ஜெப சிந்தனை..சகோ தேசிகன் கோவை..வாசிப்போம் :🙏ஈசாக்கின் ஜெபம் 🙏ரெபேக்காள் ஜெபம்
♥️♥️♥️♥️♥️♥️♥️
TCBA சபை சகோதரர்கள் ஜெபம்..
புதன்கிழமை..
ஜெப சிந்தனை..
சகோ தேசிகன் கோவை..
வாசிப்போம் :
🙏ஈசாக்கின் ஜெபம்
🙏ரெபேக்காள் ஜெபம்
ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வம்சவரலாறு. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்.
ஆதியாகமம் 25:19
ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்பண்ணகிறபோது நாற்பது வயதாயிருந்தான். இவள் பதான்அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்குக் குமாரத்தியும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள்.
ஆதியாகமம் 25:20
மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல்செய்தான். கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.
ஆதியாகமம் 25:21
அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன. அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள்.
ஆதியாகமம் 25:22
அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது. இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும். அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார்.
ஆதியாகமம் 25:23
பிரசவகாலம் பூரணமானபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தது.
ஆதியாகமம் 25:24
மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன் போலவும் வெளிப்பட்டான்.
ஆதியாகமம் 25:25
பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான். அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள். இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான்.
ஆதியாகமம் 25:26
ஜெபத்திற்கான சிந்தனை..
🙏1. ஈசாக்கு 20 வருடங்களாக தன் மலடியாயிருந்த ரெபேக்காளுக்காக தேவனுடைய உடன்படிக்கை நிறைவேற ஜெபிக்கிறான்..
வேண்டுதல் கேட்க பெற்றான்..
நம்முடைய ஜெபம் இவ்வாறு உடன்படிக்கை நிறைவேற பாரம் நிறைந்ததாக இருக்கிறதா?
🙏2. ரெபேக்காள் தன் கர்ப்பத்தில் ஏற்பட்ட மோதல்களுக்காக தானே கர்த்தரிடத்தில் விசாரிக்கிறாள்..கர்த்தர் வேத சரித்திரத்தில் ஒரு ஸ்திரீக்கு முதலில் தன் பூமியில் ஜாதிகள் புறப்படும் திட்டத்தை முன் அறிவிக்கிறார்..
நம்முடைய ஜெபம் இவ்வாறு சுயம் சார்ந்ததாக இல்லாமல் தேவ திட்டம் சார்ந்து இருக்கிறதா?
🍒🍒
சகோ சுகுமார் கோமஸ் மற்றும் 5 சகோதரர்கள் கலந்து கொண்டு சபையின் தேவைகளுக்காக ஜெபித்து நிறைவு செய்தார்கள்..
ஆசிர்வாதமாக இருந்தது..
♥️♥️♥️♥️♥️♥️♥️
Comments
Post a Comment