🪜🪜🪜🪜🪜🪜🪜பரத்துக்கேறும் விசுவாச படிகள் 🪜🪜🪜🪜🪜🪜🪜365 தியானங்கள் 🪜🪜🪜🪜🪜🪜🪜





🪜🪜🪜🪜🪜🪜🪜

பரத்துக்கேறும் விசுவாச படிகள் 

🪜🪜🪜🪜🪜🪜🪜
💯💯💯🍒
365 தியானங்கள் 

🪜🪜🪜🪜🪜🪜🪜55555t5

🪜001:

சாராளுடைய கல்லறை பூமி..

தியான பகுதி 
ஆதியாகமம் 23

 நமக்கு அருமையானவர்கள் மரிக்கும்போது நம்முடைய ஜீவியமும் அனுதின வாழ்க்கையும் வழக்கம் போல நடைபெற வேண்டும். ஆபிரகாம் அதை உணர்ந்திருந்தான். விசுவாசத்தின் தகப்பனான அவன் இந்த சந்தர்ப்பத்திலும் வாழ்ந்து காட்டினான். துக்கப்படுவது தவறு அல்ல.
 துக்கத்தில் தொடர்வது தவறு. சில விசுவாசிகள் இந்த சந்தர்ப்பத்தில் தோல்வி அடைகிறார்கள். அநேக வருடங்களாக துக்கப்படுகிறவர்கள் உண்டு. 
இந்த இழப்பை சுற்றி அவர்களுடைய இருதயம் இருக்கிறதை காணலாம்.
 அநேக வருடங்களாக செய்தித்தாள்களில் நினைவு கூறுதலை குறித்து விளம்பரங்கள் தருகிறார்கள். மரித்தவர்களை நினைவு கூறுவது தவறு அல்ல. ஆனாலும் அவர்களை நாம் பார்ப்போம் என்கிற நம்பிக்கை இல்லாமல் விளம்பரத்தில் நினைவு கூறுதல் தவறு. 
ஏனென்றால் அவிசுவாசிகள் அப்படி செய்கிறார்கள். காரணம் அந்த நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. 
சில நாட்களில் சில மாதங்களில் நாம் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். அது தேவனுக்கு மகிமை கொண்டுவரும். ஆபிரகாம் அதை கடைப்பிடித்தான். விசுவாசத்தில் நிலைத்திருந்தான்.

ஆபிரகாம் சாராளை அடக்கம் பண்ண ஏத்தின் புத்திரரிடம் பேசி அதற்குரிய விலையை கொடுத்து அங்கேயே அடக்கம் செய்தான். 
இதுவும் ஆபிரகாமின் விசுவாசபடி என்றே கூறலாம். ஏனென்றால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசம் தனக்கும், தன்னுடைய சந்ததிக்கும் தேவன் வாக்குப்பண்ணி இருக்கிறார்.
ஆகவே இங்கேயே அடக்கம் செய்ய முடிவு எடுக்கிறான்.
 
திரும்பி போவதற்கு சமயம் கிடைத்திருக்குமே என்று ஆக்கியோன் கூறும்போது இந்த சந்தர்ப்பம் நமக்கு நினைவுக்கு வருகிறது.

தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே.
 எபிரேயர் 11:15

ஆம் இந்த சந்தர்ப்பத்தில் கூட ஆபிரகாம் சாராளை தன்னுடைய சொந்த தேசத்தில் அடக்கம் பண்ண விரும்பவில்லை. ஆபிரகாமின் விசுவாசப்படிகள் சகல சந்தர்ப்பங்களிலும் விளங்குகிறது.

 ஆபிரகாம் எழுந்திருந்து ஏத்தின் புத்திராகிய அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து..
ஆதி 23:7

கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத்அர்பாவிலே சாராள் மரித்தாள். அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான். 
ஆதியாகமம் 23:2

சாராளுக்காக அழுது புலம்பும் ஆபிரகாம் சற்று நேரத்தில் நம்பிக்கையின் நாயகனாக விசுவாச புருஷனாக தன்னுடைய பொறுமையான குணத்தை வெளிப்படுத்துகிறவனாக காணப்படுகிறான்.

மாத்திரமல்ல ஆபிரகாம் 400 சேக்கல் நிறை வெள்ளி கொடுத்து அந்த கல்லறை பூமி வாங்கினான். 
அங்கு ஆபிரகாம் விலை பேரம் செய்யாமல் பணத்தை கொடுத்து பூமியை உறுதி செய்கிறான். இதுவும் ஆபிரகாமின் விசுவாசப்படியாக தியானிக்கலாம். தேசத்தில் ஆபிரகாம் கல்லறை பூமி மட்டும் வாங்கியது நம் எல்லாருக்கும் ஒரு விசுவாச பாடமாக விளங்குகிறது.

சிந்தனைக்கு :

தேவன் தம்முடைய வாக்குத்தத்தை நிறைவேற்றுவார் என்பது நிச்சயம். ஆயினும் அவருடைய காலம் எப்பொழுதும் நம்முடைய விருப்பப்படி இராது என்பதும் நிச்சயம்.

🪜🪜🪜🪜🪜🪜🪜

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628 003

🪜🪜🪜🪜🪜🪜🪜

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA