♥️நமது இரட்சகராகிய தேவன்..♥️இயேசு கிறிஸ்து உலக இரட்சகர் ♥️

இரட்சகர் (Rakshakar) என்றால் காப்பாற்றுபவர், உய்விப்பவர், விடுதலை கொடுப்பவர் என்று பொருள்; இது பொதுவாக, ஆபத்தில் இருந்து காத்து, விடுதலை அளித்து, பாதுகாக்கும் தலைவரைக் குறிக்கும், குறிப்பாக கிறிஸ்தவத்தில், இயேசு கிறிஸ்துவை "உலக இரட்சகர்" என்று அழைக்கப்படுகிறது


🍒பழைய ஏற்பாட்டில் இரட்சகர்..

♥️1. என் இரட்சகர்..

கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். 
சங்கீதம் 18.2

 The LORD is my rock, and my fortress, and my deliverer; my God, my strength, in whom I will trust; my buckler, and the horn of my salvation, and my high tower. 
Psalms 18:2

♥️2. உன் இரட்சகர்..

நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர், உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன். 
ஏசாயா 43.3

 For I am the LORD thy God, the Holy One of Israel, thy Saviour: I gave Egypt for thy ransom, Ethiopia and Seba for thee. 
Isaiah 43:3

♥️3. தேவனும் இரட்சகரும்..

 இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர். 
ஏசாயா 45.15

 Verily thou art a God that hidest thyself, O God of Israel, the Saviour
Isaiah 45:15

♥️4. நீதிபரரும் இரட்சகரும்..

 நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள், இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி, அந்நாள்துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை, என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.
 ஏசாயா 45.21

 Tell ye, and bring them near; yea, let them take counsel together: who hath declared this from ancient time? who hath told it from that time? have not I the LORD? and there is no God else beside me; a just God and a Saviour; there is none beside me. 
Isaiah 45:21

♥️5. இரட்சகரும் உன் மீட்பரும்

உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன், மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள், கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார். 
ஏசாயா 49.26

And I will feed them that oppress thee with their own flesh; and they shall be drunken with their own blood, as with sweet wine: and all flesh shall know that I the LORD am thy Saviour and thy Redeemer, the mighty One of Jacob. 
Isaiah 49:26

♥️6. இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன் மீட்பரென்றும்..

 நீ ஜாதிகளின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, கர்த்தராகிய நான் இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன் மீட்பரென்றும் அறிந்துகொள்வாய். 
ஏசாயா 60.16

 Thou shalt also suck the milk of the Gentiles, and shalt suck the breast of kings: and thou shalt know that I the LORD am thy Saviour and thy Redeemer, the mighty One of Jacob. 
Isaiah 60:16

♥️7. ஆபத்துக்காலத்தில் அதின் இரட்சகரே, 

 இஸ்ரவேலின் நம்பிக்கையே, ஆபத்துக்காலத்தில் அதின் இரட்சகரே, நீர் தேசத்தில் பரதேசியைப்போலவும், இராத்தங்க இறங்குகிற வழிப்போக்கனைப்போலவும் இருப்பானேன்? 
எரேமியா 14.8

 O the hope of Israel, the saviour thereof in time of trouble, why shouldest thou be as a stranger in the land, and as a wayfaring man that turneth aside to tarry for a night? 
Jeremiah 14:8

♥️7. என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை. 

நான் உன்னை எகிப்துதேசத்திலிருந்து அழைத்து வந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன், ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம், என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை. 
ஓசியா 13.4

 Yet I am the LORD thy God from the land of Egypt, and thou shalt know no god but me: for there is no saviour beside me. 
Hosea 13:4

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

🍒புதிய ஏற்பாட்டில் இரட்சகர்..

♥️1. என் இரட்சகர்..

என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. 
லூக்கா 1.47

And my spirit hath rejoiced in God my Saviour. 
Luke 1:47

♥️2. உங்கள் இரட்சகர்..

இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். 
லூக்கா 2.11

For unto you is born this day in the city of David a Saviour, which is Christ the Lord
Luke 2:11

♥️3. இஸ்ரவேலுக்கு இரட்சகர் அதிபதி..

இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார். அப்போஸ்தலர் 5.31

 Him hath God exalted with his right hand to be a Prince and a Saviour, for to give repentance to Israel, and forgiveness of sins. 
Acts 5:31

♥️4. இஸ்ரவேலுக்கு இரட்சகர்..

அவனுடைய சந்ததியிலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார். 
அப்போஸ்தலர் 13.23

 Of this man's seed hath God according to his promise raised unto Israel a Saviour, Jesus
Acts 13:23

♥️5. விசுவாசிகள் சரீரத்துக்கு இரட்சகர்..

 கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான். அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்
எபேசியர் 5.23

 For the husband is the head of the wife, even as Christ is the head of the church: and He is the saviour of the body. 
Ephesians 5:23

♥️6. இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர்

 நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். பிலிப்பியர் 3.20

For our conversation is in heaven; from whence also we look for the Saviour, the Lord Jesus Christ: 
Philippians 3:20

♥️7. நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவன்

நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,
 1 தீமோத்தேயு 1.1

Paul, an apostle of Jesus Christ by the commandment of God our Saviour, and Lord Jesus Christ, which is our hope; 
1 Timothy 1:1

♥️8. நம்முடைய இரட்சகராகிய தேவன்

நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
 1 தீமோத்தேயு 2.3

 For this is good and acceptable in the sight of God our Saviour; 
1 Timothy 2:3

♥️9. விசுவாசிகளுக்கும் இரட்சகர்

இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம். ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம். 
1 தீமோத்தேயு 4.10

For therefore we both labour and suffer reproach, because we trust in the living God, who is the Saviour of all men, specially of those that believe. 
1 Timothy 4:10

♥️10. நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து

 நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது. அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார். 
2 தீமோத்தேயு 1.10

 But is now made manifest by the appearing of our Saviour Jesus Christ, who hath abolished death, and hath brought life and immortality to light through the gospel: 
2 Timothy 1:10

♥️11. நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தர்..

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. தீத்து 1.2

 In hope of eternal life, which God, that cannot lie, promised before the world began; 
Titus 1:2
 But hath in due times manifested his word through preaching, which is committed unto me according to the commandment of God our Saviour; 
Titus 1:3

♥️12. நம்முடைய இரட்சகராகிய தேவன்

ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார். 
தீத்து 1.4

 To Titus, mine own son after the common faith: Grace, mercy, and peace, from God the Father and the Lord Jesus Christ our Saviour
Titus 1:4

♥️13.நம்முடைய இரட்சகராகிய தேவன்

வேலைக்காரர் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக, 
தீத்து 2.9

Exhort servants to be obedient unto their own masters, and to please them well in all things; not answering again; 
Titus 2:9
Not purloining, but shewing all good fidelity; that they may adorn the doctrine of God our Saviour in all things. 
Titus 2:10

♥️14.மகா தேவனும் நமது இரட்சகரும்

நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. 
தீத்து 2.13

Looking for that blessed hope, and the glorious appearing of the great God and our Saviour Jesus Christ; 
Titus 2:13

♥️15.நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயை

நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, 
தீத்து 3.4

But after that the kindness and love of God our Saviour toward man appeared, 
Titus 3:4

♥️16.நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து

அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். தீத்து 3.7

Which He shed on us abundantly through Jesus Christ our Saviour; 
Titus 3:6
 That being justified by his grace, we should be made heirs according to the hope of eternal life. 
Titus 3:7


♥️17.இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதி

நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது: 
2 பேதுரு 1.1

Simon Peter, a servant and an apostle of Jesus Christ, to them that have obtained like precious faith with us through the righteousness of God and our Saviour Jesus Christ: 
2 Peter 1:1

♥️18.இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யம்..

இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும். 
2 பேதுரு 1.11

For so an entrance shall be ministered unto you abundantly into the everlasting kingdom of our Lord and Saviour Jesus Christ. 
2 Peter 1:11

♥️19. கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவு

 கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும். 
2 பேதுரு 2.20

 For if after they have escaped the pollutions of the world through the knowledge of the Lord and Saviour Jesus Christ, they are again entangled therein, and overcome, the latter end is worse with them than the beginning. 
2 Peter 2:20

♥️20.இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகள்

பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்பகிறேன்.
 2 பேதுரு 3.2

That ye may be mindful of the words which were spoken before by the holy prophets, and of the commandment of us the apostles of the Lord and Saviour: 
2 Peter 3:2

♥️21.இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை

 நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
 2 பேதுரு 3.18

 But grow in grace, and in the knowledge of our Lord and Saviour Jesus Christ. To him be glory both now and for ever. Amen. 
2 Peter 3:18

♥️♥️♥️இறுதியாக சகோதரரே..

 தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். யூதா 1.25

To the only wise God our Saviour, be glory and majesty, dominion and power, both now and ever. Amen. 
Jude 1:25

✨✨✨சிந்திப்போம்...

எகிப்திலே பெரிய கிரியைகளையும், காமின் தேசத்திலே அதிசயங்களையும், சிவந்த சமுத்திரத்தண்டையிலே பயங்கரமானவைகளையும் செய்தவராகிய, 
தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்
சங்கீதம் 106:21-22


Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA