♥️அவர் குமாரனுடைய நாமம் என்ன?♥️
✨✨✨✨✨✨✨
TCBA @ சபைக்கு செய்தி
✨✨✨✨✨✨✨
♥️அவர் குமாரனுடைய நாமம் என்ன?♥️
✨✨✨✨✨✨✨
தியான வசனம்:
வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?
நீதிமொழிகள் 30:4
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
தேவனுடைய குமாரனுடைய நாமம் என்ன என்பதையும் அந்த நாமத்தின் மேன்மையினல் நமக்கு கிடைக்கும் மேன்மைகள் கற்றுக்கொள் வோம்..
இந்த வாரத்தின் சபை ஆவிக்குரிய செய்தி இந்த வாரம் முழுவதும் உங்களுடன் பேசட்டும்..
♥️குமாரனுடைய நாமம்:
♥️1. இருக்கிறவராக இருக்கிறேன்..
I AM THAT I AM
அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.
அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
யாத்திராகமம் 3:13-14
::::::::::::::::::::::::::::::::::
♥️2. கர்த்தர்..
THE LORD..
கர்த்தரே யுத்தத்தில் வல்லவர். கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
யாத்திராகமம் 15. 3
::::::::::::::::::::::::::::::::::
♥️3. எரிச்சலுள்ளவர்..
JEALOUS..
கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம். யாத்திராகமம் 34.14
::::::::::::::::::::::::::::::::::::
♥️4. அதிசயம்..
WONDERFUL..
அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்; என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம் என்றார். நியாயாதிபதிகள் 13. 18
:::::::::::::::::::::::::::::::::::
♥️5. யேகோவா
JEHOVAH..
தேவனைப் பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள், வானாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள். சங்கீதம் 68. 4
ஆதலால், இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன், என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன், என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள். எரேமியா 16.21
:::::::::::::::::::::::::::::::::::::
♥️6. பரிசுத்தமும் பயங்கரமுமானது
HOLY AND AWESOME
அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார், அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது. சங்கீதம் 111.9
::::::::::::::::::::::::::::::::::::
♥️7. அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு
Wonderful Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace"
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா 9.6
::::::::::::::::::::::::::::::::::::
♥️8. நான் கர்த்தர்
I AM THE LORD
நான் கர்த்தர், இது என் நாமம், என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.
ஏசாயா 42.8
:::::::::::::::::::::::::::::::::::
♥️9. பரிசுத்தராகிய சேனைகளுடைய கர்த்தர்..
Our Redeemer—the LORD Almighty is his name—is the Holy One of Israel".
எங்கள் மீட்பருடைய நாமம் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய கர்த்தர் என்பது. ஏசாயா 47.4
உன் சிருஷ்டிகரே உன் நாயகர், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார். ஏசாயா 54. 5
தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர், ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல, கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர், இது பூர்வகாலமுதல் உம்முடைய நாமம். ஏசாயா 63.16
யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர், இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம். எரேமியா 10.16
:::::::::::::::::::::::::::::::::::::
♥️10. நீதியாயிருக்கிற கர்த்தர்..
"The LORD Our Righteousness".
அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும், அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே. எரேமியா 23.6
அந்நாட்களில் யூதா இரட்சிக்கப்பட்டு, எருசலேம் சுகமாய்த் தங்கும், அவர் எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தர் என்பது அவருடைய நாமம். எரேமியா 33. 16
:::::::::::::::::::::::::::::::::::
♥️11.சேனைகளின் கர்த்தர்
LORD OF HOSTS
அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; தேசத்தை இளைப்பாறப் பண்ணுவதற்கும், பாபிலோன் குடிகளைத் தத்தளிக்கப்பண்ணுவதற்கும் அவர்களுடைய வழக்கை அவர் நடத்துவார். எரேமியா 50.34
யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல அல்ல, அவர் சர்வத்தையும் உண்டாக்கினவர், இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம். எரேமியா 51.19
அவர் பர்வதங்களை உருவாக்கினவரும், காற்றைச் சிருஷ்டித்தவரும், மனிதனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின் மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார். சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம். ஆமோஸ் 4.13
:::::::::::::::::::::::::::::::::::
♥️12. அவருடைய நாமம் கிளை..
அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும். அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்.
சகரியா 6.12
இளங்கிளை
நீதியுள்ள கிளை..
:::::::::::::::::::::::::::::::::::
♥️13.பரிசுத்தமுள்ளது
HOLY
வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார், அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. லூக்கா 1. 49
:::::::::::::::::::::::::::::::::::::
♥️14.மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர்..
high priest "after the order of Melchizedek"
மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார். எபிரேயர் 5.10
:::::::::::::::::::::::::::::::::::::
♥️15. தேவனுடைய வார்த்தை
The Word of God..
இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார், அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. வெளிப்படுத்தினத விசேஷம் 19.13
:::::::::::::::::::::::::::::::::::
♥️16. ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா
King of Kings and Lord of Lords
ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின் மேலும் எழுதப்பட்டிருக்கிறது. வெளிப்படுத்தினத விசேஷம் 19. 16
:::::::::::::::::::::::::::::::::::::
🍒தேவன் மாம்சத்தில் வெளிப்பட்ட போது இரண்டு நாமங்கள் கொடுக்கப்பட்டது..
🌺1. இயேசு
🌺2. இம்மானுவேல்
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
மத்தேயு 1:21
அவன், இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
மத்தேயு 1:23
:::::::::::::::::::::::::::::::::::
அவருடைய நாமத்தினால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்...
ஏராளம்.. ஏராளம்..
இன்று சில அடிப்படை ஆசிர்வாதங்கள் மட்டும் சிந்திப்போம்...
🍒1. பாவ மன்னிப்பு
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.
அப்போஸ்தலர் 10:43
🍒2. நித்திய ஜீவன்
இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
யோவான் 20:31
🍒3. கனி கொடுக்கும் ஜீவியம்
நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை. நான் உங்களைத் தெரிந்துகொண்டேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.
யோவான் 15:16
🍒4. பாதுகாப்பு..
நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள், நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.
யோவான் 17:11
🍒5. பரிசுத்த ஆவியானவர்
என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
யோவான் 14:26
🌺இன்று நிறைவு செய்கிறேன்..
🌺சிந்தித்து செயல்படுவோம்..
கர்த்தர் விசாரிப்பார்..
என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.
உபாகமம் 18:19
Deuteronomy 18:19 states that God will hold "accountable" anyone who disobeys the prophet God will raise up, who speaks in God's name.
✨✨✨✨✨✨✨✨
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 3
shalomjjj@gmail.com
what's app
+91 9965050301
+91 9444242318
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
CHURCH AS FAMILY
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment