இரத்தமும் தண்ணீரும்..( காளை வெள்ளட்டுக்கடா இரத்தம் + கிடாரியின் சாம்பலுடன் தீட்டுக்கழிக்கும் ஊற்று ஜலம் )
சகோதர சபையின் ஆராதனை 3 பகுதிகளை கொண்டது..
1. சபை கூடி வருதல்
2. கிறிஸ்துவின் பாடு மரணம் நினைவு கூறுதல்
3. அப்பம் பிட்குதல்..
இதன் அடிப்படையில் ஸ்தோத்திரம் செய்து கர்த்தரை மகிமைப்படுத்துகிறோம்..
இரத்தமும் தண்ணீரும்..
( காளை வெள்ளட்டுக்கடா இரத்தம் + கிடாரியின் சாம்பலுடன் தீட்டுக்கழிக்கும் ஊற்று ஜலம் )
இரத்தமும் தண்ணீரும்..
தியான வசனங்கள் :
ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான், உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.
யோவான் 19:34
எப்படியெனில், மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து, புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து:
எபிரேயர் 9:19
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
எபிரேயர் 9:12
இரத்தமும் தீட்டுக்கழிக்கும் ஜலம் கலந்த கிடாரியின் சாம்பல்..
அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும்,
தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால்,
எபிரேயர் 9:13
நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!
எபிரேயர் 9:14
சிவப்பு கிடாரியின் பலி..
RED HEIFER SACRIFICE..
எண்ணாகமம் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஒரே பலி..
இது பாவ நிவாரணம் பெற செலுத்தக்கூடிய பலி அல்ல..
இது பின் மாற்றம் அடைந்தவர்கள் அதாவது தீட்டுப்பட்டவர்கள் மீண்டும் பரிசுத்தம் அடைய தேவனால் நியமிக்கப்பட்ட ஒரே பலி..
1. சடங்கு ரீதியான தூய்மை (Ritual Purification)யூத சட்டங்களின்படி, இறந்த உடலைத் தொடுவதால் ஏற்படும் தீட்டு அல்லது அசுத்தம் (Tum'at Met) மிகக் கடுமையானதாகக் கருதப்படுகிறது.
இந்த அசுத்தத்தை நீக்கி, ஒருவரை முற்றிலும் தூய்மைப்படுத்த சிவப்பு கிடாரியின் சாம்பல் கலந்த நீர் மட்டுமே பயன்படும்.
இந்தச் சாம்பல் இல்லாமல், யூதர்களால் எந்தவொரு புனிதமான ஆலய வழிபாட்டையும் செய்ய முடியாது.
இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திர பயணத்தில் மரணம்..
வனாந்தரப் பயணத்தில் விவிலிய (பைபிள்) கணக்கீடுகளின்படி, இஸ்ரவேல் ஜனங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 85 முதல் 100-க்கும் மேற்பட்டோர் மரித்திருக்கக் கூடும் எனக் கணக்கிடப்படுகிறது.
நேரடியாக இத்தனை பேர்தான் மரித்தார்கள் என்ற எண்ணிக்கை பைபிளில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், வேதாகமக் குறிப்புகளைக் கொண்டு அறிஞர்கள் இதை இவ்வாறு கணக்கிடுகிறார்கள்:
கணக்கீட்டின் அடிப்படை:மரித்தவர்களின் மொத்த எண்ணிக்கை: எகிப்திலிருந்து புறப்பட்ட 20 வயதுக்கு மேற்பட்டவர்களில், யோசுவா மற்றும் காலேப் தவிர மற்ற அனைவரும் வனாந்தரத்திலேயே மரிப்பார்கள் என்று தேவன் கூறினார் (எண்ணாகமம் 14:29-30).
முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, யுத்தம் செய்யத்தக்க ஆண்களின் எண்ணிக்கை மட்டுமே 6,03,550 ஆகும் (எண்ணாகமம் 1:46).
பெண்களின் எண்ணிக்கை: ஆண்களுக்கு நிகராக பெண்களையும் சேர்த்தால், மரித்த பெரியவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 12 லட்சம் (1.2 மில்லியன்) ஆக இருக்கும். லேவியர்கள் மற்றும் பிறரையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.
ஒரு நாளுக்கான மரண விகிதம்:
38 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரையிலான இந்தத் தண்டனைக் காலத்தில், இந்த பெருந்திரளான மக்கள் மடிந்ததைக் கணக்கிடும்போது:
வருடத்திற்கு: சராசரியாக 30,000 முதல் 37,500 பேர் வரை மரித்திருப்பார்கள்.
ஒரு நாளைக்கு: சராசரியாக 85 முதல் 100-க்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்திருக்கும்.
இது ஒரு பொதுவான சராசரி கணக்கு மட்டுமே.
இதைத் தவிர, இஸ்ரவேலர்கள் பாவம் செய்த சில குறிப்பிட்ட நாட்களில் (உதாரணமாக: கொள்ளைநோய், கிளர்ச்சிகள், மற்றும் விக்கிரகாராதனை செய்த காலங்களில்) ஒரே நாளில் 14,700 பேர் (எண்ணாகமம் 16:49) மற்றும் 24,000 பேர் (எண்ணாகமம் 25:9) வரை மரித்த அசாதாரண சம்பவங்களும் வனாந்தரத்தில் நடந்துள்ளன
சிவப்பு கிடாரி பலியின் பிரமாணம்..
கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
எண்ணாகமம் 19:1
கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது:
✨ பழுதற்றதும்
✨ஊனமில்லாததும்
✨நுகத்தடிக்கு உட்படாததுமாகிய
✨ சிவப்பான ஒரு கிடாரியை..
உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள்.
எண்ணாகமம் 19:2
அதை எலெயாசார் என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக்கொடுங்கள், அவன் அதைப் பாளயத்துக்கு வெளியே கொண்டுபோகக்கடவன்,; அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது.
எண்ணாகமம் 19:3
அப்பொழுது ஆசாரியனாகிய எலெயாசார் தன் விரலினால் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு எதிராக ஏழுதரம் தெளிக்கக்கடவன்.
எண்ணாகமம் 19:4
பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்,; அதின் தோலும் அதின் மாம்சமும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும்.
எண்ணாகமம் 19:5
அப்பொழுது ஆசாரியன் கேதுருக் கட்டையையும் ஈசோப்பையும் சிவப்பு நூலையும் எடுத்து, கிடாரி எரிக்கப்படுகிற நெருப்பின் நடுவிலே போடக்கடவன்.
எண்ணாகமம் 19:6
சுத்தமாயிருக்கிற ஒருவன் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு, பாளயத்திற்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டிவைக்கக்கடவன்,; அது இஸ்ரவேல் புத்திரரின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் ஜலத்துக்கென்று காத்து வைக்கப்படவேண்டும், அது பாவத்தைப் பரிகரிக்கும்.
எண்ணாகமம் 19:9
ஆகையால் தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதின்மேல் ஊற்று ஜலம் வார்க்கவேண்டும்.
எண்ணாகமம் 19:17
தீட்டுப்பட்டிருக்கிறவன் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதிருந்தால், அவன் சபையில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான், அவன் கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான்,; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருக்கிறான்.
எண்ணாகமம் 19:20
இரத்தமும் ஊற்று நீரும்..
பின்பு, ஆசாரியன் ஒன்றை ஒரு மண்பாண்த்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொல்லச்சொல்லி,
லேவியராகமம் 14:5
உயிருள்ள குருவியையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, இவைகளையும் உயிருள்ள குருவியையும் ஊற்றுநீர்மேல் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலே தோய்த்து,
லேவியராகமம் 14:6
குஷ்டம் நீங்கச் சுத்திகரிக்கப்படுகிறவன்மேல் ஏழுதரம் தெளித்து, அவனைச் சுத்தம்பண்ணி, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடக்கடவன்.
லேவியராகமம் 14:7
இரத்தம் சிந்துதலினால் சபையை கிறிஸ்து மீட்டுகொண்டார்..
ஒரே தரம்..
தண்ணீர் முழுக்கினால் சபையை கிறிஸ்து சுத்திகரிக்கிறார்.
அனுதினமும்..
வாரத்தின் முதல் நாள்..
இது ஓய்வு நாள் அல்ல
இது கர்த்தருடைய நாள் அல்ல
இது கிறிஸ்துவின் நாள் அல்ல..
இது வாரத்தின் முதல் நாள்..
அப்பம் பிட்கும்படி கூடி வரும் நாள்..
தனிப்பட்ட ஆராதனை
நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள்.
யாத்திராகமம் 12:3
சபை ஆராதனை
ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற்போனால், அவனும் அவன் சமீபத்திலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும். அவனவன் புசிப்புக்குத்தக்கதாக இலக்கம் பார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
யாத்திராகமம் 12:4
இரத்தத்தினால் :
1. பாவ மன்னிப்பாகிய மீட்பு
2. சமாதானம்
3. சமீபம்
இன்னும் ஏராளம்..
இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
ரோமர் 5:9
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
எபேசியர் 1:7
முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
எபேசியர் 2:13
(குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
கொலோசெயர் 1:14
அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.
கொலோசெயர் 1:20
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
எபிரேயர் 9:12
நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும். இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
எபிரேயர் 9:22
அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
எபிரேயர் 10:20
அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.
எபிரேயர் 13:12
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்,
எபிரேயர் 13:20
குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
1 பேதுரு 1:19
நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களறநம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
வெளிப்படுத்தினத விசேஷம் 1:6
தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர், ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
வெளிப்படுத்தினத விசேஷம் 5:9
தண்ணீர்...
அனுதின சுத்திகரிப்பு
பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.
யோவான் 13.5
தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
எபேசியர் 5.26
கிறிஸ்துவின் இரத்தத்தினாலே மீட்கப்பட்ட
இரட்சிப்பட்ட நாம்
திருவசனத்தினாலே கழுவி சுத்திகரிக்கப்பட்ட தேவனுடைய சபையாக இந்த பந்தியில் பங்கு
பெறுவோம்..
சிந்தித்து பங்கு பெறுவோம்..
இப்படியிருக்க,
எவன் அபாத்திரமாய் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.
1 கொரிந்தியர் 11:27
எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
1 கொரிந்தியர் 11:28
என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஐனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஐனபானம்பண்ணுகிறான்.
1 கொரிந்தியர் 11:29
இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள். அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.
1 கொரிந்தியர் 11:30
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.
1 கொரிந்தியர் 11:31
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
Comments
Post a Comment