✨✨✨✨✨✨✨சிறிய நெருப்புகொஞ்சம் புளிப்பு✨✨✨✨✨✨✨TCBA@MORNDEV



✨✨✨✨✨✨✨

சிறிய நெருப்பு

கொஞ்சம் புளிப்பு

✨✨✨✨✨✨✨

TCBA@MORNDEV

✨✨✨✨✨✨✨

தேவனுடைய பார்வையில் பாவம் பாவம் தான்..

விசுவாசிகள் செய்கிற பாவம் அநேக வேறு ரூபத்தில் செய்யப்படுகிறது..

✨ அறியாமை
✨ குற்றம்
✨ தவறு
✨ பெலவீனம்
✨ மாம்சம்
✨ tongue slip
✨ பழைய சுபாவம்
✨ சரீர மீட்பு இன்னும் வரவில்லை
✨ பழக்கங்கள்
✨ உலக வழக்கம்
✨ மனுஷரை பிரியப்படுத்துதல்
✨ மாய்மாலம்
✨ வேஷம்
✨ தன்மானம்

இன்னும் அநேக நிலைகளில் நம்மை நீதிமான்களாக வெளிப்படுத்த சிறிய சிறிய பாவத்தை சபையில் குடும்பங்களில் மறைத்து வாழ முயற்சிக்கிறோம்..
அதன் விளைவுகளை அறியாமல்!!!!

வேதம் சில சிறிய விஷயங்கள் எவ்வளவு ஆபத்தானது என்பதை வலியுறுத்துகிறது..
கவனிப்போம்..

🍒🍒🍒🍒🍒🍒🍒

🐒1. கொஞ்சம் புளித்த மா அனுமதித்தால்...

நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல. கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? 
1 கொரிந்தியர் 5:6

🐒2. நியாயப்பிரமாணம் ஒன்றில் தவறினால்...

 எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான். 
யாக்கோபு 2:10

🐒3. ஒரு சொல் தவறினால்..

நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான். 
யாக்கோபு 3:2

🐒4. செத்த ஈக்கள்...

செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; 

🐒5. சொற்ப மதியீனம்

ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும். பிரசங்கி 10:1

🐒6. கசப்பான வேர்...

 ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், எபிரேயர் 12:15

🐒7. சிறிய நெருப்பு...நாவு

அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது! 
யாக்கோபு 3:5

நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது! 
யாக்கோபு 3:6

🤝8. சிறிதான சுக்கான்..

கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும். 
யாக்கோபு 3:4

🐒9.காண முடியாத உணரக்கூடிய மனச்சாட்சி...

இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள். 1 தீமோத்தேயு 1:19

இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள். அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன். 
1 தீமோத்தேயு 1:20

🤝10. முதற்பலனாகிய மா..

மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும், வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும். 
ரோமர் 11:16

🤝11. வேரானது..

மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும், வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும். 
ரோமர் 11:16

🐒12. கடிவாளம்..

பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம். 
யாக்கோபு 3:3

🐒13. ஆகான் தனிப்பட்ட பாவம்..

அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலெல்லாருங்கூடச் சேராகின் புத்திரனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும் சால்வையையும் பொன்பாளத்தையும், அவன் குமாரரையும் குமாரத்திகளையும், அவன் மாடுகளையும் கழுதைகளையும் ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள். 
அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கப்பண்ணினதென்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார் என்றான். அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி. 
அவன்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள். இப்படியே கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார். ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும். 
யோசுவா 7:24-26

🐒14. அனனியா சப்பிராள் கூட்டு பாவம்..

சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று. 
அப்போஸ்தலர் 5:11

🐒15. ஒரு வேளை போஜனம்
ஒரு நிமிடம் சந்தோசம்..

ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஐனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். 
எபிரேயர் 12:16

ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளவிரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள். அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான். 
எபிரேயர் 12:17

:::::::::::::::::::::::::::::::::::::

🌺சிந்தனைக்கு

எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்: 

தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான். நீதிமொழிகள் 28:14

✨✨✨✨✨✨✨

shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301

TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 3

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA