♥️TCBA @ ஆராதனை தியானம் ♥️✨✨✨✨✨✨✨♥️பாவிகளுடைய கைகளில் மனுஷகுமாரன்♥️
✨✨✨✨✨✨✨
♥️TCBA @ ஆராதனை தியானம் ♥️
✨✨✨✨✨✨✨
♥️பாவிகளுடைய கைகளில் மனுஷகுமாரன்♥️
✨✨✨✨✨✨✨
🍒தியான வசனம்:
அவர் மூன்றாந்தரம் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள், போதும், வேளை வந்தது,
இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.
மாற்கு 14:41
✨✨✨✨✨✨✨
🍒அப் பவுல் கூறுகிறார்
பாவம் அறியாத அவர்
🍒 அப் பேதுரு கூறுகிறார்
அவர் பாவம் செய்யவில்லை
🍒 அப் யோவான் கூறுகிறார்
அவரிடத்தில் பாவம் இல்லை
🍒 எபிரேயர் ஆக்கியோன் கூறுகிறார்..
பாவிகளுக்கு விலகினவர்..
🌺பாவிகளுடைய கைகளில்?
♥️1. பாவிகளுக்கும் சிநேகிதன்
லுக் 7:34
♥️2. பாவிகளோடு பந்தி இருந்தார்
மத் 9:10
♥️3. பாவிகளோடு போஜனம்
மத் 9:10, லூக் 5:30
♥️4. பாவிகள் வசனம் கேட்க அனுமதிக்கிறார்
லூக் 15:1
♥️5. பாவிகளை ஏற்றுக்கொள்ளுகிறார்
லூக் 15:2
♥️6. பாவியான மனுஷனிடத்தில் தாங்கும்படி போனார்
லூக் 19:7
♥️7. பாவி தன்னை முத்தம் செய்ய அனுமதித்தார்
லூக் 7:39
♥️8. பாவிகள் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டார் மாற்கு 14:41
♥️9. பாவிகளால் விபரீதங்களை சகித்தார்
எபி 12:3
♥️10. பாவிகளோடு சிலுவையில் அறையப்பட்டார்
மாற்கு 15:28
♥️11. பாவிகளுக்காக மரித்தார்
ரோமர் 5:8
♥️♥️♥️ஆனால்..
பாவிகளோடு அடக்கம் பண்ணப்படவில்லை
துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள், ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார், அவர் கொடுமை செய்யவில்லை, அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.
ஏசாயா 53:9
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
🌺கிறிஸ்து பாவத்துக்கு காரணரோ?
அல்லவே!!!!!!!
கலா 2:17
🍒ஆராதனை சிந்தை:
கீ கீ 407.
1. தேவ அன்பை வேதம் கூற
கண்டு உணர்ந்தேன்
இரத்தம் சிந்தி என்னை மீட்ட
மீட்பை அறிந்தேன்.
பல்லவி
எந்தன் பாவம் யாவும் தீர்க்க
இயேசு மரித்தார்
அன்பு பொங்கி ஊழியம் செய்ய
பெலன் கொடுப்பார்.
2. என்னை மீட்க இயேசு நாதர்
குருசில் தொங்கினார்
முட்கிரீடம் சூடி அவர்
கஸ்தி அடைந்தார்.
- எந்தன்
♥️3. தேவ மைந்தன் இரத்தம் ஓட
செய்த காரணம்,
ஆணி ஈட்டி இவை அல்ல
எந்தன் அக்கிரமம்.
- எந்தன்♥️
4. எந்தன் ஜீவன் சுகம் முற்றும்
தத்தம் செய்கிறேன்
திருவாக்கை நம்பி என்றும்
உம்மைப் பின் செல்வேன்.
- எந்தன்
✨✨✨✨✨✨✨
♥️ஆராதனை மேன்மை:
🌺எப்பாவ மில்லாமலும் நான்
வாழ்த்தல் செய்யலாமா?
101.கீ கீ
1. என் இயேசுவே உம்மையே
நான் நேசிக்கிறேன்
வேறெந்த வீண் வாழ்வையும்
நாடாதிருப்பேன்
உம்மாலே மா நன்மையை
நான் கண்டடைந்தேன்
என் நாதா மென்மேலும்
உம்மை நேசிக்கிறேன்
2. இப்பாவியின் பேரில் முந்தி
நேசம் வைத்தீர்
நீர் ப்ராணத் தியாகஞ் செய்து
மீட்டுக்கொண்டீர்
முட் கிரீடம் தீங்காயமுந்
தியானிக்கிறேன்
என் நாதா மென்மேலும்
உம்மை நேசிக்கிறேன்.
3. பேரன்பின் சொரூபி உம்மைப்
போற்றுகிறேன்
எப்போதும் உம்மண்டை
தங்க வாஞ்சிக்கிறேன்
என் ஜீவன் போனாலுங்கூட
நீங்க மாட்டேன்
என் நாதா மென்மேலும்
உம்மை நேசிக்கிறேன்.
4. பேரின்பம் மேலோகத்தில்
ஆனந்தங் கொள்வேன்
நீடுழி உம்முகம் கண்டு
ஸ்தோத்தரிப்பேன்
♥️எப்பாவ மில்லாமலும் நான்
வாழ்த்தல் செய்வேன்
என் நாதா மென்மேலும்
உம்மை நேசிக்கிறேன்.♥️
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
TCBA @ TUTICORIN
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
+91 9444242318
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
GATHERING OF SAINTS
CHURCH AS FAMILY
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment