ரூத் புத்தகம் 🍒🍒🍒இங்கே தான் தேவனுடைய அநாதி திட்டம் நிறைவேறுகிறது..🍒🍒PROPERTY & POSTERITY🍒🍒🍒
✨✨✨✨✨✨✨
சபை ஜெபத்தில் தியானித்த வேத பகுதி..
ரூத் 4:1-10
இன்று சிந்தித்த
முக்கிய நபர்கள்..
🍒1. போவாஸ்..யூதன்
🍒2. சுதந்திரவாளி..யூதன்
🍒3. நகோமி..யூத பெண்
🍒4. ரூத்..மோவாபிய பெண்..
போவாஸ்..ரூத் தை திருமணம் செய்ய மனதில் முடிவு செய்கிறான்.
யூத வழக்கத்தின்படி நெருங்கிய சுதந்திரவாளி தான் திருமணம் செய்ய வேண்டும்.
அதற்காக போவாஸ் அந்த நெருங்கிய சுதந்திரவாளிக்கு 2 நிபந்தனைகள் முன் வைக்கிறான்..
🌸1. Property..வயல்
🌸2. Posterity..சுதந்திரம்..
இந்த வசனங்களை கவனியுங்கள்..
🍒
Property..
வயலை வாங்க நிபந்தனை முன் மொழிகிறான் போவாஸ் ..
ஆகையால், நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் என்றிருந்தேன். நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால், மீட்டுக்கொள்ளும். அதை மீட்டுக்கொள்ள மனதில்லாதிருந்தால், நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும். உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறோருவனும் இல்லை என்றான்.
🍒
சுதந்திரவாளி அதை ஏற்றுக்கொள்ளுகிறான்..
அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
ரூத் 4:4
🍒
Posterity
போவாஸ்..
இப்பொழுது மரித்த ரூத்தின் புருஷன் மக்லோன் பெயரை நிலைநிறுத்த வேண்டும் என்கிற சுதந்திரம் என்கிற நிபந்தனை வைக்கிறான்.
அப்பொழுது போவாஸ்: நீர் நகோமியின் கையிலே அந்த வயல்நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப்பண்ணும்படிக்கு, அதை மரித்தவன் மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத் கையிலும் வாங்கவேண்டியது என்றான்.
ரூத் 4:5
🍒
சுதந்திரவாளி இரண்டையும் Property & Posterity ஏற்றுக்கொள்ள மறுக்கிறான்..
அப்பொழுது அந்தச் சுதந்தரவாளி: நான் என் சுதந்தரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன். நான் மீட்கத்தக்கதை நீர் மீட்டுக்கொள்ளும். நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான்.
ரூத் 4:6
🍒
இங்கே தான் தேவனுடைய அநாதி திட்டம் நிறைவேறுகிறது..
போவாஸ் நகோமி யின் நிலத்தை Property வாங்குகிறான்..
அப்பொழுது போவாஸ் மூப்பரையும் சகல ஜனங்களையும் நோக்கி: எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி.
ரூத் 4:9
🍒
போவாஸ் ரூத்தையும் திருமணம் செய்ய Posterity தீர்மானிக்கிறான்..
இதுவுமல்லாமல், மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும், ஊராருக்குள்ளும், அவனுடைய பேர் அற்றுப்போகாமல், மரித்தவனுடைய சுதந்தரத்திலே அவன் பேரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன். அதற்கு நீங்கள் இன்றைதினம் நீங்கள் சாட்சி என்றான்.
ரூத் 4:10
தாவீதின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து பூமியில் பிறப்பதற்கு போவாஸ் தீர்மானம் காரணமாகிறது..
⚠️⚠️தொடரும்
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 3
♥️♥️♥️♥️♥️♥️♥️
Comments
Post a Comment