✨✨✨✨✨✨✨♥️ஜெப சிந்தனை ♥️ரூத் 1 ம் அதிகாரம்..


✨✨✨✨✨✨✨

♥️ஜெப சிந்தனை 

♥️ரூத் 1 ம் அதிகாரம்..


ரூத் 1 சுருக்கம்

ரூத் 1-ஆம் அதிகாரம், பஞ்சம் காரணமாக பெத்லகேமிலிருந்து மோவாபுக்கு இடம்பெயர்ந்த எலிமெலேக்-நகோமி குடும்பத்தின் துயரமான பின்னணியை விவரிக்கிறது. கணவன் மற்றும் இரண்டு மகன்களை இழந்த நகோமி, தன் மருமகள் ரூத்துடன் பெத்லகேமுக்குத் திரும்புகிறாள். ரூத்தின் உறுதியான அன்பும், உண்மையும், புதிய வாழ்விற்கான நம்பிக்கையும் இந்த அதிகாரத்தின் மையப்பொருள். 

ரூத் 1 சுருக்கம்:

அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை. அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான். 
நியாயாதிபதிகள் 21:25

நியாயாதிபதிகள், நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று. அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான். 
ரூத் 1:1

♥️பஞ்சம் மற்றும் இடம்பெயர்வு:

 நியாயாதிபதிகளின் காலத்தில் யூதாவில் பஞ்சம் ஏற்பட்டதால், எலிமெலேக் தன் மனைவி நவோமி மற்றும் மகன்கள் மக்லோன், கிலியோனுடன் மோவாப் தேசத்திற்குச் செல்கிறான்.

♥️துயரமான இழப்பு:

 மோவாபில் எலிமெலேக் இறக்கிறான். மகன்கள் மோவாபியப் பெண்களான ரூத் மற்றும் ஓர்பாளை மணக்கிறார்கள். சுமார் 10 ஆண்டுகள் கழித்து, இரண்டு மகன்களும் இறக்க, நகோமி தன் மருமகள்களுடன் அநாதையாக நிற்கிறாள்.

நகோமியின் திரும்புதல்: 

கர்த்தர் யூதாவில் பஞ்சத்தைப் போக்கினார் என்று கேள்விப்பட்டு, நகோமி தன் மருமகள்களுடன் பெத்லகேமுக்குத் திரும்ப முடிவெடுக்கிறாள். 
ஓர்பாள் மோவாபிலேயே தங்கிவிடுகிறாள்.

ரூத்தின் அர்ப்பணிப்பு: 

நகோமி வற்புறுத்தியும், ரூத் அவளைப் பிரிய மனமில்லாமல், "உம்முடைய ஜனமே என்னுடைய ஜனம், உம்முடைய தேவனே என்னுடைய தேவன்" என்று கூறி, நவோமியைப் பற்றிக்கொள்கிறாள்.

பெத்லகேமில் வருகை: 

நகோமியும் ரூத்தும் பெத்லகேமை அடைகிறார்கள். நகோமி தன் துயரத்தால் தன்னை 'மாரா' (கசப்பு) என்று அழைக்கச் சொல்கிறாள், ஆனால் அவள் திரும்பியது வாற்கோதுமை அறுவடை ஆரம்பமாகும் காலத்தில் நிகழ்ந்தது. 

இந்த அதிகாரம் சோகத்தில் தொடங்கி, ரூத்தின் விசுவாசத்தின் மூலம் நம்பிக்கையுடன் முடிகிறது.
பின்னணியில் பஞ்சம், மரணம், தனிமை மற்றும் ரூத்தின் அசைக்க முடியாத விசுவாசம் ஆகியவை முக்கிய அம்சங்களாகும். 

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

♥️1. ஜெபத்திற்கு பொறுமை தேவை..
PRAYER NEEDS PATIENCE 

ரூத் பெத்லகேம் தேசத்தில் பஞ்சம் வந்த போது தேவன் ஜனங்களை சந்திப்பார் என்கிற விசுவாசம் இல்லாமல் மோவாப் போகிறாள்..

கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடுகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, 
ரூத் 1:6

 எல்லாரும் பயமடைந்து: மகாதீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
 லூக்கா 7:16

அப்பத்தின் வீடு விட்டு புற தேவர்கள் தேசமாகிய மோவாப் போகிறாள்..

அப்பொழுது அவள்: இதோ, உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய்விட்டாளே. நீயும் உன் சகோதரியின் பிறகே திரும்பிப்போ என்றாள். 
ரூத் 1:15

ஜெபத்திற்கு பொறுமை தேவை..

♥️2. ஜெபத்திற்கு மனக்கிலேசம் மனஸ்தாபம் வருத்தம் தேவை..
PRAYER NEEDS PENITENCE 

நகோமி தன்னைக்குறித்தும் சர்வ வல்லவர் தான் தவறான முடிவு எடுத்த படியால் தன்னை கிலேசப்படுத்துகிற உண்மையை உணர்ந்து தன் மருமக்களிடம் அறிக்கை செய்கிறாள்..

அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரி. நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை. நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன். 
1 சாமுவேல் 1:15

உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும். மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம்பண்ணினேன் என்றாள். 
1 சாமுவேல் 1:16

அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள். சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார். 
ரூத் 1:20

நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன். கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார். கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில், நீங்கள் என்னை நகோமி என்பானேன் என்றாள். 
ரூத் 1:21

இப்பொழுது சந்தோஷப்படுகிறேன். நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன். நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.
 2 கொரிந்தியர் 7:9

தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது. லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
 2 கொரிந்தியர் 7:10

♥️3. ஜெபத்திற்கு பற்றிக்கொள்ளுதல் தேவை..
PRAYER NEEDS PERSEVERANCE 

ரூத் நாகோமியை கடும் சூழ்நிலை மத்தியில் பற்றிக்கொள்ளுகிறாள்..

அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.
 ஆதியாகமம் 32:26


ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: 
மத்தேயு 1:1

ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்,ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்,யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான். 
மத்தேயு 1:2

சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான், போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்,ஓபேத் ஈசாயை பெற்றான். 
மத்தேயு 1:5

@TCBABROTHERSPRAYER

♥️♥️♥️♥️♥️♥️♥️

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA