இயேசு கிறிஸ்துவின் மாம்சீக வெளிப்பாடு ( கிறிஸ்து பிறப்பு ) பற்றி அப் பவுல் நிருபங்களில் எப்படி கூறுகிறார்?
இயேசு கிறிஸ்துவின் மாம்சீக வெளிப்பாடு ( கிறிஸ்து பிறப்பு ) பற்றி அப் பவுல் நிருபங்களில் எப்படி கூறுகிறார்?
ஒரு முறை தான் கிறிஸ்து பிறந்தார் என்று குறிப்பிட்டு பின் கீழ்க்கண்ட பதங்களையும் சத்தியங்களையும் அறிவிக்கிறார்..
🍒1. தாவீதின் சந்ததியில் பிறந்தவர்
🍒2. தேவன் அனுப்பினார்
🍒3. பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார்
🍒4. மனுஷர் சாயலானார்.
🍒5. தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.
🍒6. உங்களிடத்தில் வந்தது
🍒7. நமக்கு கொடுத்திருக்கிறார்
🍒8. உலகத்தில் வந்தார்
🍒9. பிரசன்னமானார்
🍒10a. உலகத்தில் பிரவேசிக்கச்செய்தார்
🍒10b. யூதா கோத்திரத்தில் தோன்றினார்
🍒11. பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது
🍒12.வெளிப்பட்டார்
🍒13. பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றார்
🍒14. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்து
🍒15.எங்கள் கைகளினாலே தொட்டதுமான ஜீவ வார்த்தை
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
🤝Paul's primary statement on Christ's birth emphasizes Jesus's true humanity and divine origin:
God sent His Son, "born of a woman, born under the law" (Galatians 4:4) to redeem humanity, highlighting Jesus's full participation in human life (like being under the Law) while existing as a divine being who emptied Himself for mankind
(Philippians 2:5-11).
He stresses Jesus's incarnation as a God-man, fulfilling God's promises, though Paul focuses more on the theological implications of the birth (redemption, becoming a servant) than the nativity details like shepherds or manger.
🤝Key aspects of Paul's view on Christ's birth:
🍅Born of a Woman, Under the Law:
In Galatians 4:4-5, Paul states Jesus was "born of a woman, born under the law" to redeem those under the law, showing His full humanity and Israelite identity.
⚠️Divine Pre-existence:
Paul teaches Jesus existed before His birth, as seen in Philippians 2:6-11 where the divine Son "emptied himself, taking the form of a servant".
👑Focus on Incarnation, Not Nativity Details:
Paul doesn't mention the Virgin Birth details (manger, angels) but emphasizes the profound mystery of God becoming man, taking on sinful flesh (Romans 1:3-4) to deal with sin and become a law-fulfiller.
🌺Theological Significance:
For Paul, Jesus's birth into humanity (like Adam, but sinless) serves as the foundation for His redemptive work, establishing a new humanity in Him, unlike Adam's original fall (Romans 5:12-21).
In essence, Paul sees Christ's birth as the ultimate act of God's love, bringing the eternal Son into human history to save it, stressing His deep involvement in human experience and His divine identity.
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
🤝🤝இயேசு கிறிஸ்துவின் மாம்சீக வெளிப்பாடு நிருபங்களில்...
🌸ரோமர் நிருபம் :
இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,
மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய்ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
ரோமர் 1:4-5
🌸1 கொரிந்தியர்...
உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.
அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை. அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே.
1 கொரிந்தியர் 2:7-8
🌸2 கொரிந்தியர்..
இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
2 கொரிந்தியர் 4:6
🌸கலாத்தியர்..
நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,
காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.
கலாத்தியர் 4:4-5
🌸எபேசியர்..
ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.
ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?
இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.
எபேசியர் 4:8-10
🌸பிலிப்பியர்
அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
பிலிப்பியர் 2:6-8
🌸கொலோசெயர்
ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.
மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.
கொலோசெயர் 2:9-10
🌸1 தெசலோனிக்கேயர்
எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடே மாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது. நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள் நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.
1 தெசலோனிக்கேயர் 1:5
🌸2 தெசலோனிக்கேயர்
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும்,
2 தெசலோனிக்கேயர் 2:16
🌸1 தீமோத்தேயு
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது. அவர்களில் பிரதான பாவி நான்.
1 தீமோத்தேயு 1:15
🌸2 தீமோத்தேயு
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது. அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.
2 தீமோத்தேயு 1:10
🌸தீத்து..
நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது,
தீத்து 3:4
🌸பிலமோன்..
🌸எபிரேயர்..
மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள். என்றார்.
எபிரேயர் 1:6
நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது. அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.
எபிரேயர் 7.14
🌸யாக்கோபு..
.நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
யாக்கோபு 1:17
🌸1 பேதுரு
அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய்த் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்பட்டார்.
1 பேதுரு 1:20
🌸2 பேதுரு
இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,
அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்.
2 பேதுரு 1:18
🌸1 யோவான்
ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
1 யோவான் 1:1
🌸2 யோவான்
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள். இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
2 யோவான் 1:7
🌸3 யோவான்
🌸 யூதா
🌸 வெளிப்படுத்தின விசேஷம்
Comments
Post a Comment