♥️♥️♥️♥️♥️♥️♥️சபை வேதபாடம் ஜெபம் இன்று 29:05:26 வெள்ளி ♥️♥️♥️♥️♥️♥️♥️பிலிப்பியர் 2 ம் அதிகாரம்..


♥️♥️♥️♥️♥️♥️♥️

சபை வேதபாடம் ஜெபம் 

இன்று 29:05:26 வெள்ளி 

♥️♥️♥️♥️♥️♥️♥️

பிலிப்பியர் 2 ம் அதிகாரம்..

தலைப்பு :

கிறிஸ்து என் சிந்தை..

வசனம் :
1-4 ஓரே சிந்தை 
5-12 கிறிஸ்துவின் சிந்தை 
13-18 சிந்தையும் செய்கையும் 
19-24 கிறிஸ்துவின் சிந்தை கொண்ட ( மனதுள்ளவன் ) தீமோத்தேயு 
25-30 கிறிஸ்துவின் சிந்தை கொண்ட ( வாஞ்சை உள்ளவன் ) எப்பாபிராதீத்து 

✨✨✨✨✨✨✨

இன்று கற்றுக்கொண்டவை

🍒ஓரே சிந்தை 

ஆதலால், கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும்,
( ஆறுதலின் தேவன் )

 அன்பினாலே யாதொரு தேறுதலும்,
{ ஜனத்தை தேற்றுங்கள் )

 ஆவியின் யாதொரு ஐக்கியமும்,
( ஆவியின் ஒருமை 
எபே 4:3 )

 யாதொரு உருக்கமுமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால், 
பிலிப்பியர் 2:1

நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். 
பிலிப்பியர் 2:2

ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். 
பிலிப்பியர் 2:3

அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. 
பிலிப்பியர் 2:4

🍒கிறிஸ்துவின் சிந்தை..

மனத்தாழ்மை சிந்தை..

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. 
பிலிப்பியர் 2:5

அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், 
பிலிப்பியர் 2:6

தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். 
பிலிப்பியர் 2:7

அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். 
பிலிப்பியர் 2:8

ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, 
பிலிப்பியர் 2:9

இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், 
பிலிப்பியர் 2:10

பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். 
பிலிப்பியர் 2:11

🍒🍒🍒🍒🍒🍒🍒

ஜெபக்குறிப்பு :

1. சகோதரி லட்சுமி & மகன் ஜோதி ராஜா 

வேலை மற்றும் சரீர பெலவீனம்..

2. சகோதரி ராஜேஸ்வரி 
சகோதரி மங்கையர்கரசி
சகோ பிரபு 
அண்ணா நகர் 2

TCBA TUTICORIN 3

♥️♥️♥️♥️♥️♥️♥️

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA