♥️தேவன் சந்தர்ப்பங்களின் தேவன்..♥️♥️OUR GOD IS GOD OF OPPORTUNITIES..♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️யூதாஸ் அநேக சந்தர்ப்பங்களை இயேசு கிறிஸ்துவிடம் பெற்றான்..♥️ஆனால் அந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தவில்லை..♥️♥️♥️




♥️♥️♥️♥️♥️♥️♥️

SHALOM STEWARD 
MORNING GRACE
அதிகாலை கிருபை..

♥️♥️♥️♥️♥️♥️♥️

♥️தேவன் சந்தர்ப்பங்களின் தேவன்..♥️

♥️OUR GOD IS GOD OF OPPORTUNITIES..♥️

♥️♥️♥️♥️♥️♥️♥️

♥️யூதாஸ் அநேக சந்தர்ப்பங்களை இயேசு கிறிஸ்துவிடம் பெற்றான்..

♥️ஆனால் அந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தவில்லை..

♥️1. இயேசு கிறிஸ்து தன் மன பாரத்தை முதலாவது பின்வாங்கும் விசுவாசிகளிடம் பகிர்ந்து கொள்ளுகிறார்..

அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 
மத்தேயு 26:21

♥️2. பின்வாங்கும் விசுவாசிகள் அவரோடு பந்தி இருப்பவர்களே என்பதை சுட்டிக்காட்டுகிறார்..

அவர் பிரதியுத்தரமாக: என்னோடேகூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மத்தேயு 26:23

♥️3. பின்வாங்கும் விசுவாசிகள் உணர்வடையாததினால் சபை முழுவதையும் உணர்வடைய எச்சரிக்கிறார்..

 தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார். 
யோவான் 13:11

♥️4. தொடர்ந்து உணர்வடையாததினால் கடினமாக அவன் பிறப்பைக்குறித்து வேதனை அடைகிறார்..

 மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார், ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ, அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். 
மத்தேயு 26:24

♥️5. யூதாஸ் தான்தான் அவன் என்பதை அறிந்து கொள்ள இயேசுகிறிஸ்துவின் நேரடி வார்த்தை..

அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான், அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார். 
மத்தேயு 26:25

♥️6. இறுதியாக வேதனையோடு இயேசு கிறிஸ்து உணர்வடையாத யூதாசை பின் மாற்றத்திற்கே அனுப்புகிறார்..

இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார். அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார். 
யோவான் 13:26-27

♥️7. இறுதி தருணமாக இயேசு கிறிஸ்துவின் அன்பு.. சிநேகிதன் என்றே அழைக்கிறரர்..

இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவின்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். 
மத்தேயு 26:50

♥️பின் வாங்குவதை உணராத சகோதரரே..

யூதாஸ் 7 தருணங்களையும் உதாசீனப்படுத்தி பின் மாற்றத்தின் எல்லைக்கு சென்றான்..

அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.
மத்தேயு 27.5

♥️தேவன் தரும் சந்தர்ப்பங்களை பயன் படுத்துவோம்..

♥️அவர்கள் அவரை விட்டுப் பின்வாங்கி, அவருடைய எல்லா வழிகளையும் உணர்ந்துகொள்ளாமல் போனபடியினாலும்,
யோபு 34.26

♥️விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.
எபிரேயர் 10.38-39

♥️உணர்வடைவோம் இன்றே..

அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே. இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.
2 கொரிந்தியர் 6.2

♥️♥️♥️♥️♥️♥️♥️

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை டூவிபுரம் 
தூத்துக்குடி 3

shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301

TCBA TUTICORIN 3

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

GATHERING OF SAINTS CHURCH AS FAMILY 

♥️♥️♥️♥️♥️♥️♥️

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA