தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்...


தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்...
1 தீமோ 3:16

அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார். 
1 தீமோத்தேயு 3:16

தேவன் நம்மில் வாசம் செய்ய

இதோ மனுஷரின் மத்தியில் பாடல்..

187. இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே


           பல்லவி

  இதோ மனுஷரின் மத்தியில்
     தேவாதி தேவனே
  வாசஞ் செய்கிறாரே

           சரணங்கள்

1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
  தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
  தேவன் தாம் அவர்கள்
     தேவனாயிருந்தே
  கண்ணீர் யாவையும்
     துடைக்கிறாரே.
                      - இதோ

2. தேவ ஆலயமும் அவரே
  தூய ஒளிவிளக்கும் அவரே
  ஜீவனாலே தம் ஜனங்களின்
     தாகம் தீர்க்கும்
  சுத்த ஜீவநதியும் அவரே.
                      - இதோ

3. மகிமை நிறை பூரணமே
  மகா பரிசுத்த ஸ்தல மதுவே
  என்றும் துதியுடனே அதன்
     வாசல் உள்ளே
  எங்கள் பாதங்கள் நிற்கிறதே.
                      - இதோ


வாசிக்க வேண்டிய வேத பகுதி :

 யோவான் 1:14, வெளி 21:3

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. 
யோவான் 1:14

மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன், அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார், அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். 
வெளிப்படுத்தினத விசேஷம் 21:3

ஆதாமிடம் வாசம்.. ஏதேன்

மோசேயிடம் வாசம்.. ஆசரிப்பு கூடாரம்

சாலமோன்.. தேவாலயம்

கிறிஸ்துவே வெளிப்பட்டார்

1 பேதுரு 1:20

அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய்த் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்பட்டார். 
1 பேதுரு 1:20

4 சுவிசேஷங்கள்..

மத்தேயு.. இயேசுவை ராஜா
மாற்கு.. அடிமை
லூக்கா.. மனுஷன்
யோவான்.. தேவன்..

மத்தேயு.. ராஜா வம்ச வரலாறு
மாற்கு.. அடிமை வம்ச வரலாறு தேவை இல்லை
லூக்கா.. மனுஷன்.. ஆதாம் வம்ச வரலாறு
யோவான்.. தேவன்.. வம்ச வரலாறு தேவை இல்லை

யூதருக்கு ராஜா..
 மத் 1:1 ஆபிரகாம்.. தாவீது
மத்தேயு இயேசுவுக்கு 2 நாமம்

ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: 
மத்தேயு 1:1

1. இயேசு.. 1:21
2. இம்மானுவேல் 1:23

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். 
மத்தேயு 1:21

அவன், இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். 
மத்தேயு 1:23

இந்த பிள்ளை குறித்து மத்தேயு இவ்வாறு கூறுகிறார்..

1. திட்டமாய் விசாரிக்க வேண்டிய பிள்ளை வ 8


2. நட்சத்திரம் பிள்ளை ஸ்தலத்தில் நின்றது 9


3. பணிந்து கொள்ள வேண்டிய பிள்ளை 11


4. எகிப்துக்கு கொண்டு போகப்பட்ட பிள்ளை 13


5. எகிப்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பிள்ளை 14


6. பிள்ளையின் பிராணனை வாங்க தேடின ஏரோது 20


7. நாசரேதுக்கு வந்த நசரேயன் பிள்ளை 21


பணிந்து கொள்ள வேண்டிய பிள்ளை..
1. பொன்.. ராஜரீகம்
2. தூப வர்க்கம்.. ஆசாரிய ஊழியம்
3. வெள்ளை போளம்.. மரணம்



மாற்கு கிறிஸ்து அடிமை என்று கூறுவதால் வம்சம் இல்லை.. ஊழியம் கொள்ள அல்ல ஊழியம் செய்ய வந்தார்
மாற்கு 10:45
லூக்கா.. மனுஷன்..
 இரட்சகர்.. 2:11
1 தீமோ 1:15
தீத்து 2:13 மகா தேவன் இரட்சகர்
BC AD
Historical man jesus
நம் மத்தியில் வாழ்ந்த அவர்..
The man lived among us.. கேரளா கைப்பிரதி
குடி மதிப்பு
லூக் 2:1-5
பிள்ளையை
துணிகளில் சுற்றி
Swaddling cloth..2:7
ஆட்டுக்குட்டி பிரசவத்துக்கான துணி..
மேய்ப்பர்கள்..
இவர்கள் பஸ்கா ஆடுகளை நிர்ணயிப்பவர்கள்.. வளர்ப்பவர்கள்...
வயல் வெளி
Beit sahur
போவாஸ் வயல் அருகில் ரூத் 3:5
ஆதி 35:21
Shepherds field
மந்தையின் துருக்கம்.. மீகா 4:8
மத் 1:21..லுக் 1:31
அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக
லுக் 2:6-12
பிள்ளையை துணிகளில் சுற்றி.. அடையாளம்
பஸ்கா ஆடு..
பிள்ளையை ஆராதித்த ஐந்து பேர்..
1. சாஸ்திரிகள்
2. பரம சேனையின் திரள்
3. மேய்ப்பர்கள்
4. சிமியோன்
5. அன்னாள்..
2.பரம சேனையின் திரள்..லுக் 2:13-19
இரட்சகர்
தேவனை துதித்தார்கள்
தீவிரம்.. salvation urgent
3. மேய்ப்பர்கள்
பஸ்கா ஆடு வளர்ப்பவர்கள்
V20 கண்டது என்ன?
“ ஆடு பிரசவிக்கும் துணிகளுக்கு இடையே பாலகன் “
இனி பஸ்கா ஆடு வளர்க்க வேண்டியது இல்லை..
யோவான் 1:29,36
4. சிமியோன்..
லுக் 2:21-35
5. அன்னாள்
லுக் 2:36-40

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA