♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ஆபிரகாம்..ஈசாக்கு..யாக்கோபு ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️TCBA@MORNDEV♥️♥️♥️♥️♥️♥️♥️♥️


♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

ஆபிரகாம்..ஈசாக்கு..
யாக்கோபு 

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

TCBA@MORNDEV

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

⛪ஆபிரகாம்..
பலிபீடங்களின் மனிதர் 

விசுவாசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஆபிரகாம், தான் சென்ற இடமெல்லாம் கடவுளுக்கு பலிபீடங்களை எழுப்பியவர்.

 கானான் தேசத்தில் அவர் தனது வாழ்க்கையை "பலிபீடமும் கூடாரமும்" (Altar and Tent) என்ற கொள்கையின் அடிப்படையில்தான் அமைத்திருந்தார்.

ஆபிரகாமின் முக்கிய பலிபீடங்கள்:

🍒1. சீகேம் (Shechem):

 ஆபிரகாம் கடவுளின் வாக்குறுதியைப் பெற்ற பிறகு கட்டிய முதல் பலிபீடம். இது தேவ தரிசனத்திற்கான இடமாக இருந்தது.

🍒2. பெத்தேல் (Bethel):

 இங்கு பலிபீடத்தை அமைத்து, "கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டார்".

🍒3. எப்ரோன் (Hebron):

 மம்ரே என்ற இடத்தில் கர்த்தருக்கு பலிபீடம் கட்டினார். இது முழுமையான ஐக்கியத்தைக் குறிக்கிறது.மோரியா மலை (Mount Moriah): தனது ஒரே மகன் ஈசாக்கைப் பலியிடக் கடவுள் கட்டளையிட்டபோது, விசுவாசத்தோடு கட்டிய இறுதி மற்றும் மிகச் சிறந்த பலிபீடம் இது.

✨✨✨✨✨✨✨✨

⛪ஈசாக்கு 
'துரவுகளின் மனிதன்'

என்று அழைக்கப்படுபவர் ஈசாக்கு ஆவார்.
விவிலியத்தில் (பைபிள்) குறிப்பிடப்படும் ஆபிரகாமின் மகனான ஈசாக்கு, தன் வாழ்நாளில் நீருற்றுகளைத் தேடி பல துரவுகளை (கிணறுகளை) வெட்டியதாலும், அவற்றை பிறர் தகர்த்தபோதினும் தொடர்ந்து புதிய துரவுகளை வெட்டி பெருவெற்றி கண்டதாலும் இப்பெயரால் அறியப்படுகிறார்.
ஈசாக்கின் துரவுகள் தொடர்பான முக்கிய தகவல்கள்:

துரவுகளை புதுப்பித்தல்: தன் தந்தை ஆபிரகாம் வெட்டி, பெலிஸ்தியர்கள் மூடிப்போட்ட துரவுகளை ஈசாக்கு மீண்டும் தோண்டி உயிர்ப்பித்தான்.

🍒1. ஏசேக்கு (Esek):

     கேரார் மேய்ப்பர்கள் ஈசாக்கின் வேலையாட்களுடன் தண்ணீர் குறித்து வாக்குவாதம் செய்ததால், அந்தத் துரவுக்கு 'ஏசேக்கு' (வாக்குவாதம் என்று பொருள்) எனப் பெயரிட்டான்.

🍒2. சித்னா (Sitnah):

 மற்றொரு துரவை வெட்டியபோது அதற்கும் சண்டை வந்ததால், அதற்கு 'சித்னா' (விரோதம்) என்று பெயரிட்டான்.

🍒3. ரெகொபோத் (Rehoboth):

 சண்டையில்லாத மூன்றாவது துரவை வெட்டி, 'கர்த்தர் நமக்கு இடமுண்டாக்கினார்' எனப் பொருள்படும் வகையில் 'ரெகொபோத்' எனப் பெயரிட்டான்.

🍒4. பெயெர்செபா (Beersheba):                  

பின்னர் பெயர்செபா சென்று அங்கே ஒரு துரவை வெட்டினான். அந்த நாளில்தான் அவனது வேலைக்காரர்கள் தண்ணீரைப் பெற்றனர்.

✨✨✨✨✨✨✨✨

🏡யாக்கோபு..
தூண்களின் மனிதன்..

பழைய ஏற்பாட்டில் வரும் யாக்கோபு (Jacob), ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் வழிவந்த இஸ்ரவேலர்களின் முக்கிய முதுபெரும் தந்தை ஆவார். 

யாக்கோபு கடவுளின் நினைவாகக் கற்களைக் கொண்டு பல தூண்களை (Pillars) நிறுவியுள்ளார்.

யாக்கோபு தனது வாழ்நாளில் நான்கு இடங்களில் தூண்களை நிறுவியுள்ளார்:

🍒1. பெத்தேல் 1:

 தேவனைத் தரிசித்த 'யாக்கோபின் ஏணி' கனவுக்குப் பிறகு, அந்த இடத்தின் நினைவாக ஒரு கல்லை நிறுவி எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தார்.

🍒2. கீலேயாத்:      

             தன் மாமனார் லாபானுடன் செய்துகொண்ட சமாதான உடன்படிக்கையின் சாட்சியாக ஒரு கல் தூணை நிறுவினார்.

🍒3. பெத்தேல் 2:      

   கர்த்தர் மீண்டும் அவரிடம் பேசி, அவரது பெயரை 'இஸ்ரவேல்' என்று மாற்றியதன் நினைவாக அங்கு ஒரு தூணை எழுப்பினார்.

🍒4. பெத்லகேம்..

 (ராகேலின் கல்லறை): தனக்கு மிகவும் பிடித்த மனைவியான ராகேல், பெஞ்சமின் என்ற குழந்தையைப் பெற்றெடுத்து பிரசவத்தில் மரணமடைந்தபோது, அவளது நினைவாக அந்த கல்லறையின் மேல் ஒரு தூணை நிறுவினார்..

✨✨✨✨✨✨✨✨

♥️ஆவிக்குரிய சிந்தை :

👑1. பலிபீடம் Home Altar..

 நம் வீடுகளில் நம் ஜீவியத்தில் இணைந்து இருக்க வேண்டும்..

👑2. துரவு..Living Waters..

நம் உள்ளத்தில் ஜீவ தண்ணீருள்ள நதிகள் வற்றாமல் புறப்பட வேண்டும்..

👑3. தூண்கள்..உடன்படிக்கை 

தேவனுக்கும் நமக்கும் உள்ள உடன்படிக்கை எப்பொழுதும் காத்துகொள்ள வேண்டும்..

✨✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628,003

✨✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA