தனி நபர் சுவிசேஷ பணி என் தீர்மானம்..TCBA @ MISSIONTHOUGHTPERSONAL EVANGELISM..தனி நபர் சுவிசேஷ பணி..
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
தனி நபர் சுவிசேஷ பணி என் தீர்மானம்..
TCBA @ MISSIONTHOUGHT
PERSONAL EVANGELISM..
தனி நபர் சுவிசேஷ பணி..
ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துகிறவன்..
SOUL WINNER..
@ ஆத்தும ஆதாயம் தேவனுடைய மிகப்பெரிய பணி ..
@ இந்த பணியும் பணியில் ஈடுபடும் மனிதர்களும் தேவனுடைய பார்வையில் விசேஷத்தவர்கள்..
இவர்கள்..
1. நித்தியத்திற்குரியவர்கள்..
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
தானியேல் 12:3
2. ஞானவான்கள்..
நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்: ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்கிறவன் ஞானமுள்ளவன்.
நீதிமொழிகள் 11:30
3. தங்களை அடிமைகளாக்க வேண்டும்..
நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஐனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.
1 கொரிந்தியர் 9:19
4. தங்களைக் கீழ்படுத்த வேண்டும்..
யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப்போலவுமானேன்.
1 கொரிந்தியர் 9:20
5. எல்லாருக்கும் எல்லாமுமாக வேண்டும்..
பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன். எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.
1 கொரிந்தியர் 9:22
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
ஆத்தும ஆதாயம் என்பது..
1. The Great Commission..
மிகப்பெரிய கட்டளை
மத்தேயு 28:19-20
2. The Great Gift..
மிகப்பெரிய ஈவு
எபே 4:11-12
3. The Great Commitment
மிகப்பெரிய பொறுப்பு
2 தீமோ 2:2
🌳🌳🌳🌳🌳
தனி நபர் சுவிசேஷ பணி செய்யும் பணியாளர்கள் தகுதிகள்..
1. சமாதானம் பெற்றிருக்க வேண்டும்..
எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சாமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே. அப்போஸ்தலர் 10. 36
2. கர்ப்ப வேதனை அடைய வேண்டும்..
கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே. கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்.
1 கொரிந்தியர் 4. 15
3. கிறிஸ்துவை நம்மில் வெளிப்படுத்த வேண்டும்.
தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும்பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்,
கலாத்தியர் 1. 16
4. மனத் தெளிவோடு சுவிசேஷகனுடைய வேலை செய்ய வேண்டும்.
நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.
2 தீமோத்தேயு 4. 5
5. சொல்லப்பட்டிராத இடங்களில் அறிவிக்க பிரயாசம் எடுக்க வேண்டும்..
நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன். ரோமர் 15. 21
6. ஒரு நாளுக்கு ஒருவருக்கு சுவிசேஷம் என்கிற நிபந்தனை மனதில் கொண்டு சுவிசேஷ பணி செய்ய வேண்டும்..
கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள். சங்கீதம் 96. 2
சுவிசேஷ பணி சுவிசேஷம் ஈவாக கிடைத்த ஒவ்வொருவருடைய பணி..
சிந்திப்போம்:
நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவங்குங்காலமாயிருக்கிறது. முந்தி நம்மிடத்திலே அது துவங்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? 1 பேதுரு 4. 17
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Comments
Post a Comment