பின்தள்ளப்படுகிறது.

•••••••••••••••••••••••••

❤️ இன்னும் தாமதமாகவில்லை!
மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

✅ நேர்மையுடன் ஆரம்பியுங்கள்.

✅ மனந்திரும்புதலுடன் தொடருங்கள்.

✅ சீஷர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள்.

✅ தேவனுடைய வார்த்தைக்கு திரும்புங்கள்.

"போய்ச் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்." 
— மத்தேயு 28:19.

ஒரு ஆரோக்கியமான சபை எப்போதும் சீஷர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும். ✝️🙏

⭐⭐⭐⭐
கேள்வியை சிந்திப்போம் :

💯நீ அவளுக்கு எதிர்கொண்டு ஓடி, நீ சுகமாயிருக்கிறாயா? உன் புருஷன் சுகமாயிருக்கிறானா? அந்தப் பிள்ளை சுகமாயிருக்கிறதா என்று அவளிடத்தில் கேள் என்றான். அவள்: சுகந்தான் என்று சொல்லி, 
பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்தில் வந்து, அவன் காலைப் பிடித்துக்கொண்டாள், அப்பொழுது கேயாசி அவளை விலக்கிவிட வந்தான், தேவனுடைய மனுஷன்: அவளைத் தடுக்காதே, அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது, கர்த்தர் அதை எனக்கு அறிவியாமல் மறைத்துவைத்தார் என்றான். 
2 இராஜாக்கள் 4:26-27

@adapted & translated

🎶🎶🎶🎶🎶🎶🎶

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

shalomjjj@gmail.com 
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

GATHERING OF SAINTS CHURCH AS FAMILY 

🎶🎶🎶🎶🎶🎶

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA