⭕⭕⭕⭕⭕⭕விசுவாசிகளை ஏற்றுக் கொள்ளுதல்⭕⭕⭕⭕⭕⭕இது TCBA சபையின் சத்தியங்கள்பாகம் 22⭕⭕⭕⭕⭕⭕


⭕⭕⭕⭕⭕⭕
விசுவாசிகளை ஏற்றுக் கொள்ளுதல்
⭕⭕⭕⭕⭕⭕
இது TCBA சபையின் சத்தியங்கள்
பாகம் 22
⭕⭕⭕⭕⭕⭕

🧭விசுவாசிகளை சபையில் ஏற்றுக்கொள்வது என்பது சபையின் அடிப்படை நடைமுறை சத்தியங்களில் முக்கியமானது ஒன்றாகும்.

🧭முகவுரை..

 தேவனுடைய பிள்ளைகளை சபையின் ஐக்கியத்தில் ஏற்றுக்கொள்வதும், வரவேற்பதும் மிகவும் மகிழ்ச்சியான தொன்றாகும். பரிசுத்தவான்களின் ஐக்கியம் இனிமையானதும், தேவனால் உண்டானதுமாக இருக்கிறது.
 தேவ பிள்ளைகளை ஏற்றுக் கொள்வதில் சரியான வழிமுறைகள் கையாளப்பட்டு, யாதொரு துர் பிரயோகமும் செய்யாது, எல்லாவித ஒழுங்குகளுடன் செயல்படுவதில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

 🧭ஐக்கியம் என்பது கூட்டாளித் தன்மையுடையது.

 ஐக்கியம் என்பது கூட்டாளித் தன்மையுடன் எல்லாவற்றையும் பொதுவாக அனுபவிப்பதையே குறிக்கும். பரிசுத்தவான்களின் சபைக்கு வரவேற்கப்படுகிற ஒருவன், அவர்களுக்குரிய யாவற்றிலும் அவனும் உரிமையும் பங்கும் உடையவனாக ஏற்றுக் கொள்ளப்படுகிறான். அவர்களுக்குரிய சிலாக்கியம், சாட்சி, உத்தரவாதங்கள் யாவற்றிலும் அவனும் பங்காளியாகி விடுகிறான். கூட்டாளியின் நிலை, பகுதித் தன்மையுடையது அல்ல.
 அது முழு உரிமைக்கும் தகுதியுடையது. தேவன் விரும்பும் வண்ணமாக இருக்கிறது.
மனித சரீரமாக சபை உருவகித்திருக்கிறதில் 1 கொரி 12:12-27 ல் நாம் காண்கிறது போல, இந்த ஐக்கியம் அதிக இணக்கமாக உள்ளது. ஆச்சரியமான ஒத்துழைப்பையும், இணைப்பையும் அதில் நாம் பார்க்கிறோம். அவயம் ஒன்றும் அவசியம் இல்லாதது அல்ல. ஒன்று இல்லாது மற்றது இயங்காது. யாவும் ஒன்றாக இணைந்தே வேலை செய்கின்றன.
 முழு சரீரத்தின் நன்மைக்காகவே ஒவ்வொரு அவையமும் தன்னால் ஆனதை செய்கிறது.
 ஒன்று பாடுபட்டால் எல்லா அவயவமும் கூடப் பாடுபடும். ஒன்று பெருமை அடையும் போது எல்லாம் மகிழ்கின்றன. எல்லா அவயவங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கின்றன. பிரிவினை என்பது சரீரத்தில் இல்லை. எல்லா அவயவமு ம் தலையினாலே ஆளப்படுகிறது. சரீரம் சுபாவ நிலையில் இயங்கும்போது, நம் சரீரத்தில் உள்ள ஒரு கையோ அல்லது காலோ நம் சித்தத்தின்படி செய்ய மறுக்கிறது இல்லை. உடனடியான கீழ்ப்படிதலையே எப்பொழுதும் காண்கிறோம். கிறிஸ்துவின் அங்கமாயிருக்கிற நம் அனைவருக்கும் இது அருமையான பாடம் அல்லவா?

🧭ஆசீர்வதிக்கப்பட்ட ஐக்கியம்…

 அப்படிப்பட்ட ஆசீர்வாதமான ஐக்கியத்தில், ஒரு தேவபிள்ளை நிலைத்திருக்க வேண்டும் என்கிற நம்பிக்கையோடேயே ஏற்றுக் கொள்ளப்படுகிறான். அது சபையின் ஆரம்ப காலத்தில் இவ்விதமாகத்தான் இருந்தது. கிறிஸ்துவினிமித்தம் ஒருவன் யூத மார்க்கத்தையோ அல்லது வேறொரு மதத்தையோ விட்டுவிட்ட பொழுது, அவன் அதை முடிவான தீர்மானமாக விட்டுவிட்டதாகவே கருதப்பட்டது. ஒருவேளை அவன் பின்வாங்கி விடுவான் ஆனால் அது விசுவாசிகளுக்கு மிகவும் துக்கமானதாக இருந்தது.
அந்நாட்களில் அவர்கள் கிறிஸ்துவுக்காக முற்றிலும் பிரிந்து வேறுபட்டு வந்திருந்தார்கள். அப்படி வந்தவர்களுக்கு பலவித துன்பங்கள் நேரிட்டன.
 ஆனால் இது சபையை தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும், கர்த்தரிடத்தில் உண்மையுள்ளதாகவும் காத்துக் கொண்டது.
 இந்நாட்களில் நம்முடையே நிலவி வருகிற “குறுகிய ஐக்கியம்” “சிற்சிலவற்றில் ஐக்கியம்” என்பவைகள், ஆதிசபையாருக்கு விரோதமான ஒன்றாக இருந்திருக்கும். மேலும் “கர்த்தருடைய பந்திக்கு ஏற்றுக் கொள்ளுதல்” என்ற சொற்றொடர் வேத வசனங்களில் உபயோகிக்கப்படாத ஒன்றாகும். “சபையின் ஐக்கியத்திற்கே” ஒருவர் வரவேற்கப்படுகிறார்.
 இது சபையின் ஐக்கியம் என்கிறதில் அடங்கியிருக்கிற எல்லாவற்றையும் குறிக்கிறதாகவும், “அப்பம் பிட்குதல்” என்பதும் அதில் அடங்கினதொன்றாயுமாய் இருக்கிறது.

 🧭விசுவாசிகளை ஏற்றுக் கொள்வது எப்படி?

தேவனுக்கு மகிமை உண்டாக கிறிஸ்து நம்மை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். ரோமர் 15:5-7.
ஒருவரை சபையில் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு அவர் மெய்யாகவே கர்த்தருடையவரா, அவரை கிறிஸ்து ஏற்றுக் கொண்டிருக்கிறாரா என்ற நிச்சயம் இருக்க வேண்டும். இதுவே முக்கியமானது. இரண்டாவது அவனோ அவளோ மூல உபதேச சத்தியங்களில் குற்றமில்லாத விசுவாசம் உடையவர்களா என்பது அவசியமாகும்.
 மூன்றாவதாக அப்படிப்பட்டவர்களுடைய சன்மார்க்க நடத்தை, குற்றம் அற்றதாகவும், கண்டிக்கப்படாததாகவும் இருக்க வேண்டும். இவைகள் மிக முக்கியமானவைகள்.
 எப்படியும் இவைகளை கவனிக்காது இருந்து விடக்கூடாது.
 இவை யாவும் திருப்திகரமாக இருக்குமாயின், அப்படிப்பட்டவர் “கிறிஸ்துவில் விசுவாசியான பின்பு மூழ்கி ஞானஸ்நானம் எடுத்தவரா?”
 என்று கேட்கப்பட வேண்டும்.
 கர்த்தருடைய கட்டளையின்படி, ஆண்டவரோடு இணைக்கப்பட்டு கீழ்ப்படிந்து செய்யப்படும் இந்த செயலாகிய ஞானஸ்நானம், மனம் திரும்புதலுக்கு பின்பு நடைபெறுகிறது. அப்போஸ்தல நடபடி புத்தகத்தில் நாம் காண்கிறபடி சீஷர்கள் தங்களுக்கு போதிக்கப்பட்டிருந்த எல்லா போதனைகளுக்கும் முழுமையாக கீழ்ப்படிந்தார்கள் என்று காண்கிறோம். ஆதித்திருச்சபையில் ஞானஸ்நானம் பெறாத கிறிஸ்தவர்கள் இருந்ததில்லை. சிலர் சொல்லுகிறபடி ஞானஸ்நானம் இரட்சிப்புக்கு அவசியமானதொன்றாகவோ அல்லது சபைக்குள் நுழையும் ஒரு வாசலாகவோ இருக்கிறதில்லை. நாம் விசுவாசத்தினாலே மட்டும் இரட்சிக்கப்படுகிறோம்.
எபே 2:8-9 கிறிஸ்துவே வாசலாக உள்ளார்.
யோவான் 10:9.
எனினும் இந்த ஞானஸ்நானமாகிய நியமனம் நம் கீழ்படிதலுக்கு அத்தியந்த அவசியமானது. மனந்திரும்புதலுக்கு அடுத்தது.
 நாம் வாக்குவாதங்களுக்குள் செல்லாது ஆதித்திருசபையார், நிச்சயமாகவே அனுசரித்து வந்தது போலவே, இந்த எளிய நியமத்தை வேத வசனங்களில் காண்கிறபடியே கைக்கொள்ளவது ஞானம் ஆகும்.
அப் 2:41
அவனுடைய வார்த்தைகளைச் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றைய தினம் ஏறக்குறைய 3000 பேர் சபையிலே சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் என்று நாம் வாசிக்கிறோம். மனம் திரும்புதல், ஞானஸ்நானம், சபையின் சேர்த்துக் கொள்ளப்படுதல் இவையாவும் ஒன்றோடொன்று இணைந்து இருக்கிறன.
தேவன் இணைத்ததை மனிதன் எவனும் பிரிக்காதிருக்கக்கடவன் .


🧭காப்பாளர்களின் அவசியம்..

 மூப்பர்கள், மந்தையின் வழிகாட்டிகள் மட்டுமல்ல, அதன் காப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். பரிசுத்தமாவான்களின் சபைகளுக்குள் பக்கவழியாக நுழைந்து
( யூதா 1:4 ) விடக்கூடிய எண்ணற்றவர்களிடமிருந்தும், முடிவில்லா தொல்லைகள் தருபவர்களிடமிருந்தும், பெயரளவில் வெளியரங்கமாக வெறும் அறிக்கை மட்டும் செய்பவர்களிடமிருந்தும், கெட்ட சாட்சி உடையவர்களிடமிருந்தும் பரிசுத்தவான்களின் சபைகள் காக்கப்பட வேண்டும்.
 சகலமும் நல்லொழுக்கமாகவும் கிரமமாகவும் செய்யப்படக்கடவது.
1 கொரி 14:40
 என்கிற கட்டளையைப் பெற்றுள்ளோமே. ஆகையால் தெளிவாகவும் விவரமாகவும் அறியாமலிருக்கிற கிறிஸ்தவனெனப்படுகிற ஒருவனை சபையில் சேர்த்துக் கொள்வதைப் பற்றி, போதுமான அவகாசமும் தெய்வீக கவனமும் செலுத்த வேண்டியுள்ளது.
 “ஓர் சரீரத்தின்” அங்கமாகவே இருக்கிறார்கள் என்கிற நிலையின் அடிப்படையில், ஒரு கிறிஸ்தவனை சபையில் ஏற்றுக்கொள்வது மிக நேர்த்தியான ஒன்றாக காணப்பட்ட போதிலும், இந்நாட்களில் நிலவிவரும் நிலைமையைக் கவனிக்கும் போது, அவ்விதம் செய்வது அதிக தொல்லையைக் கொண்டு வருகிறதொன்றாகி யுள்ளது.
 நம்மைச் சுற்றிலும் இருக்கிற கிறிஸ்தவ மார்க்க பிரிவுகளை சேர்ந்த விசுவாசிகள் என்னப்படுகிறவர்களை நாம் கண்டனம் செய்ய விரும்புகிறதில்லை. அவர்கள் மேல் அன்பு செலுத்தவும் கூடுதல் மேன்மையான ஒரு நிலைக்கு அவர்களைக் கொண்டு வரவுமே விரும்புகிறோம் என்றபோதிலும், காலம் செல்லச் செல்ல அப்படிப்பட்டவர்களைப் பற்றிய காரியத்தில் நாம் அதிக கவனமாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
புதிதாக வேறு புறமத
( other denominations ) ஆசாரங்களிலிருந்து மனம் திரும்பி வருகிறவர்களைப் பற்றிய காரியம் மிகவும் எளிமையானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கிறது.
 நாம் அறிந்திருக்கிற மற்றொரு விசுவாச சபையில் இருந்து அறிமுகக் கடிதம்
( commendation letter ) கொண்டுவரும் ஒரு விசுவாசியை ஏற்றுக் கொள்கிற காரியமும், பொதுவாக திருப்திகரமாகவே உள்ளது.
சபையில் அக்கடிதம் வாசிக்கப்பட்டு, அல்லது அறிவிக்கப்பட்டு அந்த புதிய அறியப்படாத விசுவாசி சேர்த்துக் கொள்ளப்படுகிறான்.

 🧭சபை ஏற்றுக் கொள்கிறது..

 ஒரு விசுவாசியை சபையில் சேர்த்துக் கொள்ளுகிற காரியம் சபையின் மூப்பர்களுக்கு முன் வருகிறது.
அவர்கள் தகுதி என்று கண்டு பரிந்துரைத்தல் பேரில், சபை அப்படிப்பட்டவர்களை ஏற்றுக் கொள்கிறது.
ஆகவே சரியாக கூறுவோமானால், ஒருவனை ஏற்றுக் கொள்ளுதல் என்பது மூப்பர்களாலே செய்யப்படாமல், முழு சபையினாலே செய்யப்படுகிறது.
 கர்த்தருடைய பந்திக்கு ஒருவரைக் கூட்டிக்கொண்டு வர எந்த ஒரு தனி விசுவாசிக்கும் உரிமை கிடையாது. மேலும் கர்த்தருடைய பந்தியில் ஒருவரை சேர்க்கவும், விலக்கவும் எவருக்கும் அதிகாரம் இல்லை.
 அவ்விதம் ஒருவனை ஏற்றுக் கொள்வதில் யாதொரு தடை இருக்குமானால், அதை நீக்குவதற்காக அவ்விசுவாசி ஏற்ற ஒரு சாட்சியை கொண்டுவரும் காலம் வரை காத்திருப்பது நல்லது. அறியப்படாத அந்நியனாக இருக்கிற ஒருவனுடைய காரியத்தில் இவ்விதமாக நடந்து கொள்வது ஞானம் ஆகும்.

🧭ஒரே விதமான விதிகளை ஏற்படுத்த முடியாது..

 எல்லாவித சந்தர்ப்பங்களிலும், சூழ்நிலைகளிலும் பொருந்தக்கூடிய ஒரே விதிகளையும், சட்டங்களையும் ஏற்படுத்துவது என்பது சரியாகாது.
 ஏனெனில் சில வேலைகளில் மிக பிரத்தியேக நிலையில் உள்ள ஒரு சூழ்நிலை நம்முன் வரும்போது, அதைப்பற்றிய சகல காரியங்களையும் தனிப்பட்ட முறையில் தீர்மானம் செய்ய வேண்டி வரும்.
 இதுவரை மேலே கூறப்பட்ட யாவும், விசுவாசிகளை சபையில் ஏற்றுக் கொள்வதைப் பற்றிய பொதுவான விதிகள் ஆகும்.
தர்க்கங்களுக்கு இடம் தரும் பொருள்களைப் பற்றிய விவரங்களை இங்கு நாம் எடுத்துக்கொள்ளவில்லை.

🧭நிறைவுரை..

 சபை ஐக்கியத்தைப் பற்றிய இக்காரியத்தில் நாம் சிறிது கண்டிப்பாக இருக்கிறோம் என்று யாராவது எண்ணினால், அப்படிப்பட்டவர்களுக்கு நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது யாதெனில், கர்த்தர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிற எவரையும் விலக்கி வைப்பது நம்முடைய விருப்பம் அல்ல.
 ஆயினும் நாட்கள் செல்லச் செல்ல அதிக கேடான நிலை பெருகி வருகிற இக்காலத்தில், நாம் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதே நமது நோக்கமாகும்.
 “ஒருவன் மேலும் சீக்கிரமாய் கைகளை வைக்காதே”
1 தீமோ 5:22
 என்பதையே நாம் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.
….தொடரும்..
@ பிராங்க்ளின் பெர்குசன்
⭕⭕⭕⭕⭕⭕
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
GATHERING OF SAINTS CHURCH AS FAMILY

shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
⭕⭕⭕⭕⭕⭕


Writing
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
விசுவாசிகளை ஏற்றுக்கொள்ளுதல்
(Receiving Believers into Church Fellowship)
TCBA சபையின் சத்தியங்கள் – பாகம் 22
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

📖 முக்கிய வசனம்
"தேவனுக்கு மகிமை உண்டாக கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்." ரோமர் 15:7

🏛️ அறிமுகம்.

தேவனுடைய பிள்ளைகளை சபையின் ஐக்கியத்தில் வரவேற்பதும், ஏற்றுக்கொள்வதும், அவர்களோடு கர்த்தருக்குள் இணைந்து நடப்பதும் சபையின் மிக முக்கியமான பொறுப்புகளில் ஒன்றாகும்.
பரிசுத்தவான்களின் ஐக்கியம்:
🤝 தேவனால் உண்டாக்கப்பட்டது
🤝 கிறிஸ்துவில் நிலைநிறுத்தப்பட்டது
🤝 பரிசுத்த ஆவியால் நடத்தப்படுகிறது
🤝 அன்பு, சத்தியம், ஒழுங்கு ஆகியவற்றின் மீது கட்டப்படுகிறது
ஆகையால், சபையில் ஒருவரை ஏற்றுக்கொள்வது வெறும் பெயர் பதிவு அல்லது வருகை அனுமதி அல்ல; அது தேவனுடைய குடும்பத்தில் ஒருவரை கூட்டாளியாக ஏற்றுக்கொள்ளும் பரிசுத்தமான செயல் ஆகும்.

🤝 ஐக்கியம் என்பது கூட்டாளித்தனம்

"ஐக்கியம்" (Fellowship) என்ற வார்த்தை வெறும் ஒன்றாக கூடுவதை மட்டும் குறிக்காது.
அது:
✅ ஒரே வாழ்க்கையைப் பகிர்தல்
✅ ஒரே நம்பிக்கையைப் பகிர்தல்
✅ ஒரே ஆண்டவருக்குக் கீழ்ப்படிதல்
✅ ஒரே ஆசீர்வாதங்களில் பங்குகொள்ளுதல்
✅ ஒருவரின் பாரத்தை மற்றொருவர் சுமத்தல்
என்பவைகளைக் குறிக்கிறது.
ஒரு விசுவாசி சபையில் ஏற்றுக்கொள்ளப்படும்போது,
🔹 சபையின் ஜெபங்களில் பங்காளியாகிறார்
🔹 சபையின் பொறுப்புகளில் பங்காளியாகிறார்
🔹 சபையின் ஆசீர்வாதங்களில் பங்காளியாகிறார்
🔹 சபையின் சாட்சியில் பங்காளியாகிறார்
🔹 சபையின் துக்கங்களிலும் சந்தோஷங்களிலும் பங்காளியாகிறார்
🫂 ஒரே சரீரம் – பல அவயவங்கள்
📖 1 கொரிந்தியர் 12:12-27
வேதாகமம் சபையை "கிறிஸ்துவின் சரீரம்" என்று அழைக்கிறது.
அதில்:
👁️ கண்
👂 காது
✋ கை
🦶 கால்
❤️ இதயம்
போன்ற பல உறுப்புகள் இருப்பதுபோல, சபையிலும் பல்வேறு விசுவாசிகள் இருக்கிறார்கள்.
இந்த உருவகத்தின் பாடங்கள்
✅ எந்த அவயவமும் தேவையற்றதல்ல
✅ ஒவ்வொரு விசுவாசியும் மதிப்புமிக்கவர்
✅ ஒருவர் இல்லாமல் மற்றவர் முழுமையடைய முடியாது
✅ எல்லோரும் ஒன்றாக செயல்பட வேண்டும்
✅ கிறிஸ்துவே தலையாக இருக்க வேண்டும்
📖 "ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்."
🌿 ஆசீர்வதிக்கப்பட்ட ஐக்கியம்
ஆதித் திருச்சபையின் காலத்தில்,
ஒருவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால்,
✔ பழைய மத வாழ்க்கையை விட்டு வந்தார்
✔ உலகத்தின் எதிர்ப்பை ஏற்றார்
✔ துன்பங்களைச் சகித்தார்
✔ கிறிஸ்துவுக்காக வாழத் தீர்மானித்தார்
என்று கருதப்பட்டது.
அதனால் சபை:
✨ தூய்மையாக இருந்தது
✨ உண்மையாக இருந்தது
✨ ஆரோக்கியமாக இருந்தது
✨ கர்த்தருக்குப் பிரியமானதாக இருந்தது

🍞 "கர்த்தருடைய பந்தி" மட்டும் அல்ல
இன்று சிலர்,
"கர்த்தருடைய பந்திக்கு அனுமதி"
என்பதை முக்கியமாக நினைக்கிறார்கள்.
ஆனால் வேதாகமக் கொள்கை அதைவிட உயர்ந்தது.

ஒருவர்:
❌ வெறும் அப்பம் பிட்குதலுக்காக
ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
✅ சபையின் முழு ஐக்கியத்திற்காகவே
ஏற்றுக்கொள்ளப்படுகிறார்.
அப்பம் பிட்குதலும் அதில் ஒரு பகுதியாகும்.

📋 சபை ஏற்றுக்கொள்ளும் அடிப்படை நிபந்தனைகள்

1️⃣ கிறிஸ்துவுக்குரியவர் என்பதை உறுதிப்படுத்தல்
முதலில்,
அவர் உண்மையாக மனந்திரும்பியவரா?
இரட்சிக்கப்பட்டவரா?
கிறிஸ்துவால் ஏற்றுக்கொள்ளப்பட்டவரா?
என்பது அறியப்பட வேண்டும்.
📖 ரோமர் 15:7

2️⃣ சுத்தமான உபதேச நம்பிக்கை
அவர்:
✅ அடிப்படை வேதாகம சத்தியங்களில்
நிலைத்திருக்கிறாரா?
✅ தவறான போதனைகளில் இல்லையா?
என்பது பரிசோதிக்கப்பட வேண்டும்.

3️⃣ சாட்சியான வாழ்க்கை
ஒரு விசுவாசியின் வாழ்க்கை:
✔ நேர்மையானதாக
✔ பரிசுத்தமானதாக
✔ குற்றமற்றதாக
✔ கண்டிக்கப்படாததாக
இருக்க வேண்டும்.

4️⃣ விசுவாசத்திற்கு பின் ஞானஸ்நானம்
சபை கேட்க வேண்டிய அடுத்த கேள்வி:
"கிறிஸ்துவை விசுவாசித்த பிறகு ஞானஸ்நானம் பெற்றவரா?"
💧 ஞானஸ்நானத்தின் முக்கியத்துவம்
வேதாகமத்தின் படி:
மனந்திரும்புதல் ➜ விசுவாசம் ➜ ஞானஸ்நானம் ➜ சபை ஐக்கியம்
என்ற ஒழுங்கை நாம் காண்கிறோம்.
📖 அப்போஸ்தலர் 2:41
"வார்த்தையை ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்; பின்னர் சபையில் சேர்க்கப்பட்டார்கள்."
❌ ஞானஸ்நானம் என்ன அல்ல?
❌ இரட்சிப்பின் காரணம் அல்ல
❌ பாவமன்னிப்பின் மூல காரணம் அல்ல
❌ சபையின் வாசல் அல்ல
✅ ஞானஸ்நானம் என்ன?
✅ ஆண்டவருக்குக் கீழ்ப்படிதல்
✅ விசுவாசத்தின் அறிக்கை
✅ கிறிஸ்துவோடு அடையாளப்படுத்தல்
✅ மனந்திரும்புதலின் வெளிப்பாடு
📖 எபேசியர் 2:8-9
📖 யோவான் 10:9

🛡️ மூப்பர்களின் அவசியம்..

சபையின் மூப்பர்கள்:
👨‍💼 வழிகாட்டிகள்
👨‍💼 மேய்ப்பர்கள்
👨‍💼 காப்பாளர்கள்
👨‍💼 போதகர்கள்
ஆகியவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் சபையை:
⚠️ தவறான போதனைகளிலிருந்து
⚠️ போலி விசுவாசிகளிலிருந்து
⚠️ குழப்பங்களை ஏற்படுத்துவோரிடமிருந்து
⚠️ கெட்ட சாட்சியுள்ளவர்களிடமிருந்து
பாதுகாக்க வேண்டும்.
📖 யூதா 1:4
📖 1 கொரிந்தியர் 14:40
"சகலமும் நல்லொழுக்கமாகவும் கிரமமாகவும் செய்யப்படக்கடவது."
📜 அறிமுகக் கடிதத்தின் நன்மை
ஒரு விசுவாசி:
வேறொரு விசுவாச சபையிலிருந்து வந்தால்,
அறிமுகக் கடிதம் (Commendation Letter)
மிகுந்த உதவியாக இருக்கும்.
அதன் மூலம்:
✅ அவரின் சாட்சி உறுதிப்படுத்தப்படுகிறது
✅ அவரின் விசுவாசம் அறியப்படுகிறது
✅ சபை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ள முடிகிறது

🏛️ சபை ஏற்றுக்கொள்கிறது
ஒருவரை ஏற்றுக்கொள்வது:
❌ ஒரு தனி விசுவாசியின் முடிவு அல்ல
❌ ஒரு தனி மூப்பரின் முடிவு அல்ல
❌ ஒரு குடும்பத்தின் முடிவு அல்ல
மாறாக,

✅ மூப்பர்கள் பரிந்துரைக்கிறார்கள்
✅ முழு சபையும் ஏற்றுக்கொள்கிறது
இதுவே வேதாகம ஒழுங்கு.
⚖️ எல்லா சூழ்நிலைகளுக்கும் ஒரே விதி இல்லை
சில விசேஷ சூழ்நிலைகளில்:
🔹 கூடுதல் விசாரணை தேவைப்படலாம்
🔹 அதிக ஜெபம் தேவைப்படலாம்
🔹 அதிக பொறுமை தேவைப்படலாம்
🔹 சாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும்
ஆகவே ஒவ்வொரு சூழ்நிலையும் வேதாகம ஞானத்தோடு கையாளப்பட வேண்டும்.
📢 இன்றைய காலத்தின் சவால்
இன்றைய கிறிஸ்தவ உலகில்:
⚠️ பல பிரிவுகள்
⚠️ பல போதனைகள்
⚠️ பல குழப்பங்கள்
⚠️ பல தவறான சாட்சிகள்
இருப்பதால்,
சபை அதிக கவனத்தோடும் ஜெபத்தோடும் செயல்பட வேண்டியுள்ளது.

📝 நிறைவுரை..

கர்த்தர் ஏற்றுக்கொள்ள விரும்புகிற எவரையும் விலக்கிவைப்பது சபையின் நோக்கம் அல்ல.
ஆனால்,
🛡️ சபையின் தூய்மையை காக்க
🛡️ சத்தியத்தை காக்க
🛡️ பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை காக்க
🛡️ கர்த்தரின் மகிமையை காக்க
வேதாகம ஒழுங்குகள் பின்பற்றப்பட வேண்டும்.
📖 1 தீமோத்தேயு 5:22
"ஒருவன் மேலும் சீக்கிரமாய்க் கைகளை வைக்காதே."

✨ முக்கிய சுருக்கம்..

✅ கிறிஸ்து ஏற்றுக்கொண்டவர்களை சபையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்
✅ ஐக்கியம் என்பது கூட்டாளித்தனம்
✅ உண்மையான இரட்சிப்பு அவசியம்
✅ சுத்தமான உபதேசம் அவசியம்
✅ நல்ல சாட்சி அவசியம்
✅ விசுவாசத்திற்கு பின் ஞானஸ்நானம் அவசியம்
✅ மூப்பர்கள் சபையைக் காக்க வேண்டும்
✅ சபை முழுமையாக ஏற்றுக்கொள்கிறது
✅ எல்லாவற்றிலும் ஒழுங்கும் ஞானமும் தேவை
🕊️ "கிறிஸ்துவின் சரீரத்தின் ஐக்கியம் பரிசுத்தமும் ஒழுங்கும் அன்பும் நிறைந்ததாக இருக்க வேண்டும்."

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA