♥️♥️♥️♥️♥️♥️♥️ "பிரவேசித்தல்" ♥️♥️♥️♥️♥️♥️♥️ 💯TCBA SALVATION MOMENT💯
♥️♥️♥️♥️♥️♥️♥️
"பிரவேசித்தல்"
♥️♥️♥️♥️♥️♥️♥️
💯TCBA SALVATION
MOMENT💯
♥️♥️♥️♥️♥️♥️♥️
"பிரவேசித்தல்" என்பது இரட்சிப்பின் திட்டத்தில் மிக கவனத்துக்குரிய பதம் ஆகும்
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
🌍1.
பேழை கிறிஸ்து..
கிறிஸ்துவில் பிரவேசிப்பதே இரட்சிப்பு
💯கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள். இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன். ஆதியாகமம் 7.1
💯நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். யோவான் 10.9
🌍2.
பரிசுத்த ஸ்தலம்..நம் ஆவி ஆத்துமா சரீரம்..மகா ஆசாரியர் கிறிஸ்து பிரவேசிப்பது நம் பரிசுத்தமாகுதலுக்கு நிழல்..
💯ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின்மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன்.
யாத்திராகமம் 28.29
🌍3.
கிறிஸ்து பாவம் நிறைந்த உலகுக்கு பிரவேசித்தல் இந்த உலக இரட்சிப்புக்கு ஆதாரம்..
💯அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில், லூக்கா 19.1
🌍4.
கிறிஸ்து இவ்வுலகில் பிரவேசித்து இரட்சிப்பின் திட்டம் முடித்து மறுபடியும் மகிமையில் பிறவேசித்தார்..
💯கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி,
லூக்கா 24.26
🌍5.
தேவனுடைய கோபமும் மனிதனுடைய அவிசுவாசமும், பின்வாங்குதலும் இரட்சிப்புக்குள் பிரவேசிக்க இயலாது..
💯என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்தில் ஆணையிட்டேன் என்றார்.
எபிரேயர் 3.11
💯ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற்போனார்களென்று பார்க்கிறோம்.
எபிரேயர் 3.19
💯ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்கு பயந்திருக்கக்கடவோம்.
எபிரேயர் 4.1
===================
🪜எபிரேயர் நிருபத்தில் "பிரவேசித்தல் " என்பதின் முக்கியத்துவம்..
🍒1.
கிறிஸ்துவை தேவன் இவ்வுலகில் பிரவேசிக்க திட்டம் கொண்டார்..சரீரம் ஆயத்தம் செய்தார்..
💯மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள். என்றார்.
எபிரேயர் 1.6
💯ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர். எபிரேயர் 10.5
🍒2.
கிறிஸ்து நித்திய பிரதான ஆசாரியராக முன்னோடியாக பிரவேசம்..
💯நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.
எபிரேயர் 6.20
🍒3.
பிரவேசித்தலின் பிரமாணம்..
💯இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள். எபிரேயர் 9.6
இரண்டாங்கூடாரத்தில் பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான்.
எபிரேயர் 9.7
🍒4.
கிறிஸ்துவின் பிரவேசம் நித்திய மீட்பு..
💯வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். எபிரேயர் 9.12
🍒5.
கிறிஸ்து இரட்சிப்பின் திட்டம் நிறைவேற்றி மகிமையில் பிரவேசித்தார்..
💯அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்தில்தானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.
எபிரேயர் 9.24
🍒6.
கிறிஸ்து தம்முடைய சரீரம், தம்முடைய இரத்தம்..
இது நித்திய விசேஷத்த பிரவேசம்..
💯பிரதானஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்தஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை. எபிரேயர் 9.25
🍒🍒🍒🍒🍒🍒🍒
🌺
நம் இரட்சிப்பின் முழு திட்டம் நாம் கிறிஸ்துவில் பிரவேசிப்பது மட்டுமே..
இந்த இரண்டு வசனங்கள் கவனியுங்கள்..
💯ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
எபிரேயர் 10.19-20
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
✨
இரட்சிப்பின் அழைப்பும் சுவிசேஷ மணித்துளியும்..
💯இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். வெளிப்படுத்தினத விசேஷம் 3.20
🌸விசுவாசியுங்கள்.
பிரவேசியுங்கள்.
இரட்சிக்கப்படுங்கள்
🏹கர்த்தர் உங்களை சகல சத்தியத்துக்குள்ளும் நடத்துவாராக..ஆமென்
🤝🤝🤝🤝🤝🤝🤝
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் 3
தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
GATHERING OF SAINTS CHURCH AS FAMILY
🤝🤝🤝🤝🤝🤝🤝
Comments
Post a Comment