✨✨✨✨✨✨நீ எழுந்து..Ye Arise...✨✨✨✨✨✨✨TCBA @ MORNDEV✨✨✨✨✨✨✨


✨✨✨✨✨✨

நீ எழுந்து..

Ye Arise...

✨✨✨✨✨✨✨

TCBA @ MORNDEV

✨✨✨✨✨✨✨

நீ எழுந்து....

♥️1. நடந்து திரி....

🌺சுதந்திரி...

 நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்துதிரி. உனக்கு அதைத் தருவேன் என்றார். ஆதியாகமம் 13. 17

♥️2. பிள்ளையை பிடித்து கொண்டு போ..

🌺சந்ததி ஆசிர்வாதம்..

 நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினாலே பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். ஆதியாகமம் 21. 18

♥️3. தேசத்தை விட்டு புறப்படு..

🌺இனத்தார் இரட்சிப்பு..

 நீ தூணுக்கு அபிஷேகஞ்செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே. இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான். ஆதியாகமம் 31. 13

♥️4. சேனையினிடம் போ..

🌺ஜெயம்..

 அன்று ராத்திரி கர்த்தர் அவனை நோக்கி: நீ எழுந்து, அந்தச் சேனையினிடத்திற்குப் போ. அதை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன். நியாயாதிபதிகள் 7.9

♥️5. அபிஷேகம் பண்ணு..

🌺தொடர் ஊழிய தலைமத்துவம்..

 ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான். அவன் சிவந்தமேனியும், அழகிய கண்களும் நல்ல ரூபமுள்ளவனுமாயிருந்தான். அப்பொழுது கர்த்தர்: இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார். 
1 சாமுவேல் 16:12

♥️6. தங்கியிரு..

🌺தேவ பராமரிப்பு..

 நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றான்.
 1 இராஜாக்கள் 17. 9

♥️7. எதிர்ப்பட போ

🌺தேவ சித்தத்துக்கு எதிரான கடிந்து கொள்ளல்..

கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களுக்கு எதிர்ப்படப்போய்: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்? 
2 இராஜாக்கள் 1.3

♥️8. வா...

🌺நேசர் பிரியம் பெற..

 அத்திமரம் காய்காய்த்தது, திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது, என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்துவா. உன்னதப்பாட்டு 2.13

♥️9. குயவன் வீட்டிற்குப்போ,

🌺கர்த்தர் உடைந்த உன்னை வனைய..

 நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ, அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார். 
எரேமியா 18. 2

♥️10. விரோதமாய் பிரசங்கி

🌺தேசம் இரட்சிப்பை அடைய..

நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார். யோனா 3. 2

♥️11. படுக்கையை எடு..

🌺பாவ மன்னிப்பு..

 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார். 
மத்தேயு 9.6

♥️12. போ..

🌺விசுவாசம் மற்றும் இரட்சிப்பு..

அவனை நோக்கி: நீ எழுந்துபோ,உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். லூக்கா 17.19

♥️13. வனாந்திரமார்க்கம் செல்..

🌺தனி நபர் இரட்சிப்பு..

பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி; நீ எழுந்து, தெற்குமுகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ என்றான். அப்போஸ்தலர் 8.26

♥️14. பட்டணத்துக்குள்ளே போ..

🌺தேவ சித்தம் அறிந்து கொள்ள..

 அவன் நடுங்கித் திகைத்து; ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்; நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அப்போஸ்தலர் 9. 6

♥️15. கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்..

🌺பூரண இரட்சிப்பு..

இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான். அப்போஸ்தலர் 22.16

♥️ 16. எழும்பி..

🌺பிரகாசி..

எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. 
ஏசாயா 60:1

♥️17. காலுன்றிநில்..

🌺தேவ தரிசனம் பெற்றுக்கொள்..

இப்பொழுது நீ எழுந்து, காலுன்றிநில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்ப்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன். அப்போஸ்தலர் 26.16

🌺சகோதரரே..

♥️நீ எழுந்து..

🌺 நித்தியத்தில்..

 பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார். 
வெளிப்படுத்தினத விசேஷம் 11. 1

✨✨✨✨✨✨✨

shalomjjj@gmail.com 
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 3

 CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA