♥️♥️♥️♥️♥️♥️♥️KNOW WHAT'S WORSHIP GOD SEEKSபிதாவானவர் விரும்பும் ஆராதனை அறிந்து கொள்ளுங்கள்
KNOW WHAT'S WORSHIP GOD SEEKS
பிதாவானவர் விரும்பும் ஆராதனை அறிந்து கொள்ளுங்கள்
♥️♥️♥️♥️♥️♥️♥️
TCBA@WORSHIPTIME
♥️♥️♥️♥️♥️♥️♥️
தியான வசனம்..
உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். யோவான் 4.23
But the hour cometh, and now is, when the true worshippers shall worship the Father in spirit and in truth: for the Father seeketh such to worship him.
John 4:23
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
ஆராதனை..
தொழுது கொள்ளுதல்..
இவ்வாறு!!!!!
🍒1. ஆவியோடும் உண்மையோடும்
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். யோவான் 4.24
🍒2. சுத்த இருதயத்தோடே..
அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.
2 தீமோத்தேயு 2.22
🍒3. கர்த்தருக்குப் பயந்து..
உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக. உபாகமம் 6.12
🍒4. கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு..
அவனும் அவன் குமாரரும் எந்நாளும் கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஆராதனை செய்யும்படி நிற்கும்பொருட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரத்தார் எல்லாருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார். உபாகமம் 18.5
🍒5. அந்நிய காரியங்களை விலக்கி..
அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள். அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார். நியாயாதிபதிகள் 10.16
🍒6. அவர் ஒருவருக்கே..
அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழுஇருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள். அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கி விடுவார் என்றான்.
1 சாமுவேல் 7.3
🍒7. மகிழ்ச்சியோடே
மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
சங்கீதம் 100.2
🍒8. ஒருமனப்பட்டு..
அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன். செப்பனியா 3.9
🍒9. கர்த்தரைப் பணிந்துகொண்டு..
அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
மத்தேயு 4.10
🍒10. புத்தியுள்ள..
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
ரோமர் 12.1
🍒11. மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல்...
ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.
பிலிப்பியர் 3.3
🍒12. மாயமான தாழ்மை இல்லாமல்..
மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புப்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள். கொலோசெயர் 2.19
🍒13. சுயஇஷ்டம் இன்றி..
இப்படிப்பட்ட போதனைகள் சுயஇஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது. கொலோசெயர் 2.23
🍒14. பயத்தோடும் பக்தியோடும்..
ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
எபிரேயர் 12.28
⚠️⚠️⚠️சகோதரரே..
🍒நித்திய ஆராதனை மனதில் கொண்டு..
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள், உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள். வெளிப்படுத்தினத விசேஷம் 15.4
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
+91 9965050301
GATHERING OF SAINTS CHURCH AS FAMILY
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
Comments
Post a Comment