♥️♥️♥️♥️♥️♥️♥️DON'T BE IGNORANT அறியாமை பாவம் ♥️♥️♥️♥️♥️♥️♥️
♥️♥️♥️♥️♥️♥️♥️
DON'T BE IGNORANT
அறியாமை பாவம்
♥️♥️♥️♥️♥️♥️♥️
🍒1. அறியாமை ஒரு குற்றம்..அக்கிரமம் சுமக்க வேண்டும்..
லேவி 5:17
🍒2. அறியாமை பாவத்துக்கு பிரமாணம் உண்டு..
எண் 15:29
🍒3. அறியாமை தேவன் மறந்து மனந்திரும்ப விரும்புகிறார்..
அப் 17:30
🍒4. அறியாமை தேவனுடைய ஜீவனுக்கு அந்நியர் ஆக்குகிறது..
1 பேதுரு 1:14
🍒5. அறியாமை தேவனுக்கு கீழ்ப்படிய மறுக்கிறது..
1 பேதுரு 1:14
⚠️DON'T BE IGNORANT..⚠️
⚠️1. கர்த்தர் நம்மை எவ்வாறு அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்து நடத்தி வருகிறார் என்பதை முதலாவது அறிய வேண்டும்..
இப்படியிருக்க சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால், நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.
1 கொரிந்தியர் 10:1
⚠️2. சபையின் பிள்ளைகள் ஒருவரை ஒருவர் புரிந்து கஷ்டம் நஷ்டங்களில் அறிந்து ஜெபமோ அல்லது செயல்களிலோ தொடர முடியும்..
ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.
2 கொரிந்தியர் 1:8
சகோதரரே, புறஜாதிகளான மற்றவர்களுக்குள்ளே நான் பலனை அடைந்ததுபோல உங்களுக்குள்ளும் சில பலனை அடையும்படிக்கு, உங்களிடத்தில் வர பலமுறை யோசனையாயிருந்தேன், ஆயினும் இதுவரைக்கும் எனக்குத் தடையுண்டாயிற்று என்று நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.
ரோமர் 1:13
⚠️3. சபையில் ஒவ்வொரு பிள்ளைகளும் தங்கள் ஆவிக்குரிய வரங்கள் இன்னதென்று அறிந்து சபையில் பகிர்ந்து கொள்ள வேண்டும்..
அன்றியும், சகோதரரே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.
1 கொரிந்தியர் 12:1
⚠️4. நமக்கு அருமையானவர்கள் கர்த்தருக்குள் மரித்தால் அது நித்திரை என்பதை உணர்ந்து அறிந்து அந்த நிகழ்வில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.
1 தெசலோனிக்கேயர் 4:13
⚠️5. கர்த்தருடைய வருகையின் பரிமாணத்தை அறிந்து வான மேக வருகைக்கு அனுதினமும் காத்திருக்க வேண்டும்..
பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.
2 பேதுரு 3:8
🌸🌸🌸🌸🌸🌸🌸
♥️மேலும் சகோதரரே!!!!!
♥️மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன், அதென்னவெனில்,
⚠️தேவனிடத்தில் அநீதி இல்லை ⚠️
புறஜாதியாருடைய நிறைவுஉண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.
இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு, விலக்குவார் என்றும்,
நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது.
சுவிசேஷத்தைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள், தெரிந்துகொள்ளுதலைக்குறித்து அவர்கள் பிதாக்களினிமித்தம் அன்புகூரப்பட்டவர்களாயிருக்கிறார்கள்.
தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.
ரோமர் 11:29
🌸🌸🌸🌸🌸🌸🌸
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628 003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
GATHERING OF SAINTS CHURCH AS FAMILY
🌸🌸🌸🌸🌸🌸🌸
Comments
Post a Comment