♥️♥️♥️♥️♥️♥️♥️♥️திருச்சபையின் 6 முக்கிய தேவபக்தியுடன் இணைந்த பொறுப்புகள் ♥️♥️ SIX GODLINESS RESPONSIBILITIES OF THE CHURCH♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
♥️♥️♥️♥️♥️♥️♥️
♥️திருச்சபையின்
6 முக்கிய தேவபக்தியுடன் இணைந்த பொறுப்புகள் ♥️
♥️SIX GODLINESS RESPONSIBILITIES OF THE CHURCH♥️
♥️♥️♥️♥️♥️♥️♥️
♥️1 தீமோத்தேயு
6 நிருபங்களின் தலைப்புகள் ♥️
♥️♥️♥️♥️♥️♥️♥️
TCBA @ FRIDAY BIBLE STUDY
♥️♥️♥️♥️♥️♥️♥️
⚠️1 தீமோத்தேயுவின் பின்னணி..
என்னவென்றால், அப்போஸ்தலன் பவுல், தனது சீடரும் எபேசு சபையின் தலைவருமான இளைய தீமோத்தேயுவுக்கு எழுதிய போதனைக் கடிதம்;
இதில் தவறான போதனைகளைத் தடுத்து, சபையை வழிநடத்தவும், சரியான உபதேசத்தைப் போதிக்கவும், தலைவர்களுக்குத் தேவையான தகுதிகளைப் பற்றி ஆலோசனை வழங்கினார்;
கி.பி. 62-66 காலப்பகுதியில் பவுல் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, மக்கதோனியாவிலிருந்து எழுதியதாகக் கருதப்படுகிறது.
⚠️பின்னணி தகவல்கள்:
ஆசிரியர்: அப்போஸ்தலன் பவுல்
(1 தீமோ 1:1).
பெறுநர்: தீமோத்தேயு, பவுலின் விசுவாசத்தில் உண்மையான மகன், எபேசு சபையின் தலைவர்.
காலம்: கி.பி. 62-66 வரை, பவுல் சிறையில் இருந்து விடுதலையான பின் மக்கதோனியாவிலிருந்து எழுதியதாகக் கருதப்படுகிறது.
⚠️எழுதப்பட்ட நோக்கம்:
எபேசு சபையில் பரவியிருந்த தவறான போதனைகளை (கட்டுக்கதைகள், சட்டங்களைப் பற்றிய தவறான புரிதல்கள்) எதிர்த்து, சரியான உபதேசத்தைப் போதித்து, சபையை ஒழுங்கமைக்க தீமோத்தேயுவுக்கு வழிகாட்டுதல்.
⚠️முக்கிய அம்சங்கள்:
போதக நிருபம்:
இது தீமோத்தேயு மற்றும் தீத்துவுக்கு எழுதப்பட்ட நிருபங்களுடன் சேர்த்து, "போதக நிருபங்கள்" (Pastoral Epistles) என அழைக்கப்படுகிறது.
சபையின் ஒழுங்கு: ஆயர்கள் (Episcopal leaders) மற்றும் உதவிக்காரர்களின் (Deacons) தகுதிகள் குறித்து பவுல் விளக்குகிறார்.
சத்தியம்:
புறம்பான போதனைகளைத் தவிர்த்து, விசுவாசத்தின்படி வாழவும், நல்ல வாழ்க்கை முறை மூலம் நற்செய்தியை வெளிப்படுத்தவும் வலியுறுத்துகிறது.
பவுலின் அனுபவம்:
பவுல், கிறிஸ்துவால் பெற்ற இரக்கத்தையும், தனது மனமாற்றத்தையும் நினைவுகூறுகிறார்.
சுருக்கமாக, 1 தீமோத்தேயு என்பது பவுல், தீமோத்தேயுவுக்கு எழுதிய ஒரு வழிகாட்டுதல் கடிதம்; இது எபேசு சபையை வழிநடத்தவும், தவறான போதனைகளுக்கு எதிராகப் போராடவும், சபை ஒழுங்கைக் காக்கவும் அவசியமான தேவ பக்தியின் அறிவுரைகளைக் கொண்டதாகும்.
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
✨1. 1 தீமோத்தேயு
1 ம் அதிகாரம்..
🌸வசனத்தை சபையில் போதிப்பதில் தேவபக்தி..🌸
GODLINESS IN TEACHING & PREACHING THE WORD OF GOD IN FAITH..
வேற்றுமையான உபதேசங்களையுப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் *தெய்வீக பக்திவிருத்திக்கு* ஏதுவாயிராமல் தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவலாறுகளையும் கவனியாதபடிக்கு, நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,
நான் மக்கெதோனியாவுக்குப்போகும்போது உன்னை எபேசு பட்டணத்திலிருக்க வேண்டிக்கொண்டபடியே செய்வாயாக.
1 தீமோத்தேயு 1:3&4
As I besought thee to abide still at Ephesus, when I went into Macedonia, that thou mightest charge some that they teach no other doctrine,
Neither give heed to fables and endless genealogies, which minister questions, rather than *godly edifying which is in faith:* so do.
1 Timothy 1:4
::::::::::::::::::::::::::::::::::
✨2. 1 தீமோத்தேயு
2 ம் அதிகாரம்..
🌸சபையில் சபை மற்றும் உலக ஆளுகைக்கான ஜெபத்தில் தேவபக்தி.🌸
GODLINESS IN PRAYING FOR THE CHURCH AND GOVERNMENT
நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்.
நாம் எல்லாப் *( தேவ ) பக்தியோடும்* நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
1 தீமோத்தேயு 2:1-3
I exhort therefore, that, first of all, supplications, prayers, intercessions, and giving of thanks, be made for all men;
For kings, and for all that are in authority; that we may lead a quiet and peaceable life in all *godliness and honesty.* For this is good and acceptable in the sight of God our Saviour;
1 Timothy 2:3
:::::::::::::::::::::::::::::::::::
✨3. 1 தீமோத்தேயு
3 ம் அதிகாரம்..
🌸சபையில் சபையின் பொறுப்பாளர்களின் தேவபக்தி🌸
GODLINESS IN CHURCH OVERSEEING AND GOVERNANCE
தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன். அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.
அன்றியும், *தேவபக்திக்குரிய இரகசியமானது* யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
1 தீமோத்தேயு 3:15-16
But if I tarry long, that thou mayest know how thou oughtest to behave thyself in the house of God, which is the church of the living God, the pillar and ground of the truth.
And without controversy *great is the mystery of godliness:* God was manifest in the flesh, justified in the Spirit, seen of angels, preached unto the Gentiles, believed on in the world, received up into glory.
1 Timothy 3:15-16
:::::::::::::::::::::::::::::::::::
✨4. 1 தீமோத்தேயு
4 ம் அதிகாரம்..
🌸சபையில் வேதத்தை முறையாக புரிந்து கொள்வதில் தேவ பக்தி..🌸
GODLINESS IN BIBLICAL UNDERSTANDING & DISCERNING THE WORD OF GOD
சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது. தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது
இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமாயிருக்கிறது.
1 தீமோத்தேயு 4:8-9
For bodily exercise profiteth little: but godliness is profitable unto all things, having promise of the life that now is, and of that which is to come.
This is a faithful saying and worthy of all acceptation.
1 Timothy 4:8-9
::::::::::::::::::::::::::::::::::
✨5. 1 தீமோத்தேயு
5 ம் அதிகாரம்.
🌸சபையில் விசாரிப்பை சொந்த குடும்பத்தில் ஆரம்பித்து, பின் சபையில் தகுதி உள்ளவர்களிடம் காண்பிப்பதில் தேவ பக்தி 🌸
GODLINESS IN CARING OWN FAMILY FIRST THEN THE DESERVED IN THE CHURCH
விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் *தேவபக்தியாய் விசாரித்து* , பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக்கற்றுக்கொள்ளக்கடவர்கள். அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.
1 தீமோத்தேயு 5:4
(CSB)
But if any widow has children or grandchildren, let them learn to practice *godliness toward their own family first* and to repay their parents, for this pleases God.
(CSBA)
But if any widow has children or grandchildren, let them learn to practise *godliness towards their own family first* and to repay their parents, for this pleases God.
:::::::::::::::::::::::::::::::::::
✨6. 1:தீமோத்தேயு
6 ம் அதிகாரம்..
🌸 சபையில் உலக ஐஸ்வரியம் குறித்த திருப்தியில் மனநிறைவு என்கிற சத்தியத்தில் தேவ பக்தி 🌸
GODLINESS IN DOCTRINE OF WORLDLY RICHES CONTENTMENT
கெட்டசிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும். இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
1 தீமோத்தேயு 6:5-6
He is proud, knowing nothing, but doting about questions and strifes of words, whereof cometh envy, strife, railings, evil surmisings,
Perverse disputings of men of corrupt minds, and destitute of the truth, supposing that gain is godliness: from such withdraw thyself.
1 Timothy 6:4-5
♥️♥️♥️♥️♥️♥️♥️
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628 003
TCBA TUTICORIN
♥️♥️♥️♥️♥️♥️♥️
Comments
Post a Comment