1 யோவான் நிருபம்...முரண்பாடுகள் விளக்கும் புத்தகம்.. A BOOK OF EXPLAINING CONTRASTS

1 யோவான் நிருபம்...முரண்பாடுகள் விளக்கும் புத்தகம்.. A BOOK OF EXPLAINING CONTRASTS 1 John Epistle

1 யோவான் நிருபம்...முரண்பாடுகள் விளக்கும் புத்தகம்.. 

A BOOK OF EXPLAINING CONTRASTS 1 JOHN EPISTLE..

1. ஒளி.. இருள்..


தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை. இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. 
1 யோவான் 1:5

நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம். 
1 யோவான் 1:6

அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 
1 யோவான் 1:7

LIGHT VS DARKNESS

This then is the message which we have heard of him, and declare unto you, that God is light, and in him is no darkness at all. 
1 John 1:5

If we say that we have fellowship with him, and walk in darkness, we lie, and do not the truth: 
1 John 1:6

But if we walk in the light, as He is in the light, we have fellowship one with another, and the blood of Jesus Christ his Son cleanseth us from all sin. 
1 John 1:7

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

2. பழைய கற்பனை.. புதிய கற்பனை..


சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன். அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே. 
1 யோவான் 2:7

மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது. ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது. 
1 யோவான் 2:8

ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான். 
1 யோவான் 2:9

தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான். அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை. 
1 யோவான் 2:10

தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான். இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான். 
1 யோவான் 2:11

OLD COMMANDMENT VS NEW COMMANDMENT

Brethren, I write no new commandment unto you, but an old commandment which ye had from the beginning. The old commandment is the word which ye have heard from the beginning. 
1 John 2:7

 Again, a new commandment I write unto you, which thing is true in him and in you: because the darkness is past, and the true light now shineth. 
1 John 2:8

 He that saith He is in the light, and hateth his brother, is in darkness even until now. 
1 John 2:9

He that loveth his brother abideth in the light, and there is none occasion of stumbling in him. 
1 John 2:10

But He that hateth his brother is in darkness, and walketh in darkness, and knoweth not whither He goeth, because that darkness hath blinded his eyes. 
1 John 2:11

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

3. பிதா... உலகம்...

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. 
1 யோவான் 2:15

ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். 
1 யோவான் 2:16

உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். 
1 யோவான் 2:17

FATHER VD WORLD..

Love not the world, neither the things that are in the world. If any man love the world, the love of the Father is not in him. 
1 John 2:15

For all that is in the world, the lust of the flesh, and the lust of the eyes, and the pride of life, is not of the Father, but is of the world. 
1 John 2:16

And the world passeth away, and the lust thereof: but He that doeth the will of God abideth for ever. 
1 John 2:17

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

4. அந்திக்கிறிஸ்து.. கிறிஸ்து..

பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது. அந்திகிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திகிறிஸ்துகள் இருக்கிறார்கள். அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம். 
1 யோவான் 2:18

CHRIST VS ANTICHRIST..

Little children, it is the last time: and as ye have heard that antichrist shall come, even now are there many antichrists; whereby we know that it is the last time. 
1 John 2:18

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

5. சத்தியம்... பொய்...

நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள். 
1 யோவான் 2:20

சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 
1 யோவான் 2:21

இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. 
1 யோவான் 2:22

குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான். 
1 யோவான் 2:23

TRUTH VS LIE

 But ye have an unction from the Holy One, and ye know all things. 
1 John 2:20

 I have not written unto you because ye know not the truth, but because ye know it, and that no lie is of the truth. 
1 John 2:21

Who is a liar but He that denieth that Jesus is the Christ? He is antichrist, that denieth the Father and the Son. 
1 John 2:22

23 Whosoever denieth the Son, the same hath not the Father: He that acknowledgeth the Son hath the Father also. 
1 John 2:23

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

6. தேவனுடைய பிள்ளைகள்...
பிசாசின் பிள்ளைகள்

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. 
1 யோவான் 3:1

பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். 
1 யோவான் 3:2

அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான் 
1 யோவான் 3:3

பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். 
1 யோவான் 3:4

அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள். அவரிடத்தில் பாவமில்லை. 
1 யோவான் 3:5

அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை. பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. 
1 யோவான் 3:6

பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள். நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான். 
1 யோவான் 3:7

பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான். ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். 
1 யோவான் 3:8

தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். 
1 யோவான் 3:9

இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும். நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. 
1 யோவான் 3:10

CHILDREN OF GOD VS CHILDREN OF THE DEVIL

 Behold, what manner of love the Father hath bestowed upon us, that we should be called the sons of God: therefore the world knoweth us not, because it knew him not. 
1 John 3:1

 Beloved, now are we the sons of God, and it doth not yet appear what we shall be: but we know that, when He shall appear, we shall be like him; for we shall see him as He is. 
1 John 3:2

And every man that hath this hope in him purifieth himself, even as He is pure. 
1 John 3:3

 Whosoever committeth sin transgresseth also the law: for sin is the transgression of the law. 
1 John 3:4

 And ye know that He was manifested to take away our sins; and in him is no sin. 
1 John 3:5

 Whosoever abideth in him sinneth not: whosoever sinneth hath not seen him, neither known him. 
1 John 3:6

 Little children, let no man deceive you: He that doeth righteousness is righteous, even as He is righteous. 
1 John 3:7

 He that committeth sin is of the devil; for the devil sinneth from the beginning. For this purpose the Son of God was manifested, that He might destroy the works of the devil. 
1 John 3:8

 Whosoever is born of God doth not commit sin; for his seed remaineth in him: and He cannot sin, because He is born of God. 
1 John 3:9

 In this the children of God are manifest, and the children of the devil: whosoever doeth not righteousness is not of God, neither He that loveth not his brother. 
1 John 3:10

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

7. ஜீவன்... மரணம்...

நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். 
1 யோவான் 3:14

LIFE VS DEATH..

We know that we have passed from death unto life, because we love the brethren. He that loveth not his brother abideth in death. 
1 John 3:14

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

8. அன்பு.. பகை..

தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான். மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். 
1 யோவான் 3:15

அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். 
1 யோவான் 3:16

LOVE VS HATRED..

Whosoever hateth his brother is a murderer: and ye know that no murderer hath eternal life abiding in him. 
1 John 3:15

Hereby perceive we the love of God, because He laid down his life for us: and we ought to lay down our lives for the brethren. 
1 John 3:16

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

9. சத்திய ஆவி... வஞ்சகஆவி 

நாங்கள் தேவனால் உண்டானவர்கள். தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான். தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை. இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம். 
1 யோவான் 4:6

SPIRIT OF TRURH VS SPIRIT OF ERROR

We are of God: He that knoweth God heareth us; He that is not of God heareth not us. Hereby know we the spirit of truth, and the spirit of error. 
1 John 4:6

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

10. கள்ளத்தீர்க்கதரிசிகள் உபதேசம்..
ஆரோக்கியமான உபதேசம்..

பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். 
1 யோவான் 4:1

தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. 
1 யோவான் 4:2

மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல. வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திகிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. 
1 யோவான் 4:3

FALSE DOCTRINE VS SOUND DOCTRINE

 Beloved, believe not every spirit, but try the spirits whether they are of God: because many false prophets are gone out into the world. 
1 John 4:1

Hereby know ye the Spirit of God: Every spirit that confesseth that Jesus Christ is come in the flesh is of God: 
1 John 4:2

 And every spirit that confesseth not that Jesus Christ is come in the flesh is not of God: and this is that spirit of antichrist, whereof ye have heard that it should come; and even now already is it in the world. 
1 John 4:3


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

11. அன்பு.. பயம்...

அன்பிலே பயமில்லை. பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 
1 யோவான் 4:18

அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். 
1 யோவான் 4:19

LOVE VS FEAR..

There is no fear in love; but perfect love casteth out fear: because fear hath torment. He that feareth is not made perfect in love. 
1 John 4:18

We love him, because He first loved us. 
1 John 4:19

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

12. நித்திய ஜீவன் உடையவன்..
நித்திய ஜீவன் இல்லாதவன்..

தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். 
1 யோவான் 5:11

குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். 
1 யோவான் 5:12

HATH ETERNAL LIFE VS 
HATH NOT ETERNAL LIFE

And this is the record, that God hath given to us eternal life, and this life is in his Son. 
1 John 5:11

He that hath the Son hath life; and He that hath not the Son of God hath not life. 
1 John 5:12

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

இறுதியாக சகோதரரே..

மரணத்துக்கு ஏதுவான பாவம்..
அறிக்கை செய்யாத பாவம்..

மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம்..
அறிக்கை செய்த பாவம்..

மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தை தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார். யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே. மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன். 
1 யோவான் 5:16

அநீதியெல்லாம் பாவந்தான். என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுண்டு. 
1 யோவான் 5:17

தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான். 
1 யோவான் 5:18

FINALLY BRETHREN..

SIN NOT UNTO DEATH.. VS
SIN UNTO DEATH..

16 If any man see his brother sin a sin which is not unto death, He shall ask, and He shall give him life for them that sin not unto death. There is a sin unto death: I do not say that He shall pray for it. 
1 John 5:16

17 All unrighteousness is sin: and there is a sin not unto death. 
1 John 5:17

We know that whosoever is born of God sinneth not; but He that is begotten of God keepeth himself, and that wicked one toucheth him not. 
1 John 5:18



🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

நம் பாவம் அறிக்கை செய்வோம்...

RECONCILIATION IS A MUST FOR GOD'S CHILDREN

நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. 
1 யோவான் 1:8

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 
1 யோவான் 1:9

நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம். அவருடைய வார்த்தை நமக்குள் இராது. 
1 யோவான் 1:10

LET US CONFESS OUR SINS..

If we say that we have no sin, we deceive ourselves, and the truth is not in us. 
1 John 1:8

 If we confess our sins, He is faithful and just to forgive us our sins, and to cleanse us from all unrighteousness. 
1 John 1:9

If we say that we have not sinned, we make him a liar, and his word is not in us. 
1 John 1:10



Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA