EXODUS TV AT ♥️2026 TCBA @ NEW YEAR MESSAGE ✨✨✨✨✨✨✨♥️ 2026 ♥️2026 ♥️



EXODUS TV அருளுரை துளிகள்

https://youtu.be/c8IjCja1UyA?si=7oWbqhXBtLTVofsh

✨✨✨✨✨✨✨

2026 TCBA @ NEW YEAR MESSAGE 

✨✨✨✨✨✨✨

⚠️1. நீ ஆயத்தப்படு,

⚠️2. உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து, 

⚠️3. நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு. 
எசேக்கியேல் 38:7

⚠️ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்
ஆயத்தமாகிடுவோம்

நம் கால மனிதர் இயேசுவை காண ஆயத்தமாகிடுவோம்
நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து வருகை மிக சமீபம்




♥️ 2026 ♥️2026 ♥️

🍒1. மீட்கும் வருடம்..

YEAR OF REDEMPTION 

🤝இரட்சிப்பை அறிவிப்போம்..

நீதியைச் சரிக்கட்டும் நாள் என் மனதிலிருந்தது, என்னுடையவர்களை மீட்கும் வருஷம் வந்தது. 
ஏசாயா 63:4

🍒2. கிருபையின் வருடம் 

YEAR OF GRACE

🤝கனி கொடுப்போம்

அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்,
லூக்கா 13:8a

🍒3. நன்மையான வருடம்

YEAR OF GOODNESS

🤝நன்மைகளை ஈவாக பகிர்வோம்

வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர், உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது. 
சங்கீதம் 65:11

🍒4. அனுக்கிரக வருடம்

YEAR OF ACCEPTANCE

🤝 ஆயத்தமாவோம்

கர்த்தருடைய அநுக்கிரகவருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச்சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், 
ஏசாயா 61:2

லூக் 4:19

🍒5. உன்னதமானவருடைய வருடம்

YEAR OF ALMIGHTY

🤝ஆயத்தப்படுத்துவோம்

அப்பொழுது நான்: இது என்பலவீனம், ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன். 
சங்கீதம் 77:10

🍒6. இரட்சணிய வருடம் ( நாள் )

YEAR OF SALVATION

🤝காவலாளியாக இருப்போம்

 அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே. இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.
 2 கொரிந்தியர் 6:2

:::::::::::::::::::::::::::::::::

♥️சிந்திப்போம்

✨பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம். 
2 பேதுரு 3:8

✨தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்து தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். 
2 பேதுரு 3:9

:::::::::::::::::::::::::::::::::::


♥️தீர்மானம் செய்வோம்..

⚠️1. நீ ஆயத்தப்படு,

🤝🤝🤝

🌸ஆகையால் இஸ்ரவேலே, இந்தப் பிரகாரமாக உனக்குச் செய்வேன். இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிற படியினால் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு. ஆமோஸ் 4.12

🌸இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே. ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே. 
2 கொரிந்தியர் 5.5

 நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன், நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். 
லூக்கா 22.32

⚠️2. உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து, 

 அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின. அப்போஸ்தலர் 16.5

நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும், ரோமர் 1.10

இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின்படியே உங்களை ஸ்திரப்படுத்த வல்லவரும், 
ரோமர் 16.26

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார். 
1 கொரிந்தியர் 1.8

உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே. 
2 கொரிந்தியர் 1.21

இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக. 
1 தெசலோனிக்கேயர் 3.13

 உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக. 
2 தெசலோனிக்கேயர் 2.17

 கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார். 
2 தெசலோனிக்கேயர் 3.3

அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார். 
எபிரேயர் 6.17

 பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள்.போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது. போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே.
 எபிரேயர் 13.9

நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள். கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.
 யாக்கோபு 5.8

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவராக. 
1 பேதுரு 5.10

⚠️3. நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு. 
எசேக்கியேல் 38:7

சபை குடும்பம்..
சொந்த குடும்பம் சபை..

 என் கட்டுகளிலும், நான் சவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது. 
பிலிப்பியர் 1.7

🍒🍒🍒பாடல்...

⚠️ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்
ஆயத்தமாகிடுவோம்

iltseநீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து வருகை மிக சமீபம்

⚠️1. தீபத்தில் எண்ணெய் வற்றாது காத்து
ஆயத்தமாகிடுவோம் தாலந்தைத் தரையில்
புதைத்துவிடாமல் ஆயத்தமாகிடுவோம் – நம் கால

⚠️2. முந்தினோர் அநேகர் பிந்தினோராவார்
ஆயத்தமாகிடுவோம் முடிவு பரியந்தம்
நிற்பவர் மகிழ்வார் ஆயத்தமாகிடுவோம் – நம் கால

⚠️3. தேடாதே உனக்குப் பெரிய காரியம்
ஆயத்தமாகிடுவோம் தேடு தொழுவத்தில்
இல்லாத ஆடுகளை ஆயத்தமாகிடுவோம் – நம் கால

🍅 *HAPPY AND BLESSED NEW YEAR 2026* 🍅

✨✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3

TCBA TUTICORIN 3

shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301
+91 9444242318

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

GATHERING OF SAINTS CHURCH AS FAMILY 

✨✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA