✨✨✨✨✨✨✨♥️கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே.♥️♥️மீட்கும் பொருள் தேவனுக்கு கொடுக்க கூடாதே ♥️
✨✨✨✨✨✨✨
♥️TCBA @ ஆராதனை சிந்தனை ♥️
✨✨✨✨✨✨✨
♥️கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே.♥️
♥️மீட்கும் பொருள் தேவனுக்கு கொடுக்க கூடாதே ♥️
✨✨✨✨✨✨✨
🌺தியான பகுதி :
எண்ணாகமம் 3:39-51
🍒எண்ணாகமம் புத்தகம் 5 ஆகமங்களில் 4 வது புத்தகம்..
⚠️1. ஆதியாகமம் :
இரட்சிப்பு திட்டமிடப்பட்டது
Salvation Panned
⚠️2. யாத்திராகமம் :
இரட்சிப்பு ஆரம்பமானது
Salvation Commenced
⚠️3.லேவியராகமம் :
இரட்சிப்பு பரிசுத்தமானது
Salvation Holy
⚠️4. எண்ணாகமம் :
இரட்சிப்பு எண்ணப்படுகிறது
Salvation Valued
⚠️5. உபாகமம் :
இரட்சிப்பு நிறைவேறுகிறது
Salvation Completed
🍒🍒🍒🍒🍒🍒🍒
✨வேத பகுதி :
✨எண்ணாகமம் 3 இந்த வேத பகுதியில் இரட்சிப்பின் மனிதர்கள் அதாவது மீட்கப்பட்டவர்கள் எவ்வாறு எண்ணப்பட்டு மதிப்பிடப்படுகிறார்கள் என்று கவனியுங்கள்..
✨வாசிப்போம்:
மோசேயும் ஆரோனும், கர்த்தருடைய வாக்கின்படி, லேவியரில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படியே எண்ணினார்கள்,; அவர்கள் இருபத்தீராயிரம்பேராயிருந்தார்கள்.
எண்ணாகமம் 3:39
⚠️லேவியர்கள்
22000
அதன்பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேரான ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணி, அவர்கள் நாமங்களைத் தொகையேற்றி,
எண்ணாகமம் 3:40
இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேரான யாவுக்கும் பதிலாக லேவியரையும், இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களிலுள்ள தலையீரான யாவுக்கும் பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் எனக்கென்று பிரித்தெடு,; நான் கர்த்தர் என்றார்.
எண்ணாகமம் 3:41
அப்பொழுது மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவரையும் எண்ணினான்.
எண்ணாகமம் 3:42
ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளெல்லாரும் பேர்பேராக எண்ணப்பட்டபோது, இருபத்தீராயிரத்து இருநூற்று எழுபத்துமூன்றுபேராயிருந்தார்கள்.
எண்ணாகமம் 3:43
⚠️முதற்பேரானவர்கள்
22273
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
எண்ணாகமம் 3:44
நீ இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவருக்கும் பதிலாக லேவியரையும், அவர்களுடைய மிருகஜீவன்களுக்குப் பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் பிரித்தெடு,; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள், நான் கர்த்தர்.
எண்ணாகமம் 3:45
இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறுகளில் லேவியரின் தொகைக்கு அதிகமாயிருந்து, மீட்கப்படவேண்டிய இருநூற்று எழுபத்துமூன்றுபேரிடத்திலும்,
எண்ணாகமம் 3:46
⚠️முதற்பேரானவர்கள் - லேவியர்கள் =???
22273 - 22000 = 273
⚠️22000 எவ்வாறு வந்தது?
7500 ( எண் 3:22 )
8600 ( எண் 3:28 )
6200 ( எண் 3:34 )
மொத்தம் : 22300
⚠️ஆனால் 22300 - 22000
வித்தியாசம் 300
=================
i. “The total of 22,000 Levites given in Numbers 3:39 does not tally with the totals of the individual clans given in Numbers 3:22, 28, 34 which come to 22,300.
The discrepancy is most easily explained as textual corruption in Numbers 3:28.
The number of Kohathites may originally have been 8,300. 3 (Hebrew sls) could quite easily have been corrupted into 6 (ss).” (Wenham)
=================
🍒 முதற்பேரானவர்கள் லேவியரின் தொகைக்கு இன்னும் அதிகமாக இருக்கிறார்கள்..
இவர்களை மீட்க வேண்டும்
⚠️273 பேர் ( வேத கணக்கு )
நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்குவாயாக, அந்தச் சேக்கலானது இருபது கேரா.
எண்ணாகமம் 3:47
⚠️ஒரு லேவியரின் கிரயம்
= 5 பரிசுத்த சேக்கல்
⚠️273 x 5 = 1365
பரிசுத்த சேக்கல்
லேவியருடைய தொகைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் திரவியத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுப்பாயாக என்றார்.
எண்ணாகமம் 3:48
அப்படியே லேவியரால் மீட்கப்பட்டவர்களின் தொகைக்கு அதிகமாயிருந்து, இன்னும் மீட்கப்படவேண்டியவர்களுக்கு ஈடாக மோசே இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறானவர்களிடத்தில்,
எண்ணாகமம் 3:49
ஆயிரத்து முன்நூற்று அறுபத்தைந்து ( 1365 ) சேக்கலாகிய திரவியத்தை, பரிசுத்த ஸ்தலத்துச் சேக்ககல் கணக்கின்படி வாங்கி,
எண்ணாகமம் 3:50
கர்த்தருடைய வாக்கின்படியே மீட்கப்பட்டவர்களின் கிரயத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும், கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே கொடுத்தான்.
எண்ணாகமம் 3:51
⚠️1365 பரிசுத்த சேக்கல் கிரயம் செலுத்தப்பட்டு அதிகமான முதற் பேரான இஸ்ரவேலர் லேவியரோடு இணைக்கப்படுகிறார்கள்..
♥️♥️♥️♥️♥️♥️♥️
🌺ஆராதனை சிந்தை..
♥️முதற்பேறானவர் இயேசு கிறிஸ்து..
எபிரேயர் 1:16
லூக்கா 2:23
ரோமர் 8:29
லூக்கா 2:7
மத்தேயு 1:25
♥️ஒரே பேறானவர் இயேசு கிறிஸ்து
யோவான் 1:14
யோவான் 1:18
யோவான் 3:16,18
எபிரேயர் 11:19
1 யோவான் 4:9
♥️இந்த வசனத்தை கவனியுங்கள்..
ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ?
✨என் அக்கிரமத்தைப் போக்க என் முதற் பேறானவனையும்,
✨ என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும்
( ஒரே பேறானவர் ) கொடுக்க வேண்டுமோ?
மீகா 6:7
🍒பாவத்தைப் போக்க
முதற் பேறானவர், ஒரே பேறானவர் கொடுக்கப்பட வேண்டும்?
🍒மீட்கும் பொருள் கொடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பது பிரமாணம்..
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப்பார்க்கும் பொருட்டு, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடிக்கு, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கக்கடவன்.
யாத்திராகமம் 30:11-12
🍒ஆத்துமாவுக்காக மீட்கும் பொருள் எவராலும் கொடுக்கப்பட முடியாது..
காரணம்..
சங்கீதம் 49:6-9
அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது, அது ஒரு போதும் முடியாது.
சங்கீதம் 49:9
✨✨✨✨✨✨✨
♥️கிறிஸ்து தம்மையே மீட்கும் பொருளாக..
கிரயமாக தந்து நம்மை மீட்டுகொண்டார்..
உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,
குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
1 பேதுரு 1:18-19
♥️கிரயத்தின் மேன்மை கவனியுங்கள்..
🍅1. கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
1 கொரிந்தியர் 6:20
🍅2. நீங்கள் கிரயத்துக்குகொள்ளப்பட்டீர்கள். மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.
1 கொரிந்தியர் 7:23
🍅3. கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி,
⚠️ தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை⚠️
மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
2 பேதுரு 2:1
🍅4. ஆகையால், உங்களைக்குறித்தும்,
⚠️தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே ( கிரயம் ) சம்பாதித்துக்கொண்ட ⚠️
தமது சபையை மேய்ப்பதற்கு பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.
அப்போஸ்தலர் 20:28
✨✨✨✨✨✨✨✨
⚠️தொழுகை
( ச ) சாத்தியம்..
தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர், ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று
♥️உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு ( கிரயம் : மீட்கும் பொருள் ) ♥️
எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர், நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
வெளிப்படுத்தினத விசேஷம் 5:9-10
🤝LET'S HAVE A MEANINGFUL WORSHIP THIS FIRST SUNDAY 2026🤝
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 3
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
+91 9444242318
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
GATHERING OF SAINTS CHURCH AS FAMILY
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment