gideon Thursday thought



மாற்கு சுவிசேஷம்...
இயேசு கிறிஸ்து ஊழியர், அடிமை, doulos, 

அவர்கள் புறப்பட்டுப் போகிறதை ஜனங்கள் கண்டார்கள். அவரை அறிந்த அநேகர் சகல பட்டணங்களிலுமிருந்து கால் நடையாய் அவ்விடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்னே அங்கே சேர்ந்து, அவரிடத்தில் கூடிவந்தார்கள். 
மாற்கு 6:33

இயேசு கரையில் வந்து,அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். 
மாற்கு 6:34

Because they were like sheep without a shepherd: Jesus knew that without a shepherd, sheep were in a lot of trouble. They
can’t fend for themselves against predators and have a hard time finding the food and water they need. Jesus was moved with compassion for the people among the crowd because He knew their pressing demands were prompted by great needs.

d. So He began to teach them many things: As a faithful Shepherd, Jesus took care of their most pressing need. He fed them with the Word of God.

வெகுநேரம் சென்றபின்பு, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்த, இது வனாந்தரமான இடம்,வெகுநேரமுமாயிற்று. 
மாற்கு 6:35

புசிக்கிறதற்கும் இவர்களிடத்தில் ஒன்றுமில்லை,ஆகையால் இவர்கள் சுற்றியிருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் போய், தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். 
மாற்கு 6:36

(35-44) Jesus feeds the multitude.
When the day was now far spent, His disciples came to Him and said, “This is a deserted place, and already the hour is late. Send them away, that they may go into the surrounding country and villages and buy themselves bread; for they have nothing to eat.” But He answered and said to them, “You give them something to eat.” And they said to Him, “Shall we go and buy two hundred denarii worth of bread and give them something to eat?” But He said to them, “How many loaves do you have? Go and see.” And when they found out they said, “Five,
two fish He divided among them all. So they all ate and were filled. And they took up twelve baskets full of fragments and of the fish. Now those who had eaten the loaves were about five thousand men.

a. Send them away... for they have nothing to eat: Both Jesus and the disciples saw exactly the same need among the multitude. The disciple’s solution was to get rid of the need by getting rid of the needy. Jesus saw a different solution and wanted the disciples to see it also (You give them something to eat).

b. Shall we go and buy two hundred denarii worth of bread and give them something to eat? It’s hard to know if the disciples were angry or just couldn’t believe what Jesus said. Clearly, they thought spending about a year’s income to feed this multitude for one meal was not only impossible but also a waste.

அவர் அவர்களை நோக்கி,நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள், நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குப் புசிக்கும்படி கொடுக்கக்கூடுமோ என்றார்கள். 
மாற்கு 6:37

அதற்கு அவர், உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு,போய்ப்பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து, ஜந்து அப்பங்களும், இரண்டுமீன்களும், உண்டு என்றார்கள். 
மாற்கு 6:38

அப்பொழுது எல்லாரையும் பசும்புல்லின்மேல் பந்திபந்தியாக உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். 
மாற்கு 6:39

அப்படியே வரிசை வரிசையாய், நூறு நூறுபேராகவும் ஜம்பதைம்பதுபேராகவும், உட்கார்ந்தார்கள். 
மாற்கு 6:40

அவர் அந்த ஜந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப்பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார். 
மாற்கு 6:41

எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். 
மாற்கு 6:42

மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள். 
மாற்கு 6:43

அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஜயாயிரம்பேராயிருந்தார்கள். 
மாற்கு 6:44

அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி, அவர்களைத் துரிதப்படுத்தினார். 
மாற்கு 6:45

அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின் மேல் ஏறினார். 
மாற்கு 6:46

சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது, அவரோ கரையிலே தனிமையாயிருந்தார். 
மாற்கு 6:47

அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டுவலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல் காணப்பட்டார். 
மாற்கு 6:48

அவர் கடலின் மேல் நடக்கிறதை அவாகள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி,சத்தமிட்டு அலறினார்கள். 
மாற்கு 6:49

அவர்களெல்லாரும் அவரைக் கண்டு கலக்கமடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடே பேசி. திடன்கொள்ளுங்கள்,நான் தான், பயப்படாதிருங்கள் என்று சொல்லி. 
மாற்கு 6:50

அவர்கள் இருந்த படவில் ஏறினார், அப்பொழுது காற்று அமர்ந்தது, அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள். 
மாற்கு 6:51

அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாயிருந்தபடியினால் அப்பங்களைக் குறித்து அவர்கள் உணராமற்போனார்கள். 
மாற்கு 6:52

அவர்கள் கடலைக் கடந்து கெனேசரேத்தென்னும் நாட்டிற்கு வந்து, கரைபிடித்தார்கள். 
மாற்கு 6:53

அவர்கள் படவிலிருந்து இறங்கினவுடனே, ஜனங்கள் அவரை அறிந்து. 
மாற்கு 6:54

அந்தச் சுற்றுப்புறமெங்கும் ஓடித் திரிந்து,பிணியாளிகளைப் படுக்கைகளில் கிடத்தி, அவர் வந்திருக்கிறாரென்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்து கொண்டுவந்தார்கள் 
மாற்கு 6:55

அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ,அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள், அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள். 
மாற்கு 6:56


Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA