*நீங்கள் ஏன் இரட்சிப்பில்லாமல் மரிக்க வேண்டும்?*


✨✨✨✨✨✨✨

 *மனிதன் மரித்தால் அவன் திரும்ப வாழமுடியுமா?* 

✨✨✨✨✨✨✨

IS DEAD MAN LIVE AGAIN?

✨✨✨✨✨✨✨

TCBA @ GOSPELMOMEMTS

✨✨✨✨✨✨✨

🌺செயற்கை நுண்ணறிவு AI ஆய்வும் வளர்ச்சியும் முன்னேற்றமும் உள்ள இந்த நாட்களில் எதுவும் சாத்தியம் என்பது மனிதன் எண்ணத்தில் ஓங்கி நிற்கிறது..

🌺செயற்கை மனிதர்கள் 
உருவாக்கபடுகிறரர்கள்..
artificial men.. Robot
அவர்களுக்கு மரணம் கிடையாது..
அழிவு என்பது இல்லை..

🍒தொடர்ந்து இயற்கை மனிதர்களும் ஏன் அழிவில்லாமல் வாழக்கூடது என்கிற எண்ணமும் செயற்கை நுண்ணறிவு மருத்துவவுலகில் இல்லமல் இல்லை..

====================

 🍒*Verse for meditation..* 

 _மனுஷன் செத்தப்பின் பிழைப்பானோ ?_ எனக்கு மாறுதல் எப்போது வருமென்று உனக்கு குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். 
யோபு 14:14

====================

🍒மனிதனுக்கு தொடக்கம் உண்டு ஆனால் முடிவு கிடையாது..


🌺1. _எல்லா கல்லறைகளும் திறக்கப்படும்.._ 

இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்: ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும். 
யோவான் 5:28

🌺2. _சிலர் நித்திய வாழ்வின் உயிர்தெழுதலுக்காக எழுப்பப்படுவர்_ .. 

அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். 
யோவான் 5:29

🌺3. _சிலர் நித்திய ஆக்கினைக்காக உயிர்த்தெழுவார்கள்_ .. 

அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். 
யோவான் 5:29

🌺4. _இரட்சிக்கப்பட்டோர் நித்திய மகிமைக்காக எழுப்புவார்கள்.._ 

 கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும். பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். 
1 கொரிந்தியர் 15:43

🌺5. _இரட்சிக்கப்படாதோர் நித்திய ஆக்கினைக்காக எழுப்புவார்கள்.._ 

 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். 
தானியேல் 12:2

====================

♥️♥️♥️♥️♥️♥️♥️
 *அப்படியென்றால்* ... 

 *நீங்கள் ஏன் இரட்சிப்பில்லாமல் மரிக்க வேண்டும்?* 

 *Verse for meditation..* 

 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன், இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள், *நீங்கள் ஏன் சாகவேண்டும்* என்கிறார் என்று அவர்களோடே சொல்லு. 
எசேக்கியேல் 33:11

♥️1. _கிறிஸ்துவில் எல்லோருக்கும் வாழ்கை உள்ளது.._ 

ஏனெனில்,பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார். 
யோவான் 5:26

♥️2. _தேவன் நித்திய ஜீவனை எல்லோருக்கும் தருகின்றார்_ .. 

பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். 
ரோமர் 6:23

♥️3. _வாழ்விற்கான வழி எளிமையானது.._ 

என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 
யோவான் 5:24

♥️4. _வாழ்வில் நிலைத்திருப்பது நிச்சயமானது.._ 

தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். 
குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். 
1 யோவான் 5:11-12

♥️5. _வாழ்வின் நித்தியம் மகிமையானது.._ 

 இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். 
ரோமர் 6:22

♥️6. _வாழ்வை புறக்கணிப்பது அழிவானதாகும்_ .. 

 அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி; முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது. நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம். 
அப்போஸ்தலர் 13:46

✨✨✨✨✨✨✨

♥️ *Closing thought..* 

 *கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் மட்டுமே பிழைப்பீர்கள்..* 

 நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். 
யோவான் 6:69

✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி

shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

TCBA TUTICORIN 

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

GATHERING OF SAINTS 
CHURCH AS FAMILY 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA