✨✨✨✨✨✨✨♥️இந்த வார்த்தை♥️ ♥️THESE WORDS♥️
✨✨✨✨✨✨✨
♥️இந்த வார்த்தை♥️
♥️THESE WORDS♥️
✨✨✨✨✨✨✨
TCBA@MORN DEVOTION
✨✨✨✨✨✨✨
🍒" இந்த வார்த்தை "
என்கிற வார்த்தை வேதத்தில் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு இரண்டு ஏற்பாடுகளிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது..
🍒வேதத்தில் இயேசு கிறிஸ்துவை நேரிடையாகவும் மறைமுகமாகவும் குறிப்பிடுகிற அநேக காரியங்களில் குறிப்பிடத்தக்கது..
🌺 "வார்த்தை"
யோவான் 1 ம் அதிகாரம்
🌺 " ஞானம் "
யாக்கோபு 3 ம் அதிகாரம்
" *இந்த வார்த்தை"* என்கிற பதத்தின் மேன்மையை சிந்திப்போம்..
" *இந்த வார்த்தை "*
♥️1. உடன்படிக்கை..
அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்து, *இந்த வார்த்தைகள்* யாவையுங்குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றான். யாத்திராகமம் 24. 2
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: *இந்த வார்த்தைகளை* நீ எழுது. இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார். யாத்திராகமம் 34.27
Then the Lord said to Moses, “Write down these words, for in accordance with these words I have made a covenant with you and with Israel.”
♥️2. உணர்த்துதல்
மோசே *இந்த வார்த்தைகளை* இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொன்னபோது, ஜனங்கள் மிகவும் துக்கித்தார்கள். எண்ணாகமம் 14.39
♥️3. வல்லமை.. நீதி..
அவன் *இந்த வார்த்தைகளை* யெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது, எண்ணாகமம் 16. 31
♥️4. பரிபூரணம்..
*இந்த வார்த்தைகளைக்* கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார், அவைளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார். உபாகமம் 5. 22
♥️5. இருதயத்தில் வாசம்..
இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற *இந்த வார்த்தைகள்* உன் இருதயத்தில் இருக்கக்கடவது. உபாகமம் 6.6
♥️6. கனத்திற்குரியது.
அவன் என்னை நோக்கி: பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளின்பேரில் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; *இந்த வார்த்தையை* அவன் என்னிடத்தில் சொல்லுகையில் நடுக்கத்தோடே எழுந்து நின்றேன். தானியேல் 10.11
♥️7. முத்திரை போடப்பட்ட புதைபொருள்..
தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் *இந்த வார்த்தைகளைப்* புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு. அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.
தானியேல் 12. 4
அதற்கு அவன்: தானியேலே, போகலாம். *இந்த வார்த்தைகள்* முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்தரிக்கப்பட்டும் இருக்கும்.
தானியேல் 12. 9
♥️8. அதிகாரம்..
இயேசு *இந்த வார்த்தைகளைச்* சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால், மத்தேயு 7.28
♥️9. பரிசுத்த ஆவியானவர் கிரியை..
*இந்த வார்த்தைகளைப்* பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அப்போஸ்தலர் 10. 44
♥️10. விசுவாசத்தின் வார்த்தை..
*இந்த வார்த்தை* உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது, *இந்த வார்த்தை* நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.
ரோமர் 10.8
♥️11. தேற்றும்..
ஆகையால், *இந்த வார்த்தைகளினாலே* நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்
1 தெசலோனிக்கேயர் 4. 18
♥️12. உண்மையுள்ளது..
*இந்த வார்த்தை* உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமாயிருக்கிறது.
1 தீமோத்தேயு 4. 6
*இந்த வார்த்தை* உண்மையுள்ளது. என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம். 2 தீமோத்தேயு 2.11
*இந்த வார்த்தை* உண்மையுள்ளது. தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.
இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள். தீத்து 3.8
:::::::::::::::::::::::::::::::::
♥️சகோதரரே!!!!
♥️நம் வார்த்தைகள்..
இரண்டு சம்பவங்கள் ஒன்று பழைய ஏற்பாடு.. மற்றொன்று புதிய ஏற்பாடு..பகிர்கிறேன்
*இந்த வார்த்தைகள்* அதிகாரத்தை கவனியுங்கள்..
🌺1. நேபு காத் நேச்சர்..
🍒PRIDE WORDS FOR DESTRUCTION..
🍒அழிவை கொண்டு வரும் பெருமையின் வார்த்தை..
*இந்த வார்த்தை* ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று.
தானியேல் 4:31
🌺2. பேதுரு..
🍒PUNISHING WORDS FOR DISCIPLINE
🍒சபை ஒழுங்குக்கான தண்டனை வார்த்தை..
அனனியா *இந்த வார்த்தைகளைக்* கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.
அப்போஸ்தலர் 5:5
::::::::::::::::::::::::::::::::
♥️நிதானிப்போம்..
சேனைகளுடைய கர்த்தரின் வீடாகிய ஆலயம் கட்டுப்படும்படிக்கு அதின் அஸ்திபாரங்கள் போடப்பட்ட நாள்முதற் கொண்டிருக்கிற தீர்க்கதரிசிகளின் வாயினால் *இந்த வார்த்தைகளை* இந்நாட்களில் கேட்டுவருகிறவர்களே, உங்கள் கைகள் திடப்படக்கடவது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா 8:9
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
+91 9444242318
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
CHURCH AS FAMILY
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment