TCBA @ஆராதனை தியானம் ✨✨✨✨✨✨✨✨நீங்கள் சாகாதபடிக்கு


✨✨✨✨✨✨✨✨

TCBA @ஆராதனை தியானம் 

✨✨✨✨✨✨✨✨

நீங்கள் சாகாதபடிக்கு

✨✨✨✨✨✨✨✨

⚠️நீங்கள் சாகாதபடிக்கு..

🍒1. புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம்

ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். ஆதியாகமம் 3:3

🍒ஜீவனுள்ள தேவன்
🍒ஜீவனுள்ள குமாரன்
🍒ஜீவனுள்ள ஆவியானவர்

பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். 
ஆதியாகமம் 1:26

இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல, பாவமே எனக்கு மரணமாயிற்று, பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.
 ரோமர் 7:13

⚠️பாவம் மரணம் என்கிற தேவ பிரமாணத்தை பிறப்பித்தது..

🍒2. கர்த்தருடைய காவலைக் காக்கக்கடவீர்கள்

 நீங்கள் சாகாதபடிக்கு ஏழுநாள் இரவும் பகலும் ஆசரிப்புக்கூடார வாசலிலிருந்து, கர்த்தருடைய காவலைக் காக்கக்கடவீர்கள், இப்படி நான் கற்பிக்கப்பட்டேன் என்றான். மோசே...
லேவியராகமம் 8.35

⚠️தேவ நீதி...

🍒3. கர்த்தர் கொளுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக.

மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக, உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொளுத்தின இந்த அக்கினிக்ககாகப் புலம்புவார்களாக. லேவியராகமம் 10.6

⚠️தேவப் பிரமாணம்..

🍒4. ஆசரிப்புக்கூடார வாசலிலிருந்து புறப்படாதிருங்கள்

நீங்கள் சாகாதபடிக்கு ஆசரிப்புக்கூடார வாசலிலிருந்து புறப்படாதிருங்கள்,; கர்த்தருடைய அபிஷேகதைலம் உங்கள்மேல் இருக்கிறதே என்றான், அவர்கள் மோசேயினுடைய வார்த்தையின்படியே செய்தார்கள். லேவியராகமம் 10.7

⚠️தேவ பிரசன்னம்

🍒5. பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தலாகாது

இப்படி அதில் உச்சிதமானதை ஏறெடுத்துப் படைத்தீர்களானால், நீங்கள் அதினிமித்தம் பாவம் சுமக்கமாட்டீர்கள், நீங்கள் சாகாதிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரரின் பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தலாகாது என்று சொல் என்றார். எண்ணாகமம் 18.32

⚠️தேவ பரிசுத்தம்

✨✨✨✨✨✨✨✨

⚠️நீங்கள் பிழைக்கும்படிக்கு

அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார். 
1 கொரிந்தியர் 1:31

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். 
2 கொரிந்தியர் 5:21

🍒1.நன்மையைத் தேடுங்கள்.

நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள். அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார். ஆமோஸ் 5:14

🍒2.நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேன்.

தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேன். 
கலாத்தியர் 2:17

🍒3.சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. 

இதற்காக மரித்தோரானவர்கள், மனுஷர்முன்பாக மாம்சத்திலே அக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக, அவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. 
1 பேதுரு 4:6

🍒4: தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினார்..

தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. 
1 யோவான் 4:9

🍒5. அவர் எல்லாருக்காவும் மரித்தார்

பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காவும் மரித்தாரென்று நிதானிக்கிறோம். 
2 கொரிந்தியர் 5.15

🍒6. அவர் நமக்காக மரித்தாரே. 

நாம் விழித்திருப்பவர்களானாலும், நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே. 
1 தெசலோனிக்கேயர் 5.10

🍒7. நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். 

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். 
1 பேதுரு 2.25

ஜீவனுள்ள தேவனை ஜீவனுள்ள சபையாக ஜீவ பலியாக படைத்து ஆராதிப்போம்..

🧠🧠🧠🧠🧠🧠🧠🧠
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
🧠🧠🧠🧠🧠🧠🧠🧠

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA