வேதம் ஏன் விதவைகளுக்கு பிரமாணமும் சபைகளுக்கடுத்த பொறுப்புகளும் உபதேசமும் வலியுறுத்தி கூறுகிறது...
🧠வேதம் ஏன் விதவைகளுக்கு பிரமாணமும் சபைகளுக்கடுத்த பொறுப்புகளும் உபதேசமும் வலியுறுத்தி கூறுகிறது...🧠
வேதம் விதவைகளைப் பற்றி அதிகம் பேசுவதற்குக் காரணம், பண்டைய சமூகங்களில் அவர்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மிகவும் vulnerable (பாதிக்கப்படக்கூடிய) நிலையில் இருந்ததால்தான்;
கணவனை இழந்த பெண்களுக்குப் பாதுகாப்பும், ஆதரவும், நீதியும் தேவைப்பட்டது,
மேலும், விதவைகளின் விசுவாசம், ஜெபம், தேவன் மீதுள்ள நம்பிக்கை ஆகியவற்றைக் குறித்தும் வேதம் வலியுறுத்துகிறது.
🌺விதவைகளைப் பற்றி வேதம் பேச முக்கிய காரணங்கள்:
🍒பொருளாதாரப் பாதுகாப்பின்மை:
பண்டைய கலாச்சாரங்களில், பெண்கள் பெரும்பாலும் தங்கள் கணவரின் வருமானத்தையே நம்பியிருந்தனர். கணவர் இறந்த பிறகு, சொத்துரிமை, வேலைவாய்ப்பு போன்ற வசதிகள் இல்லாமல் பெண்கள் வறுமையில் வாடினர்.
🍒சமூகப் பாதுகாப்பு:
விதவைகளுக்கு சமூகத்தில் போதுமான ஆதரவு இல்லை. அவர்களைச் சுரண்டுபவர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டியிருந்தது, எனவே தேவன் அவர்களுக்குச் சிறப்புப் பாதுகாப்பு அளித்தார்.
🍒கடவுளின் நீதியும் இரக்கமும்:
கடவுள் தன்னை விதவைகள், அனாதைகள் மற்றும் அந்நியர்களுக்கு நீதியைச் செய்பவர் என்று கூறுகிறார். அவர்களது கண்ணீருக்குக் கடவுள் செவிமடுப்பார் என்று வேதம் கூறுகிறது.
🍒விசுவாசத்தின் முன்மாதிரி:
லூக்கா 18:1-7ல் உள்ள நீதிக்கதை போன்ற பல இடங்களில், விடாமுயற்சியுடன் ஜெபம் செய்யும் விதவைகளின் விசுவாசம், தேவனை நம்புவதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
🍒சமூகத்தின் பொறுப்பு:
சமூகத்தில் உள்ள மற்றவர்கள், குறிப்பாக பணக்காரர்கள், விதவைகளின் துயரத்தைப் புறக்கணிக்காமல் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று வேதம் கட்டளையிடுகிறது (Proverbs 23:6).
ஆகவே, வேதம் விதவைகளைப் பற்றி அதிகம் குறிப்பிடுவது, அவர்களின் துன்ப நிலைமையைக் குறித்தும், அவர்களுக்குத் தேவன் அளிக்கும் ஆதரவு குறித்தும், அவர்கள் விசுவாசத்தில் முன்மாதிரியாக இருப்பதைக் குறித்தும் வலியுறுத்துகிறது.
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
🌺விதவைகள் குறித்த வேத பிரமாணம்..
விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக.
யாத்திராகமம் 22.22
விதவையாய்ப்போன, அல்லது தள்ளப்பட்டவளான ஆசாரியனுடைய குமாரத்தி பிள்ளையில்லாதிருந்து, தன் தகப்பன் வீட்டில் தன்னுடைய இளவயதில் இருந்ததுபோல திரும்பவந்து இருந்தாளேயாகில், அவள் தன் தகப்பன் ஆகாரத்தில் புசிக்கலாம்,; அந்நியனாகிய ஒருவனும் அதில் புசிக்கலாகாது.
லேவியராகமம் 22.13
ஒரு விதவையாவது, தள்ளப்பட்டுப்போன ஒரு ஸ்திரீயாவது தன் ஆத்துமாவை எந்த நிபந்தனைக்குட்படுத்திக்கொள்கிறாளோ அந்த நிபந்தனை நிறைவேறவேண்டும்.
எண்ணாகமம் 30.9
🌺விதவைகள் குறித்த தேவ கரிசனம்..
1. லேவியனும்
2. பரதேசியும்
3. திக்கற்ற பிள்ளையும்
4. விதவையும்
🙏அவர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார். உபாகமம் 10.18
🙏உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,
உபாகமம் 16.11
🙏உன் பண்டிகையில் நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்.
உபாகமம் 16.14
🙏நீ அந்நியனுடைய நியாயத்தையும் திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும் புரட்டாமலும், விதவையின் வஸ்திரத்தை அடகாக வாங்காமலும் இருந்து, உபாகமம் 24.17
🙏நீ உன் பயிரை அறுக்கையில் உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாய் வைத்துவைத்தாயானால், அதை எடுத்து வரும்படி திரும்பிப்போகவேண்டாம், உன் தேவனாகிய கர்த்தர் உன் கைப்பிரயாசத்திலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி, அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.
உபாகமம் 24.19
🙏நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்துவிட்டபின்பு, கொம்பிலே தப்பியிருக்கிறதைப் பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம், அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக, உபாகமம் 24.20
🙏நீ உன் திராட்சப்பழங்களை அறுத்தபின்பு, மறுபடியும் அதை அறுக்கத் திரும்பிப்போகவேண்டாம், அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.
உபாகமம் 24.21
🙏தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து,
1. லேவியனும்
2. பரதேசியும்
3. திக்கற்ற பிள்ளையும்
4. விதவையும்
உன் வாசல்களில் புசித்துத் திர்ப்தியாகும்படி, அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு, உபாகமம் 26.12
🙏1.பரதேசி
2. திக்கற்றவன்
3. விதவை
ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக, ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். உபாகமம் 27.19
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
விதவைகள் குறித்த சில சரித்திர நிகழ்வுகள்..மற்றும் பழைய ஏற்பாடு நியமங்கள்..
ராஜா அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்றதற்கு, அவள்: நான் விதவையானவள். என் புருஷன் சென்றுபோனான்.
2 சாமுவேல் 14.5
நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றான்.
1 இராஜாக்கள் 17.9
பிள்ளைபெறாத மலடியின் ஆஸ்தியைப் பட்சித்துவிட்டு, விதவைக்கு நன்மை செய்யாதேபோகிறான்.
யோபு 24.21
கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது. விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன்.
யோபு 29.13
பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார், அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார், துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார். சங்கீதம் 146.9
அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்: விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார். நீதிமொழிகள் 15.25
நன்மைசெய்யப் படியுங்கள், நியாயத்தைத் தேடுங்கள், ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.
ஏசாயா 1.17
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
♥️இயேசு கிறிஸ்து விதவைகள் பற்றி என்ன கூறுகிறார்?
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள், இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள். மத்தேயு 23.14
விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்டஜெபம் பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்: அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.
மாற்கு 12.40
விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.
லூக்கா 20.47
♥️விதவைகள் மேல் கரிசனையும் அதை சார்ந்து சில உபதேசங்களும்..
ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசைப் போட்டாள்.
அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து,காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மாற்கு 12.42-43
ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:
இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப்பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 21.2-3
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள். லூக்கா 2.37
அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.
ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை.
லூக்கா 4.25-26
அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள், அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினாள்.
இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.
லூக்கா 18.3-5
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
🧠சபை ஆரம்பிக்கப்பட்டு ஆதி திருச்சபை தோன்றும் காலங்களில்..
அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட விசாரனையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.
அப்போஸ்தலர் 6.1
பேதுரு எழுந்து, அவர்களுடனே கூடப்போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது தொற்காள் தங்களுடனேகூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள்.
அப்போஸ்தலர் 9.39
அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்கு முன் நிறுத்தினான்.
அப்போஸ்தலர் 9.41
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
🧠பவுல் தீமோத்தேயுவுக்கு மட்டும் விதவைகள் பற்றி ஏன் எழுதுகிறார்,?
🧠ஏனெனில் தீமோத்தேயு எபேசு சபையை வழிநடத்தும் ஒரு இளம் போதகர்,
மேலும் அந்தச் சபையில் இருந்த விதவைகளை நிர்வகிப்பதற்கும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் முறையை நிறுவுவதற்கும் பவுல் அவருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குகிறார்;
இது சபையின் ஒழுங்கு மற்றும் குடும்பப் பொறுப்புகளை வலியுறுத்துகிறது, குறிப்பாக குடும்பத்தினர் விதவைகளுக்கு முதலில் உதவ வேண்டும் என்று கூறுகிறார்.
🌸பவுல் ஏன் தீமோத்தேயுவுக்கு எழுதினார்?
🌸இளம் போதகருக்கு வழிகாட்டுதல்:
தீமோத்தேயு இளமையாக இருந்ததால், சபையை வழிநடத்தவும், போலிப் போதனைகளை எதிர்கொள்ளவும், சபை ஒழுங்கைக் கடைப்பிடிக்கவும் பவுல் விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.
🌸எபேசு சபையின் சூழ்நிலை:
எபேசு சபையில் மூடநம்பிக்கைகள் நுழைந்திருந்தன, மேலும் சபையின் நிர்வாகத்திலும், செயல்பாடுகளிலும் ஒழுங்கைக் கொண்டுவர வேண்டிய தேவை இருந்தது.
🌸விதவைகளுக்கான பட்டியல்:
சபையில் பொருளாதார ரீதியாக ஆதரிக்கப்படும் ஒரு விதவைகள் பட்டியல் (enrollment) இருந்தது. அந்தப் பட்டியலில் யார் சேர்க்கப்பட வேண்டும், அவர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்று பவுல் வழிகாட்டினார்.
1. உத்தம விதவைகள்
உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு.
1 தீமோத்தேயு 5.3
உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.
1 தீமோத்தேயு 5.5
பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக் குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
1 தீமோத்தேயு 5.10
2. குடும்பம் உள்ள விதவைகள்..
விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக்கற்றுக்கொள்ளக்கடவர்கள். அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.
1 தீமோத்தேயு 5.4
விசுவாசியாகிய ஒருவனிடத்திலாவது ஒருத்தியிலிடத்திலாவது விதவைகளிருந்தால், அவர்கள் இவர்களுக்கு உதவிசெய்யக்கடவர்கள். சபையானது உத்தம விதவைகளானவர்களுக்கு உதவிசெய்யவேண்டியதாகையால் அந்தப் பாரத்தை அதின்மேல் வைக்கக்கூடாது.
1 தீமோத்தேயு 5.16
3. இளவயதுள்ள விதவைகள்
இளவயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே. ஏனெனில், அவர்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்க் காமவிகாரங்கொள்ளும்போது விவாகம்பண்ண மனதாகி,
1 தீமோத்தேயு 5.11
ஆகையால் இளவயதுள்ள விதவைகள் விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன்.
1 தீமோத்தேயு 5.14
சபையின் பொறுப்பு என்ன?
தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைப்படாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
யாக்கோபு 1.27
Comments
Post a Comment