தேவாலயம்....ஜெப ஆலயங்கள்....சபை.. TEMPLE, SYNAGOGUES, CHURCH
சபை..
TEMPLE, SYNAGOGUES, CHURCH
🏛️ TEMPLE IN THE BIBLE
📖 What is the Temple?
The Temple was the central place of worship for the Israelites, where God’s presence was believed to dwell.
🔑 Key Temples
Solomon's Temple
Built by King Solomon (1 Kings 6)
Second Temple
Rebuilt after the return from Babylon (Ezra 6)
Later expanded by Herod the Great
✨ Purpose
Animal sacrifices for sins (Leviticus)
Priests conducted rituals
Symbol of God’s dwelling place
📍 Location
Only in Jerusalem
⚠️ Important Note
Destroyed in:
586 BC by Babylon
AD 70 by Romans
In the Bible, the Temple in Jerusalem (specifically Solomon’s Temple and the later Second Temple) was structured into three main inner divisions that grew increasingly sacred as one moved toward the back.
The Three Main Divisions..
The Forecourt (Ulam): சரீரம்
This was the entrance hall or vestibule that led into the main sanctuary.
The Holy Place (Heikhal): ஆத்துமா
The larger outer sanctum containing the golden lampstand (Menorah), the table of showbread, and the altar of incense.
The Holy of Holies (Devir): ஆவி
The innermost shrine, separated from the Holy Place by a heavy, embroidered veil. This windowless, square enclosure originally housed the Ark of the Covenant and was only accessible to the High Priest once a year on Yom Kippur.
Structural Layout of Herod's Temple
(Second Temple)..
During the time of the New Testament, the temple complex included additional courts that acted as further divisions of access:
Court of the Women:
The area accessible to all Jewish men and women.
Court of Israel:
A section for Jewish men who were ritually pure.
Court of the Priests:
The area immediately surrounding the temple building where sacrifices were performed.
The Middle Wall of Partition:
A literal stone barrier that separated the Court of the Gentiles from the inner Jewish courts, symbolizing the distinction between Jew and Gentile.
For detailed visual reconstructions, you can explore the Temple Institute's Gallery or view modern 3D renderings of the Holy Place and Sanctuary.
🕍 SYNAGOGUE IN THE BIBLE
📖 What is a Synagogue?
A synagogue is a local place of worship, teaching, and prayer.
🕰️ Origin
Developed during the Babylonian exile when the Temple was destroyed
Became common in Jewish communities everywhere.
✨ Purpose
Reading and teaching the Scriptures
Prayer and community gathering
No sacrifices (unlike the Temple)
📍 Location
Found everywhere Jews lived, not just Jerusalem
✝️ IN THE NEW TESTAMENT
Jesus and Synagogues
Jesus Christ often taught in synagogues (Luke 4:16)
Example: Preaching in Nazareth synagogue
Jesus and the Temple
Visited the Temple in Jerusalem
Cleansed it (Matthew 21:12)
Called it “My Father’s house”
தேவாலயம்..
அவன் தேவாலயத்தின் சுவரும் சந்நிதி ஸ்தானச்சுவருமாகிய ஆலயத்தின் சுவர்களுக்கு அடுத்ததாய்ச் சுற்றுக்கட்டுக்களைக் கட்டி, அவைகளில் அறைகளைச் சுற்றிலும் உண்டாக்கினான்.
1 இராஜாக்கள் 6.5
அதின் முன்னிருக்கிற தேவாலயமாகிய மாளிகை நாற்பதுமுழ நீளமாயிருந்தது.
1 இராஜாக்கள் 6.17
இப்படி தேவாலயத்தின் வாசலுக்கும் ஒலிவமர நிலைகளைச் செய்தான், அது சுவர் அளவில் நாலத்தொரு பங்காயிருந்தது.
1 இராஜாக்கள் 6.33
அந்தத் தூண்களை தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்தினான், அவன் வலதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு போவாஸ் என்றும் பேரிட்டான்.
1 இராஜாக்கள் 7.21
பசும்பொன் கிண்ணங்களையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும், மகா பரிசுத்தமான உள் ஆலயத்தினுடைய கதவிகளின் பொன்னான முளைகளையும், தேவாலயமாகிய மாளிகைக் கதவுகளின் பொன்னான முளைகளையும், செய்தான். 1 இராஜாக்கள் 7.50
அகிதூபின் குமாரனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் குமாரனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக்கர்த்தன்.
1 நாளாகமம் 9.11
அவர்கள் சகோதரரும், தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவரான ஆயிரத்து எழுநூற்று அறுபதுபேர் 1760 தேவாலயத்துக்கடுத்த பணிவிடைக்குத் திறமையுள்ளவர்களாயிருந்தார்கள்.
1 நாளாகமம் 9.13
தேவாலயத்தின் பண்டகசாலைகள்மேலும் பொக்கிஷசாலைகள்மேலுமுள்ள விசாரணை உத்தியோகம் லேவியரான அந்த நாலு பிரதான காவலாளர்வசத்திலே ஒப்புவிக்கப்பட்டது.
1 நாளாகமம் 9.26
காவல் அவர்களுக்கு ஒப்புவித்திருந்தபடியால் அவர்கள் தேவாலயத்தைச் சுற்றிலும் இராத்தங்கியிருந்து, காலமே கதவுகளைத் திறந்துவிடுவார்கள்.
1 நாளாகமம் 9.27
மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருக்களாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள், தங்கள் ஊழியத்தின் கிரியைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனுஷர்களின் தொகையாவது:
1 நாளாகமம் 25.1
அந்தத் தூண்களை அவன் தேவாலயத்துக்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் ஒன்றை இடதுபுறத்திலும் நாட்டி, வலதுபுறமானதற்கு யாகீன் என்றும், இடதுபுறமானதற்குப் போவாஸ் என்றும் பேரிட்டான்.
2 நாளாகமம் 3.17
பத்துப் பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளுடைய பிரமாணத்தின்படி செய்வித்து, அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்தான்.
2 நாளாகமம் 4.7
பத்து மேஜைகளையும் செய்து, அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்து, நூறு பொன் கலசங்களையும் பண்ணினான்.
2 நாளாகமம் 4.8
அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள், ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும், பாடகர் பூரிகைகள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தை தொனிக்கப்பண்ணி, கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது.
2 நாளாகமம் 5.13
SHIFTING OF TEMPLE TO CHURCH
அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள் தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
அப்போஸ்தலர் 2.46
தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார்.
அப்போஸ்தலர் 2:47
ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். அப்போஸ்தலர் 3.1
அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள். தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். அப்போஸ்தலர் 3.2
தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான்.
அப்போஸ்தலர் 3.3
அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான், நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூடத்தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.
அப்போஸ்தலர் 3.8
தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். அப்போஸ்தலர் 3.10
அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து,
அப்போஸ்தலர் 4.1
நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
அப்போஸ்தலர் 5.20
அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம்பண்ணினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்தவர்களும் வந்து, ஆலோசனைச் சங்கத்தாரையும் இஸ்ரவேல் புத்திரரின் மூப்பரெல்லாரையும் வரவழைத்து, அப்போஸ்தலர்களைக் கொண்டுவரும்படி சிறைச்சாலைக்குச் சேவகரை அனுப்பினார்கள். அப்போஸ்தலர் 5.21
இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற சேனைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இதென்னமாய் முடிமோ என்று, அவர்களைக்குறித்துக் கலக்கமடைந்தார்கள்.
அப்போஸ்தலர் 5.24
அப்பொழுது ஒருவன் வந்து; இதோ, நீங்கள் காவலில் வைத்த மனுஷர் தேவாலயத்திலே நின்று ஜனங்களுக்குப் போதகம் பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான்.
அப்போஸ்தலர் 5.25
தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள். அப்போஸ்தலர் 5.42
அப்பொழுது பவுல் அந்த மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும் சுத்திகரிப்பு செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும் வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான்.
அப்போஸ்தலர் 21.26
அந்த ஏழுநாட்களும் நிறைவேறிவருகையில், ஆசியாநாட்டிலிருந்து வந்த யூதர்கள் அவனைத் தேவாலயத்திலே கண்டு, ஜனங்களெல்லாரையும் எடுத்துவிட்டு, அவன்மேல் கைபோட்டு;
அப்போஸ்தலர் 21.27
இஸ்ரவேலரே, உதவிசெய்யுங்கள். நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்து வருகிறவன் இவன்தான். இந்தத் தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்ககொண்டுவந்து, இந்த, இந்த பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்.
அப்போஸ்தலர் 21.28
எபேசியனாகிய துரோப்பீமு என்பவன் முன்னே நகரத்தில்; பவுலுடனேகூட இருக்கிறதைக் கண்டிருந்தபடியால், பவுல் அவனைத் தேவாலயத்தில்கூட்டிக்கொண்டு வந்திருப்பானென்று நினைத்தார்கள். அப்போஸ்தலர் 21.29
பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன்.
அப்போஸ்தலர் 22.17
இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப் பார்த்தான். நாங்கள் இவனைப் பிடித்து எங்கள் வேதப்பிரமாணத்தின்படியே நியாயந்தீர்க்க மனதாயிருந்தோம். அப்போஸ்தலர் 24.6
தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம்பண்ணினதையும், நான் ஜெபஆலயங்களிலாகிலும் நகரத்திலாகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் கண்டதில்லை.
அப்போஸ்தலர் 24.12
அப்பொழுது கூட்டமில்லாமலும் அமளியில்லாமலும்; தேவாலயத்திலே சுத்திகரித்துக்கொண்டவனாயிருக்கையில், ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைக் கண்டார்கள்.
அப்போஸ்தலர் 24.18
அதற்கு அவன் உத்தரவாக; நான் யூதருடைய வேதப்பிரமாணத்துக்காகிலும், தேவாலயத்துக்காகிலும், இராயருக்காகிலும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லையென்று சொன்னான்.
அப்போஸ்தலர் 25.8
இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்யப் பிரயத்தனம் பண்ணினார்கள்.
அப்போஸ்தலர் 26.21
ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?
1 கொரிந்தியர் 9.13
அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். வெளிப்படுத்தினத விசேஷம் 14.15
பின்பு வேறொரு தூதனும் கருக்குள்ள அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான்.
வெளிப்படுத்தினத விசேஷம் 14.17
அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவாலயம் நிறைந்தது, ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கக் கூடாதிருந்தது.
வெளிப்படுத்தினத விசேஷம் 15
அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே நீங்கள் போய்த் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன்.
வெளிப்படுத்தினத விசேஷம் 16.1
அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.
வெளிப்படுத்தினத விசேஷம் 21.22
🕍🕍🕍🕍🕍🕍🕍🕍🕍🕍🕍🕍🕍
ஜெப ஆலயங்கள்...
In Biblical times and through modern tradition, a synagogue's inner division is defined by several key symbolic and functional areas.
These spaces are designed to facilitate communal prayer, the reading of the Torah, and religious study.
Key Inner Divisions of a Synagogue
The layout typically centers around these core elements:
Aron Kodesh (The Holy Ark):
This is the most sacred part of the synagogue, usually located on the wall facing Jerusalem.
It houses the Torah scrolls and is often covered by an ornate curtain called a parochet.
Bimah (The Platform):
A raised platform, often in the center or front, where the Torah is placed and read. It serves as the focal point for the service.
Amud (The Lectern):
A smaller pulpit or reading desk where the cantor or prayer leader stands to lead the congregation.
Ner Tamid (Eternal Light):
A lamp that remains lit at all times, hanging above or near the Ark, symbolizing the perpetual presence of God.
Seating Divisions:
In Orthodox traditions, there is a physical division (mechitza) or a separate gallery to separate seating for men and women.
In Reform and many modern synagogues, men and women sit together in a shared sanctuary space.
Ancient Features:
Archaeological findings from the time of Jesus (such as those at Gamla or Magdala) show synagogues with stone benches lining the walls and a central room supported by columns, keeping the interior open for the community
பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.
மத்தேயு 4.23
அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம், மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள், அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 6.5
பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார். மத்தேயு 9.35
மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் உங்களை ஆலோசளைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.
மத்தேயு 10.17
அவர் அவ்விடம் விட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்தார்.
மத்தேயு 12.9
கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர்பிரசங்கம் பண்ணிக்கொண்டும், பிசாசகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.
மாற்கு 1.39
அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப் போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான்.
லூக்கா 8.49
இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.
லூக்கா 13.14
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன், ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன், அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.
யோவான் 18.20
தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?
மத்தேயு 13.54
விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், மத்தேயு 23.6
பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள்,உடனே அவர் ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து,போதகம் பண்ணினார். மாற்கு 1.21
அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான்..
மாற்கு 1.23
உடனே அவர்கள் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யாக்கோபோடும் யோவானோடுங்கூட, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள்.
மாற்கு 1.29
மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார்,அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.
மாற்கு 3.1
அப்பொழுது,ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து,அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்து.
மாற்கு 5.22
அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து,உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள்.
மாற்கு 5.35
அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே,ஜெபஆலயத்தலைவனை நோக்கி,பயப்படாதே,விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி.
மாற்கு 5.36
ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து,சந்தடியையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு,
மாற்கு 5.38
ஓய்வுநாளானபோது,ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத் தொடய்கினார். அநேகர் கேட்டு, ஆச்சியப்பட்டு,இவைகள் இவனுக்கு எங்கேயிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
மாற்கு 6.2
ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
மாற்கு 12.39
நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெபஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்: என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்குமுன்பாக நிறுத்தப்படுவீர்கள்.
மாற்கு 13.9
அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார்.
லூக்கா 4.15
தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
லூக்கா 4.16
வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.
லூக்கா 4.20
ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு,
லூக்கா 4.28
ஜெபஆலயத்திலே அசுத்த ஆவிபிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்.
லூக்கா 4.33
பின்பு அவர் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, சீமோன் வீட்டில் பிரவேசித்தார், சீமோனுடைய மாமி கடும் ஜூரமாய்க் கிடந்தாள். அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள். லூக்கா 4.38
அந்தப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம் பண்ணிக்கொண்டுவந்தார்.
லூக்கா 4.44
வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்து உபதேசித்தார். அங்கே சூம்பின வலதுகையையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.
லூக்கா 6.6
அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெபஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.
லூக்கா 7.5
அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால்,
லூக்கா 8.41
பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைகளில் வந்தனங்களையும் விரும்புகிறீர்கள். லூக்கா 11.43
அன்றியும், ஜெபஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்.
லூக்கா 12.11
ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார். லூக்கா 13.10
நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
லூக்கா 20.46
இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.
லூக்கா 21.12
கப்பர்நகூமிலுள்ள ஜெபஆலயத்திலே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார்.
யோவான் 6.59
அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கை பண்ணினால் அவனை ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள்.
யோவான் 9.22
ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர்நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள். யோவான் 12.42
அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள், மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.
யோவான் 16.2
இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரிகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான். அப்போஸ்தலர் 9.2
சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெபஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான். அப்போஸ்தலர் 13.5
அவர்கள் பெர்கே பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்து, ஓய்வநாளிலே ஜெபஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள். அப்போஸ்தலர் 13.14
நியாயப்பிரமாணமும் தீர்கதரிசனஆகமமும் வாசித்துமுடிந்த பின்பு; சகோதரரே, நீங்கள் ஜனங்களுக்குப் புத்திசொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்று சொல்லும்படி ஜெபஆலயத்தலைவர்கள் அவர்களிடத்தில் ஆள் அனுப்பினார்கள். அப்போஸ்தலர் 13.15
அவர்கள் யூதருடைய ஜெபஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வு நாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள். அப்போஸ்தலர் 13.42
ஜெபஆலயத்தில் கூடின சபைகலைந்துபோனபின்பு, யூதரிலும் யூதமார்க்கத்தமைந்த பக்தியுள்ளவர்களிலும் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். அவர்களுடனே இவர்கள் பேசி, தேவனுடைய கிருபையிலே நிலைகொண்டிருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொன்னார்கள். அப்போஸ்தலர் 13.43
இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதரிலும் கிரேக்கரிலும் திரளான ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள்.
அப்போஸ்தலர் 14.1
மோசேயின் ஆகமங்கள் ஒய்வுநாள்தோறும் ஜெபஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான்.
அப்போஸ்தலர் 15.21
அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள். அங்கே யூதருக்கு ஒரு ஜெபஆலயம் இருந்தது.
அப்போஸ்தலர் 17.1
உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள். அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடைய ஜெபஆலயத்திற்குப் போனார்கள். அப்போஸ்தலர் 17.10
ஜெபஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான். அப்போஸ்தலர் 17.17
ஓய்வுநாள்தோறும் அவன் ஜெபஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்திசொன்னான். அப்போஸ்தலர் 18.4
அவ்விடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்னும் பேருள்ள ஒருவனுடைய வீட்டிற்கு வந்தான். அவன் வீடு ஜெபஆலயத்திற்கு அடுத்ததாயிருந்தது.
அப்போஸ்தலர் 18.7
ஜெபஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவைரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள். அப்போஸ்தலர் 18.8
அப்பொழுது கிரேக்கரெல்லாரும் ஜெபஆலயத்தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து, நியாயாசனத்துக்கு முன்பாக அடித்தார்கள். இவைகளில் ஒன்றையுங்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை.
அப்போஸ்தலர் 18.17
அவன் எபேசுபட்டணத்துக்கு வந்தபோது, அங்கே அவர்களை விட்டு நீங்கி, ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதருடனே சம்பாஷணை பண்ணினான். அப்போஸ்தலர் 18.19
அவன் ஜெபஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்ககொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக்காண்பித்தார்கள். அப்போஸ்தலர் 18.26
பின்பு பவுல் ஜெபஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய்ப்; பிரசங்கித்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ;யத்துக்கடுத்தவைகளைக்குறித்துச் சம்பாஷணைபண்ணி, புத்திசொல்லிக்கொண்டு வந்தான். அப்போஸ்தலர் 19.8
அதற்கு நான்; ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெபஆலயங்களிலே அடித்ததையும்,
அப்போஸ்தலர் 22.19
தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம்பண்ணினதையும், நான் ஜெபஆலயங்களிலாகிலும் நகரத்திலாகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் கண்டதில்லை.
அப்போஸ்தலர் 24.12
சகல ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து, தேவதூஷணஞ் சொல்லக் கட்டாயப்படுத்தினேன். அவர்கள் பேரில் மூர்க்கவெறி கொண்டவனாய் அந்நிய பட்டணங்கள் வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்.
அப்போஸ்தலர் 26.11
🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️
சபை...
Comments
Post a Comment