✨✨✨✨✨✨✨THE PERFECT WORSHIP பூரணமான ஆராதனை ✨✨✨✨✨✨✨✨TCBA@WORSHIPTIME
✨✨✨✨✨✨✨
THE PERFECT WORSHIP
பூரணமான ஆராதனை
✨✨✨✨✨✨✨✨
TCBA@WORSHIPTIME
✨✨✨✨✨✨✨✨
விசுவாசிகள் அறிந்து கொள்ள வேண்டியதும் செலுத்த வேண்டியதுமான பலிகள்..
1. விசுவாசமாகிய பலி
2. ஆராதனை பலி
3. ஜெபம் பலி
4. ஊழியம் பலி
5. கர்த்தருக்கு கொடுப்பது பலி
6. ஸ்தோத்திரம் பலி
7. நன்மை, தான தர்மம் பலி
8. சரீர அர்ப்பணம் பலி
9. சரீர மரணம் பலி ( பான பலி )
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
விசுவாசிகள் அறிந்து கொள்ள வேண்டியதும் சிந்திக்க வேண்டியதுமான பிரமாணங்கள்..
1. பாவப்பிரமாணம்
2. பாவம் மரணம் பிரமாணம்
3. மனதின் பிரமாணம்
4. மனதின் பிரமாணத்துக்கு விரோதமாக போராடுகிற வேறொரு பிரமாணம்
5. தேவனுடைய பிரமாணம்
6. ஜீவனுடைய ஆவியின் பிரமாணம்
7. சுயாதீனப் பிரமாணமாகிய பூரண பிரமாணம்
8. அன்பின் பிரமாணம்
9. இந்தப் பிரமாணம் ( விருத்த சேதனம் அல்ல சிலுவையிலேயே அறையப்பட்டிருக்கிறேன் )
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
இன்றைக்கு எசேக்கியேல் புத்தகத்தில் இருந்து ஆலயப்பிரமாணம், ஆராதனை பிரமாணம் என்ன என்பதை தியானிப்போம்..
♥️ஆலயப் பிரமாணம்..
ஆலயத்தினுடைய பிரமாணம் என்னவென்றால்: மலையுச்சியின்மேல்சுற்றிலும் அதின் எல்லையெங்கும் மிகவும் பரிசுத்தமாயிருக்கும், இதுவே ஆலயத்தினுடைய பிரமாணம்.
எசேக்கியேல் 43:12
🌺நீங்களே அந்த ஆலயம்..
உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
1 கொரிந்தியர் 6:19
கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
1 கொரிந்தியர் 6:20
🍒🍒🍒🍒🍒🍒🍒
♥️ஆராதனை பிரமாணம்..
🍅ஆராதனை என்பது ஜீவியம்..
Worship is Life..
🍅ஆராதனை என்பது ஒரு நாள் event நிகழ்வு அல்ல
Worship is not Sunday event..
♥️ஆராதனை என்பது ஒவ்வொரு நாளும் நடைபெறும் தனிப்பட்ட ஜீவிய கனம்..
Worship is day to day honour in life..
ஆராதனை பிரமாணம்..
♥️முதல் நாளில்..
(பலிபீடத்தை உண்டு பண்ணும் நாள்..)
பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: பலிபீடத்தை உண்டுபண்ணும் நாளிலே அதின்மேல் தகனபலியிடுகிறதற்கும் அதின்மேல் இரத்தம் தெளிக்கிறதற்குமான கட்டளைகளாவன:
எசேக்கியேல் 43:18
எனக்கு ஆராதனை செய்கிறதற்கு என்னிடத்தில் சேருகிற சாதோக்கின் வம்சத்தாரான லேவி கோத்திரத்தாராகிய ஆசாரியர்களுக்கு நீ பாவநிவாரண பலியாக
⚠️1. ஒரு இளங்காளையைக் கொடுப்பாயாக என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 43:19
அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து,
⚠️2. அதின் நாலு கொம்புகளிலும்,
⚠️3. சட்டத்தின் நாலு கோடிகளிலும், சுற்றியிருக்கிற விளிம்பிலும் பூசி பாவநிவர்த்திசெய்து, அதைச் சுத்திகரித்து,
எசேக்கியேல் 43:20
பின்பு பாவநிவாரணத்தின் காளையைக் கொண்டுபோய், அதை ஆலயத்திலே ⚠️4. பரிசுத்த ஸ்தலத்துக்குப் புறம்பாகக் குறிக்கப்பட்ட இடத்திலே சுட்டெரிக்கவேண்டும். எசேக்கியேல் 43:21
♥️ இரண்டாம் நாள்..
இரண்டாம் நாளிலே பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணத்துக்காகப் பலியிடுவாயா, அவர்கள் இளங்காளையினாலே பலிபீடத்தைச் சுத்திசெய்ததுபோலப் பாவநிவாரணஞ் செய்யவேண்டும்.
எசேக்கியேல் 43:22
நீ பாவநிவாரணத்தை முடித்தபின்பு, பழுதற்ற ஒரு இளங்காளையையும், பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் மந்தையிலிருந்தெடுத்துப் பலியிடுவாயாக.
எசேக்கியேல் 43:23
அவைகளைக் கர்த்தருடைய சந்நிதியில் பலியிடுவாயாக, ஆசாரியர்கள் அவைகளின்மேல் உப்புதூவி அவைகளைக் கர்த்தருக்குத் தகனபலியாக இடக்கடவர்கள்.
எசேக்கியேல் 43:24
♥️ஏழு நாள் வரைக்கும்... தினம் தினம்..
ஏழுநாள்வரைக்கும் தினந்தினம் பாவநிவாரணத்துக்காக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் படைப்பாயாக, பழுதற்றவைகளான இளங்காளையையும் மந்தையிலிருந்தெடுத்த ஆட்டுக்கடாவையும் படைப்பார்களாக.
எசேக்கியேல் 43:25
ஏழுநாள்வரைக்கும் பலிபீடத்தைப் பாவநிவிர்த்திசெய்து, அதைச்சுத்திகரித்து, பிரதிஷ்டைபண்ணக்கடவர்கள்.
எசேக்கியேல் 43:26
♥️ வாரத்தின் முதல் நாள்.. செலுத்த வேண்டிய பலிகள்
அந்நாட்கள் முடிந்தபின்பு, எட்டாம் நாள்முதல் ஆசாரியர்கள் பலிபீடத்தின்மேல் உங்கள் தகனபலிகளையும் உங்கள் ஸ்தோத்திரபலிகளையும் படைப்பார்களாக,
♥️ கர்த்தர் அங்கீகரிக்கிறார்..
அப்பொழுது உங்களை அங்கீகரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 43:27
🍒🍒🍒🍒🍒🍒🍒
🌺கிறிஸ்துவே முழுமையான பலி..
♥️1. பழுதற்ற பலி
♥️2. கிருபாதார பலி
♥️3. ஒரே பலி
♥️4. விசேஷத்த பலி
🌺சகோதரரே!!!
ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
எபிரேயர் 12:28
நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.
எபிரேயர் 12:29
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
+91 9444242318
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
CHURCH AS FAMILY
GATHERING OF SAINTS
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment