EXODUS TVஅருளுரை துளிகள் ஜெபத்திற்கான சத்தியங்கள் 02
https://youtu.be/XzNHsR040SE?si=ZvGDinUyEUjNcJSf
EXODUS TV
அருளுரை துளிகள்
ஜெபத்திற்கான சத்தியங்கள் 02
நகோமிக்கு அவளுடைய புருஷனாகிய எலிமெலேக்கின் உறவின்முறையில் போவாஸ் என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான்.
ரூத் 2:1
♥️1. ஜெபத்திற்கு நமக்கும் கர்த்தருக்கும் உறவு வேண்டும்..
♥️2. நம் கர்த்தர் ஐஸ்வரிய சம்பன்னர்..
மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
கலாத்தியர் 4:6
ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய். நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய்த் தேவனுடைய சுதந்தரனுமாயிருக்கிறாய்.
கலாத்தியர் 4:7
அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
எபேசியர் 3.19
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
பிலிப்பியர் 4.19
புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். கொலோசெயர் 1.27
அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.
கொலோசெயர் 2.2
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன் என்றாள். அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள்.
ரூத் 2:2
♥️3. நம் ஜெபம் தற்செயல் அல்ல..
அவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள். தற்செயலாய் அவளுக்கு நேரிட்ட அந்த வயல்நிலம் எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடையதாயிருந்தது.
ரூத் 2:3
♥️4. கர்த்தருக்கும் ஜெபிக்கிற நமக்கும் உறவு தாண்டி ஒரு நெருக்கம் அவசியம்..
அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான். அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.
ரூத் 2:4
பின்பு போவாஸ் அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்.
ரூத் 2:5
அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் பிரதியுத்தரமாக: இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடே கூடவந்த மோவாபிய பெண்பிள்ளை.
ரூத் 2:6
அறுக்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக்கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடத்தில் கேட்டுக்கொண்டாள். காலமே துவக்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள். இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரந்தான் ஆயிற்று என்றாள்.
ரூத் 2:7
♥️5. வேறே வயலுக்கு போக வேண்டாம்..
ஜெபத்தில் விசுவாசம்..அந்நிய தேவர்களையோ மற்ற அவிசுவாச செயல்களை தவிர்க்க வேண்டும்
அப்பொழுது போவாஸ் ரூத்தைப்பார்த்து: மகளே, கேள். பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடுகூடவே இரு.
ரூத் 2:8
♥️6. ஜெபம் பாதுகாப்பு..
♥️7. ஜெபம் நம் தாகத்தை கிறிஸ்துவிடம் தீர்க்கும்..திரும்ப தாகம் ஏற்படாது..
அவர்கள் அறுப்பறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பிறகே போ. ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன். உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங்களண்டைக்குப் போய், வேலைக்காரர்மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றாள்.
ரூத் 2:9
♥️8. ஜெபம் ஆராதனை யாக மாற வேண்டும்..
♥️9. தயவு என்பது தேவனுடைய மகா பெரிய ஐஸ்வரியம்
அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயைகிடைத்தது என்றாள்.
ரூத் 2:10
♥️10. கர்த்தர் நாம் ஜெபிக்கும் முன்பே நம்மை பற்றி எல்லாம் அறிந்திக்ருகிறார்..
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,
0எபேசியர் 3.20
அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6.8
அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும் உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.
ரூத் 2:11
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Comments
Post a Comment