♥️♥️♥️♥️♥️♥️♥️சபையில் 5 விதமான ஆடுகள் மேய்க்கும் மேய்ப்பர்கள் பணி♥️♥️♥️♥️♥️♥️♥️


♥️♥️♥️♥️♥️♥️♥️

சபையில் 5 விதமான ஆடுகள் மேய்க்கும் மேய்ப்பர்கள் பணி

♥️♥️♥️♥️♥️♥️♥️

TCBA @ MORNDEV

♥️♥️♥️♥️♥️♥️♥️

🤝இரண்டு விதமான ஊழியங்களை சபையின் பொறுப்பாளர்களுக்கு தேவன் நியமிக்கிறார்..

🍒1. அவிசுவாசிகளை கண்டு பிடித்து இரட்சிப்புக்குள் வழி நடத்துதல்

🍒2. விசுவாசிகளை கிறிஸ்துவின் ஐக்கியத்தில் ஸ்திரப்படுத்துதல்..
மேய்த்தல்..

🤝"கர்த்தர் என் மேய்ப்பர் " என்பது தேவனுடைய அனந்த நியமம்..

" என் ஆடுகளை மேய்ப்பாயாக" என்பது தேவன் சபையின் மேய்ப்பர்களுக்கு அருளின சிலாக்கியம்..

🌸இந்த வேத பகுதியை தியானிப்போம்..

✨1. மேய்ப்பர்கள் பிரதான பணி

🍒மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரை, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார், தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையைமேய்க்கவேண்டும். 
எசேக்கியேல் 34:2

✨2. மேய்ப்பர்கள் பொறுப்பு அலட்சியம்.

🍒நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்ளுகிறீர்கள், கொழுத்ததை அடிக்கிறீர்கள், மந்தையையோ மேய்க்காமற்போகிறீர்கள். 
எசேக்கியேல் 34:3

✨3. 5 விதமான ஆடுகள் மேய்ப்பர்கள் அறியாமை..

🍒நீங்கள் 

⚠️1. WEAK SHEEP
பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும்,

⚠️2. SICK SHEEP நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும்,

⚠️3. INJURED SHEEP
எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும்,

⚠️4. ASTRAY SHEEP துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும்,

⚠️5. LOST SHEEP காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய்,

 பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள். 
எசேக்கியேல் 34:4

✨4. மேய்ப்பர்கள் தன்னை ஒப்புக்கொடுக்காத நிலை..

மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின, சிதறுண்டுபோனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின. 
எசேக்கியேல் 34:5

✨5. மேய்ப்பர்கள் ஆடுகளை விசாரிப்பு இன்மை..

என் ஆடுகள் சகல மலைகளிலும் உயரமான சகல மேடுகளிலும் அலைப்புண்டு, பூமியின்மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது, விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை. 
எசேக்கியேல் 34:6

✨6. மேய்ப்பர்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு மட்டுமே பிரதானம்..

ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 
எசேக்கியேல் 34:7

:::::::::::::::::::::::::::::::::::

✨கிறிஸ்துவின் 
3 விதமான மேய்ப்பத்துவம்..
ஆடுகளுடைய இரட்சிப்பின் 
3 விதமான நிலைகளில் மேய்ப்பர் கிரியை செய்கிறார்..

🌸1. நல்ல மேய்ப்பத்துவம்..
( யோவான் 11 )
ஆடுகளுடைய இரட்சிப்பு

🌸2. பெரிய மேய்ப்பத்துவம்
( எபிரேயர் 13 )
ஆடுகளுடைய பரிசுத்தமாகுதல்

🌸3. பிரதான மேய்ப்பத்துவம்
( 1 பேதுரு 5 )
ஆடுகளுடைய மகிமைப்படுதல்

⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

✨ சபை மேய்ப்பர்கள் கற்றுக்கொள்ள, பின்பற்ற மாதிரியான ஒரே மேய்ப்பர்..

♥️என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 
எசேக்கியேல் 34:15


✨ ஒரே மேய்ப்பர் செயல்களை கவனியுங்கள்..
5 விதமான ஆடுகளை எவ்வாறு கண்காணிக்கிறார்..

( REVERSE ACTION )

⚠️1. LOST SHEEP
நான் காணாமற்போனதைத்தேடி,

⚠️2.ASTRAY SHEEP துரத்துண்டதைத் திரும்பக்கொண்டுவந்து, 

⚠️3. INJURED SHEEP
 எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி,

⚠️4. SICK SHEEP
நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்,

⚠️5. WEAK SHEEP
நியாயத்துக்குத்தக்கதாய் அவைகளை மேய்த்து,

 புஷ்டியும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன். 
எசேக்கியேல் 34:16

என் மந்தையே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன். 
எசேக்கியேல் 34:17

⚠️ மேய்ப்பர்கள் குறித்த புதிய ஏற்பாட்டு நியமம்

🌸உங்களிலுள்ள மூப்பருக்கு உடன் மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்திசொல்லுகிறதென்னவென்றால்: 
1 பேதுரு 5:1

🌸உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், 
1 பேதுரு 5:2

🌸சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள். 
1 பேதுரு 5:3

🌸அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படுத்தும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள். 
1 பேதுரு 5:4

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

GATHERING OF SAINTS CHURCH AS FAMILY 

♥️♥️♥️♥️♥️♥️♥️

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA