⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️ஆராதனையில் சகோதரர்கள் தவிர்க்க வேண்டிய சில வார்த்தைகள்⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
⚠️ஆராதனையில் சகோதரர்கள் தவிர்க்க வேண்டிய சில வார்த்தைகள்⚠️
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன். நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.
1 கொரிந்தியர் 13:11
காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்.
எபிரேயர் 5:12
பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்.
எபிரேயர் 5:13
பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானோந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.
எபிரேயர் 5:14
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
⚠️1. நிர்வாண கோலம்...
கிறிஸ்து சிலுவையில் பாடு படும் போது அவருடைய வஸ்திரங்களை கழற்றி..வேறு வஸ்திரம் உடுத்தி என்று தான் வேதம் தெளிவாக கூறுகிறது..
எங்கேயும் நிர்வாணம் என்ற வார்த்தை பயன்படுத்தவில்லை..
கவனியுங்கள் :
அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, ✨மத்தேயு 27.28
அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக்கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். ✨மத்தேயு 27.31
அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். ✨மாற்கு 15.20
நான் என்னுடைய 27 வது வயதில் ஆராதனை தியானம் sthanapathy magazine ல் எழுதினேன். நானும் அறியாமல் இந்த வார்த்தையை பயன்படுத்தினேன்.
காலம் சென்ற கர்த்தருக்குள் இளைப்பாறும் மூத்த சகோ J அம்புரோஸ் அந்த நாட்களில் மொபைல் போன் வசதி இல்லாததால் ஒரு நீண்ட கடிதம் அன்புடன் வரைந்தார்.
இந்த வார்த்தையை தவிர்க்க எனக்கு அறிவுரை எழுதினார்..
இந்த அறிவுரை கீதங்களும் கீர்த்தனைகளும் பாடல் 122 ல்..மாற்றமும் ஏற்பட வழி செய்தது..
ஏற்கனவே இருந்த வரிகள் இவ்வாறு மாற்றப்பட்டன..
" சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன்
*நிர்ப்பந்தக்* ( நிர்வாண ) கோலமாய் நிற்பதை காண்பேனோ!
இந்த வார்த்தையை நம் ஸ்தோத்திர வேளையிலும் சிலுவை தியான வேளையிலும் தவிர்ப்போம்..
⚠️2. மரணங்கள்..
கிறிஸ்துவின் பாடுகள், மரணம் இதுவே சரியானது..
ஒரே மரணம், ஒரே பலி, ஒரே அடக்கம், ஒரே உயிர்த்தெழுதல்..
மரணங்கள் அல்ல..கிறிஸ்துவின் மரணம்..
⚠️3. இரத்தங்கள்..
இயேசு கிறிஸ்துவின் இரத்தம்..என்ற பதம் மட்டுமே வேதத்தில் காண்கிறோம்..
பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஐலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
1 யோவான் 5.8
⚠️4. ஸ்தோத்திரம் செய்யும் போது
" *வேண்டிக் கேட்டு கொள்கிறோம்* " என்பதை தவிர்க்க வேண்டும்..
ஆராதனை என்பது கர்த்தருக்கு செலுத்தும் நேரமே அன்றி பெற்றுக்கொள்ள வேண்டிக்கொள்ளும் நேரம் அல்ல..
ஆவியோடும் உண்மையோடும்
ஆராதனை செய்பவர்கள் ஆசிர்வாதம் வேண்டிக்கொள்ளமலே பெற்றுக்கொள்வார்கள் என்பது சத்தியம்.
அப்படியானால்
" இந்த நன்றி ஸ்தோத்திர பலிகளை எறெடுத்துப் படைக்கிறோம்..ஏற்றுக்கொள்ளும் " என்பதே சரியான பதம் ஆகும்..
⚠️5. குமாரனின் சிலுவை மரணத்தையோ தேவனுடைய அன்பையோ வேறே எந்த வேத நிகழ்வுடன் ஒப்புமை செய்ய கூடாது...
2 நிஜ நிகழ்வை கவனியுங்கள் :
@ தேவனுடைய அன்பை ஒரு சகோதரன் ஆராதனையில் இவ்வாறு பகிர்கிறார்..
" ஷாஜகான் தன் மூன்றாவது மனைவிக்காக தாஜ் மஹால் கட்டின உலக அன்பின் நினைவு எவ்வளவு ஆச்சரியம் "..
அதே போல....????
உடனே அந்த நாளிலே சகோதரரிடம் விவரித்து சரி செய்யப்பட்டது..
@ சாலமோன் ஒரு பிள்ளையை கொன்று பகிர்ந்து கொள்ளுங்கள் என்கிற சம்பவத்தை கிறிஸ்துவின் சிலுவை மரணத்துக்கு ஒப்புமை செய்ய ஒரு சகோதரர் முயற்சி செய்தார்..
தவிர்க்க வேண்டும்..
CHRIST DEATH & GOD'S LOVE INCOMPARABLE...
⚠️6. சிலுவை தியானத்தில் கிறிஸ்துவின் அன்பை தனிப்பட்ட விசுவாசி உணர்ந்து அதை சபை நடுவில் வெளிப்படுத்துவது..ஆராதனை ஆகும்..
விளக்குவது அல்ல..
*WORSHIP IS NOT EXPLAINING
IT'S EXPRESSING..*
⚠️7. ஓய்வு நாள்...
ஆராதனை ஸ்தோத்திரம் ஏறெடுக்கும் சமயத்தில் வாரத்தின் முதல் நாள் அல்லது கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் என்று தான் குறிப்பிட வேண்டும்..
வேதத்தில் இரட்சிப்பின் திட்டத்தில் காலங்களும், நாட்களும் மிக மிக இன்றியமையாதவை..
வேதத்தில் ஒவ்வொரு நாளும் அந்தந்த நாளுக்குரிய முக்கியத்துவம் உண்டு..செயல்பாடுகளும் உண்டு..
🍅ஓய்வு நாள்..கிறிஸ்து சிருஸ்டிப்பு முடித்து இளைப்பாறின நாள்..
🍅கர்த்தருடைய நாள்
🍅கோபாக்கினையின் மகா நாள்
🍅கிறிஸ்துவின் நாள்
🍅இயேசு கிறிஸ்துவின் நாள்
🍅தேவனுடைய நாள்
🍅வாரத்தின் முதல் நாள்..
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
GATHERING OF SAINTS CHURCH AS FAMILY
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
Comments
Post a Comment