சபைக்கு செய்தி TCBA🌿🌿🌿🌿🌿🌿🌿சரீர வியாதியின் காரணங்கள்...ஆத்தும வியாதியின் காரணம்..🌿🌿🌿🌿🌿🌿🌿
🌿🌿🌿🌿🌿🌿
SHALOM STEWARD THOUGHTS DISCERNS
சபைக்கு செய்தி TCBA
🌿🌿🌿🌿🌿🌿🌿
சரீர வியாதியின் காரணங்கள்...
ஆத்தும வியாதியின் காரணம்..
🌿🌿🌿🌿🌿🌿🌿
📌 சரீர வியாதியின் 8 காரணங்கள்..
1️⃣ தேவனுடைய கிரியைகள் வெளிப்பட..
📖 யோவான் 9:1-3
பிறவிக்குருடன் தேவனுடைய மகிமை வெளிப்படுவதற்காக அப்படிப் பிறந்தான் என்று இயேசு சொன்னார்.
2️⃣ பாவம் செய்யும் போது..
📖 யோவான் 5:5,14
“இனிப் பாவஞ்செய்யாதே” என்று கர்த்தர் எச்சரித்தார்.
3️⃣ தேவனுடைய குமாரன் மகிமைப்பட..
📖 யோவான் 11:3-4
லாசருவின் வியாதி மூலம் தேவனுடைய மகிமை வெளிப்பட்டது.
4️⃣ பெருமையினால் நம்மை உயர்த்தாதபடிக்கு..
📖 2 கொரிந்தியர் 12:7-9
பவுலுக்குக் கொடுக்கப்பட்ட “மாம்சத்தின் முள்” அவரைத் தாழ்மையாய் வைத்தது.
5️⃣ கர்த்தருடைய பந்தியில் அபாத்திரமாய் பங்கெடுக்கும் போது..
📖 1 கொரிந்தியர் 11:27-32
அபாத்திரமாய் பங்கெடுத்ததால் பலர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருந்தார்கள்.
6️⃣ மரணத்துக்கு ஏதுவான பாவம் செய்யும் போது..
📖 1 யோவான் 5:16-18
சில பாவங்கள் கடுமையான விளைவுகளை உண்டாக்குகின்றன.
7️⃣ மனதின் துக்கத்தினால்..
📖 நெகேமியா 2:2
“இது மனதின் துக்கமே” என்று ராஜா கூறினான்.
8️⃣ கர்த்தருடைய கட்டளைக்கு செவி கொடுக்காத போது..
📖 யாத்திராகமம் 15:26
“நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்” என்று தேவன் அறிவித்தார்.
🌿🌿🌿🌿🌿🌿🌿
📌 ஆத்தும வியாதியின் ஒரே காரணம்..
❌ பாவம்
📖 ஏசாயா 1:5
“தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது.”
🌿🌿🌿🌿🌿🌿🌿
📌 நோய்கள் மேல் கர்த்தருடைய வல்லமை..
📖 உபாகமம் 7:15
கர்த்தர் நோய்களை விலக்குகிறவர்.
📖 சங்கீதம் 103:3
“உன் நோய்களையெல்லாம் குணமாக்கி...”
📖 மத்தேயு 8:17
இயேசு நம்முடைய நோய்களைச் சுமந்தார்.
🌿🌿🌿🌿🌿🌿🌿
📌 கடைசியாக சகோதரரே..
📖 யாக்கோபு 5:14
வியாதிப்பட்டவன் சபையின் மூப்பர்களை அழைத்து ஜெபிக்கச் சொல்ல வேண்டும்.
🙏
கர்த்தர் நம்முடைய சரீரத்தையும்
ஆத்துமாவையும் சுகமாக்குகிறவர்.
🍒இந்த வசனத்தின் முக்கிய அர்த்தங்கள்..
✨சபையின் மூப்பர்களை அழைத்தல்:
ஒரு விசுவாசி பலவீனமடையும் போது, சபையின் மூப்பர்கள்/ஊழியர்கள் உதவி கேட்கும் தாழ்மை இருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது. சத்தியவசனம்.
✨எண்ணெய் பூசுதல்:
அக்கால வழக்கப்படி எண்ணெய் என்பது மருத்துவ குணமுடையதாகவும், ஆவிக்குரிய ரீதியில் தேவனுடைய பரிசுத்த ஆவியானவரின் நிறைவுக்கும் கிரியைகளுக்கும் அடையாளமாகவும் இருக்கிறது
✨கர்த்தருடைய நாமம்:
ஜெபமும் சுகமளித்தலும் மனித அதிகாரத்தால் அல்ல, இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தினாலேயே நடக்கிறது.
🍒சகோதரரே..
🍒கேள்வி :
நீ ( ங்கள் ) சுகமாக இருக்கிறீர்களா?
நீ அவளுக்கு எதிர்கொண்டு ஓடி,
👨👩👦👦நீ சுகமாயிருக்கிறாயா?
👨👩👦👦உன் புருஷன் சுகமாயிருக்கிறானா?
👨👩👦👦அந்தப் பிள்ளை சுகமாயிருக்கிறதா?
என்று அவளிடத்தில் கேள் என்றான்.
🍒உண்மையான பதிலா?
அவள்: சுகந்தான் என்று சொல்லி,
2 இராஜாக்கள் 4.6
♥️♥️சிந்தனை :
என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள். சங்கீதம் 35.27
🌿🌿🌿🌿🌿🌿🌿
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம், தூத்துக்குடி 628003
📧 Shalomsteward1@gmail.com
📱 Whatsapp:
+91 99650 50301
🌿🌿🌿🌿🌿🌿
Comments
Post a Comment