சபைக்கு செய்தி🤝🤝🤝🤝🤝🤝🤝 புது உடன்படிக்கை 🤝🤝🤝🤝🤝🤝🤝

சபைக்கு செய்தி

🤝🤝🤝🤝🤝🤝🤝

புது உடன்படிக்கை 

🤝🤝🤝🤝🤝🤝🤝

TCBA @ சபைக்கு செய்தி 

🤝🤝🤝🤝🤝🤝🤝

⚠️1. யோனத்தான் தாவீது செய்த உடன்படிக்கை..

அவன் சவுலோடே பேசி முடித்தபின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது. யோனத்தான் அவனைத் தன் உயிரைப் போலச் சிநேகித்தான். 
1 சாமுவேல் 18:1

சவுல் அவனை அவன் தகப்பன் வீட்டுக்குத் திருப்பிப்போக ஒட்டாமல், அன்றுமுதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான். 
1 சாமுவேல் 18:2

யோனத்தான் தாவீதைத்தன் ஆத்துமாவைப்போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள். 
1 சாமுவேல் 18:3

⚠️2. யோனத்தான் தாவீதின் குடும்பத்தோடு உடன்படிக்கை..

கர்த்தர் தாவீதின் சத்துருக்களாகிய ஒவ்வொருவரையும் பூமியின்மேல் இராதபடிக்கு, வேர்அறுக்கும் போதும், நீர் என்றைக்கும் உமது தயவை என் வீட்டைவிட்டு அகற்றிவிடாமலும் இருக்கவேண்டும் என்றான். 
1 சாமுவேல் 20:15

இப்படி யோனத்தான் தாவீதின் குடும்பத்தோடே உடன்படிக்கைபண்ணி, தாவீதுடைய சத்துருக்களின் கையிலே கர்த்தர் கணக்குக் கேட்பாராக என்று சொல்லி, 
1 சாமுவேல் 20:16

யோனத்தான் தாவீதை மிகவும் நேசித்தபடியினால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான். தன் உயிரைச் சிநேகித்ததுபோல அவனைச் சிநேகித்தான். 
1 சாமுவேல் 20:17

⚠️3. கிறிஸ்து நம்மோடும், நம் குடும்பத்தோடும், நம் இருதயத்தோடும் உடன்படிக்கை 

இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார். 
எபிரேயர் 8:6

அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே. 
எபிரேயர் 8:7

அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங் காலம் வருகிறது. 
எபிரேயர் 8:8

அவர்களுடைய பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை. அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 
எபிரேயர் 8:9

அந்த நாட்களுக்குப்பின் நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன். நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஐனமாயிருப்பார்கள். 
எபிரேயர் 8:10

அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள். ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை. 
எபிரேயர் 8:11

ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 
எபிரேயர் 8:12

புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார். பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது. 
எபிரேயர் 8:13

⚠️4. யோனத்தான் மரித்த பின்பும் தாவீது உடன்படிக்கை காப்பாற்றி ராஜ அந்தஸ்து கொடுக்கிறார்.


யோனத்தான் நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான். 
2 சாமுவேல் 9:1

அப்பொழுது சவுலின் வீட்டுவேலைக்காரனாகிய சீபா என்னும் பேருள்ளவனைத் தாவீதினிடத்தில் அழைத்துவந்தார்கள். ராஜா அவனைப் பார்த்து: நீதானா சீபா என்று கேட்டான். அவன் அடியேன் தான் என்றான். 
2 சாமுவேல் 9:2

அப்பொழுது ராஜா: தேவன் நிமித்தம் நான் சவுலினு குடும்பத்தாருக்குத் தயை செய்யும்படி யாதொருவன் இன்னும் மீதியாயிருக்கிறானா என்று கேட்டதற்கு சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான் என்றான். 
2 சாமுவேல் 9:3

சீபா, ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானாகிய நான் செய்வேன் என்றான். ராஜ குமாரரில் ஒருவனைப் போல, மேவிபோசேத் என் பந்தியிலே அசனம் பண்ணுவான் என்று ராஜா சொன்னான். 
2 சாமுவேல் 9:11

மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் நித்தம் அசனம்பண்ணுகிறவனாயிருந்த படியினால், எருசலேமிலே குடியிருந்தான். அவனுக்கு இரண்டுகாலும் முடமாயிருந்தது. 
2 சாமுவேல் 9:13

⚠️ 5. நித்திய உடன்படிக்கையின் பெரிய மேய்ப்பர் சமாதானத்தின் தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து..

நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், 
எபிரேயர் 13:20

இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக. அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். 
எபிரேயர் 13:21

சகோதரரே, நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். 
எபிரேயர் 13:22

@brsermaraja

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 3

🍒🍒🍒🍒🍒🍒🍒

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA