♥️ இம்மானுவேல்...EMMANUEL..♥️ GOD WITH US ♥️ தேவன் நம்மோடு இருக்கிறார் ♥️


✨✨✨✨✨✨✨

🌺TCBA @ REMEMBRANCE OF CHRIST'S MANIFESTATION🌺

🌺TCBA @ கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார் நினைவு கூறுதல் 🌺

♥️♥️♥️♥️♥️♥️♥️

👑இயேசு கிறிஸ்து தேவன்...

👑குமாரன்..தேவன்..
👑பாலகன்..தேவன்..

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், 

அவர் நாமம் 
🍒அதிசயமானவர், 🍒ஆலோசனைக்கர்த்தா, 
🍒வல்லமையுள்ள தேவன், 
🍒நித்திய பிதா, 
🍒சமாதானப்பிரபு என்னப்படும். 
ஏசாயா 9:6

👑தேவ பக்திக்குரிய இரகசியம்...

👑தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்..

அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார். 
1 தீமோத்தேயு 3:16

👑தேவன் தன்னை பல நிலைகளில் தன்னை வெளிப்படுத்த அவராலே கூடும்..

👑1. கிறிஸ்து தோற்றம்..

யாக்கோபு சந்தித்த கிறிஸ்து...

இதை THEOPHANY என்று கூறுகிறார்கள்..

theo - God
phany - appearance 

Christophany..
Christ appeared not in flesh...

யாக்கோபு சந்திக்கிறார் கிறிஸ்துவை..

🌸1. ஆதி 28:12-13 பெத்தேல் 
🌸2. ஆதி 31:11 பதான் அராம் 
🌸3. ஆதி 32:1 மக்னாயீம் 
🌸4. ஆதி 32:24 பெனியேல் 

Christ met Jacob..

♥️1. பெத்தேல்..

GOD OF SALVATION
இரட்சிப்பின் தேவன்.

Type of Christ in whom both worlds meet in whom DIVINE nature and human nature are conjoined.

Ladder was set up on earth.

Top reached Heaven..
தேவன் மாம்சத்தில் வெளிப்பட உலகம் தோன்றும் முன்னே தீர்மானிக்கப்பட்டது.

அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய்த் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்பட்டார். 
1 பேதுரு 1:20

யோவான் 1:51
யோவான் 14:6
கொலோ 1:20
எபே 1:10
யோவான் 3:13
பெத்தேல்..வானத்தின் வாசல்
Type of Salvation
THE LORD STOOD ABOVE..

அங்கே அவன் ஒரு சொப்பனங்கண்டான். இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். 
ஆதியாகமம் 28:12

அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர். நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். 
ஆதியாகமம் 28:13

♥️2. பதான் அராம் 

GOD OF GOODNESS..
நன்மைகளின் தேவன்..

அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில்: யாக்கோபே என்றார். இதோ, இருக்கிறேன் என்றேன். 
ஆதியாகமம் 31:11

உங்களுக்குப் பொல்லாப்புச்செய்ய எனக்கு வல்லமை உண்டு. ஆகிலும், உங்கள் தகப்பனுடைய தேவன்: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று நேற்று ராத்திரி என்னோடே சொன்னார். 
ஆதியாகமம் 31:29


♥️3. மக்னாயீம்..

GOD OF HOSTS..
சேனைகளின் தேவன்..

யாக்கோபு பிரயாணம்பண்ணுகையில், தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள். 
ஆதியாகமம் 32:1

யாக்கோபு அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான். 
ஆதியாகமம் 32:2

♥️4. பெனியேல் 

GOD OF ISRAEL
இஸ்ரவேலின் தேவன் 

யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான். அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி, 
ஆதியாகமம் 32:24

அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார். அதினாலே அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று. 
ஆதியாகமம் 32:25

அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான். 
ஆதியாகமம் 32:26

அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார், யாக்கோபு என்றான். 
ஆதியாகமம் 32:27

அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும். தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார். 
ஆதியாகமம் 32:28

ஒரு புருஷன்..
A MAN WRESTLED..

TYPE OF CHRIST.
ஒசியா 12:4
எபி 1:6
1 தீமோ 2:6

🍒கிறிஸ்து ஆபிரகாமை சந்தித்தல்..

🍒தியோஃபனி என்றால் என்ன? 
🍒கிறிஸ்டோஃபனி என்றால் என்ன?

ஒரு தியோஃபனி என்பது வேதாகமத்தில் உள்ள தேவனின் வெளிப்பாடாகும், இது மனித உணர்வுகளுக்கு புலப்படாதது ஆகும். அதன் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட அர்த்தத்தில், இது பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவனுடைய காணக்கூடிய தோற்றம், பெரும்பாலும், ஆனால் எப்போதும் இல்லை, மனித வடிவத்தில். இந்த பகுதிகளில் சில தியோஃபனிகள் காணப்படுகின்றன:

🍅1. ஆதியாகமம் 12:7-9 

 ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் தேவன் வாக்களித்த தேசத்திற்கு அவன் வந்தபோது கர்த்தர் அவனுக்குத் தோன்றினார்.

🍅2. ஆதியாகமம் 18:1-33 - 

ஒரு நாள், ஆபிரகாமுக்கு சில பார்வையாளர்கள் இருந்தனர்: இரண்டு தேவதூதர்கள் மற்றும் தேவன். அவர் அவர்களை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார், அவரும் சாராவும் அவர்களை உபசரித்தார்கள். பல விளக்கவுரையாளர்கள் இது கிறிஸ்துவின் மனித அவதாரத்திற்கு முந்தைய தோற்றமான கிறிஸ்டோஃபனியாகவும் இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

🍒🍒🍒🍒🍒🍒🍒

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

✨நாம் கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட இரகசியத்தை தியானிக்கலாம்..

✨கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட போது 2 நாமம் கொடுக்கப்பட்டது..

🍒1. இயேசு..
🍒2. இம்மானுவேல்..

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். 
மத்தேயு 1:21

அவன், இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். 
மத்தேயு 1:23

🍒இயேசு என்ற பெயர் வரலாறு நாம் அறிவோம்..

✨✨✨✨✨✨✨

🍒இன்று இம்மானுவேல் என்ற பெயர் எவ்வாறு கொடுக்கப்பட்டது..

🍒சிந்திப்போம்..

🍒வாசிக்க வேண்டிய வேத பகுதி..

🍒ஏசாயா 7:1-14

🌸1. எருசலேம் மேல் யுத்தம்..

யூதா தேசத்தின் மேல் சீரியா ராஜாவும் இஸ்ரவேலின் ராஜாவும் சேர்ந்து யுத்தம் செய்கிறார்கள்..தோல்வியை சந்திக்கிறார்கள்..

உசியாவினுடைய குமாரனாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் என்னும் யூதாதேசத்து ராஜாவின் நாட்களிலே, ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும் எருசலேமின்மேல் யுத்தம்பண்ணவந்தார்கள், அவர்களால் அதைப்பிடிக்கக்கூடாமற்போயிற்று. 
ஏசாயா 7:1

🌸2. சீரியர் இஸ்ரவேல் ராஜாவுக்கு உதவியாக போரில் ஈடுபடுகிறார்கள் என்று கேள்விப்பட்டு யூதா ஜனங்களும் ராஜாவும் கலங்குகிறார்கள்..

சீரியர் எப்பிராயீமைச் சார்ந்திருக்கிறார்களென்று தாவீதின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜாவின் இருதயமும் அவன் ஜனத்தின் இருதயமும் காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறதுபோல் அசைந்தது. 
ஏசாயா 7:2

🌸3. ஏசாயாவும் அவருடைய மகன் செயார் யாசூப் கர்த்தரிடம் ஜெயம் பெறுவோம் என்கிற உற்சாக வார்த்தைகளை பெறுகிறார்கள்..

அப்பொழுது கர்த்தர் ஏசாயாவை நோக்கி: நீயும் உன் மகன் சேயார்யாசூபுமாக வண்ணார் துறைவழியிலுள்ள மேற்குளத்து மதகின் கடைசிமட்டும் ஆகாசுக்கு எதிர்கொண்டுபோய், 
ஏசாயா 7:3

நீ அவனை நோக்கி: சீரியர் எப்பிராயீமோடும், ரெமலியாவின் மகனோடும் உனக்கு விரோதமாகத் துராலோசனை பண்ணி, 
ஏசாயா 7:4

நாம் யூதாவுக்கு விரோதமாய்ப்போய், அதை நெருக்கி, அதை நமக்குள்ளே பங்கிட்டுக்கொண்டு, அதற்குத் தபேயாலின் குமாரனை ராஜாவாக ஏற்படுத்துவோம் என்று சொன்னதினிமித்தம், 
ஏசாயா 7:5

நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப்பார், இந்த இரண்டு புகைகிறகொள்ளிக்கட்டைகளாகிய சீரியரோடே வந்த ரேத்சீனும், ரெமலியாவின் மகனும் கொண்ட உக்கிரக்கோபத்தினிமித்தம் உன் இருதயம் துவளவேண்டாம். 
ஏசாயா 7:6

🌸4. கர்த்தர் இன்னும் 65 நாட்களில் ஜெயம் பெறுவீர்கள்..ஆனால் விசுவாசியாவிட்டால் நிலை பெற மாட்டீர்கள் என்கிறார்..

கர்த்தராகிய ஆண்டவர்: அந்த ஆலோசனை நிலைநிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை, 
ஏசாயா 7:7

சீரியாவின் தலை தமஸ்கு, தமஸ்குவின் தலை ரேத்சீன், இன்னும் அறுபத்தைந்து வருஷங்களிலே எப்பிராயீம் ஒரு ஜனமாயிராதபடிக்கு நொறுங்குண்டுபோம். 
ஏசாயா 7:8

எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன், நீங்கள், விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார். 
ஏசாயா 7:9

🌸5. இப்பொழுது தான் முக்கியமான நிகழ்வு ஆரம்பமாகிறது..கர்த்தர் இந்த வெற்றி நிச்சயம்..ஜெயம் உறுதி..நீங்கள் இதை நம்புவதற்கு ஒரு அடையாளத்தை கேள் என்கிறார்..

பின்னும் கர்த்தர் ஆகாசை நோக்கி: 
ஏசாயா 7:10

நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள், அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார் 
ஏசாயா 7:11

🌸6. ஆகாஸ்..யூதாவின் ராஜா நான் எப்படி கேட்க முடியும்..கர்த்தரை நான் பரீட்சை செய்வது போலவே ஆகி விடுமே என்கிறார்..

ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் கர்த்தரைப் பரீட்சை செய்யமாட்டேன் என்றான். 
ஏசாயா 7:12

🌸7. ஏசாயா கூறுகிறார்..நீங்கள் அடையாளம் கேட்க மாட்டோம் என்பது தேவனை விசனப்படுத்துவது க்கு சமம்..
WEARYING GOD

"Wearying God" refers to provoking divine displeasure through persistent sin, hypocrisy, complaining, or redefining evil as good, particularly in Abrahamic faiths, as seen in Malachi 2:17 where people questioned God's justice while living wickedly, though God doesn't truly get tired but is grieved by such actions. 

It can also describe believers feeling spiritually fatigued or "weary of God," finding rest in His promises and presence rather than human productivity. 

உங்கள் வார்த்தைகளினாலே கர்த்தரை வருத்தப்படுத்துகிறீர்கள். ஆனாலும் எதினாலே அவரை வருத்தப்படுத்துகிறோம் என்கிறீர்கள். பொல்லாப்புச் செய்கிறவனெவனும் கர்த்தரின் பார்வைக்கு நல்லவன் என்றும், அப்படிப்பட்டவர்கள் பேரில் அவர் பிரியமாயிருக்கிறாரென்றும், நியாயந்தீர்க்கிற தேவன் எங்கேயென்றும், நீங்கள் சொல்லுகிறதினாலேயே. 
மல்கியா 2:17

அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள், நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ? 
ஏசாயா 7:13

🌸8. ஏசாயா சொல்லுகிறார்..ஆண்டவர் தாமே ஒரு அடையாளத்தை கொடுக்க போகிறார்..கேளுங்கள்..

 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; 

🌸9. இதோ..அடையாளம்..தேவன் உங்களோடு இருக்கிறார்..

இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். 
ஏசாயா 7:14

அவன், இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். 
மத்தேயு 1:23

யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து, கழுத்துமட்டும் வரும் என்றார். இம்மானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும். ஏசாயா 8.8

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

♥️சகோதரரே..

இம்மானுவேல்..தேவன் உங்களோடு இருக்கிறார்..


🍒🍒 சிந்திப்போம்...

♥️தேவன் உங்களோடு நிஜமாக இருக்கிறாரா?

♥️கிறிஸ்து பிறப்பின் சிந்தை உங்களை நிதானிக்க செய்யட்டும்..

அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: *தேவன் உங்களோடே இருக்கிறார்* என்று கேள்விப்பட்டோம். ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார். 
சகரியா 8.23

🌺கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள். ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய *தேவன் உங்களோடேகூட இருப்பார்.* 
2 கொரிந்தியர் 13.11

🌸 நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள். அப்பொழுது சமாதானத்தின் *தேவன் உங்களோடிருப்பார்.* பிலிப்பியர் 4.9

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

GATHERING OF SAINTS
CHURCH AS FAMILY

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA