நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து ... CHRIST OUR PASSOVER LAMB✨✨✨✨✨✨✨TCBA @ ஆராதனை ஆயத்த தியானம் EXODUS TV அருளுரை துளிகள்

✨✨✨✨✨✨✨

நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து 

Christ, our Passover lamb

✨✨✨✨✨✨✨

TCBA @ ஆராதனை ஆயத்த தியானம் 

✨✨✨✨✨✨✨

தியான வசனம்:

ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. 
1 கொரிந்தியர் 5:7

1 Corinthians 5:7 states, "Cleanse out the old leaven, that you may be a new lump, as you really are unleavened. For Christ, our Passover lamb, has been sacrificed". 

🍒🍒🍒🍒🍒🍒🍒

பஸ்கா வின் தேவை அல்லது அவசியம்?

பஸ்கா என்பது
புளிப்பில்லாத அப்பத்தோடே ஆசரிக்கும் பண்டிகை ஆகும்.. ( பஸ்கா )

🌺பஸ்காவின்
 நியமம் 1:

பலியின் தகுதி:

அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர் யாவரையும் அழைப்பித்து: நீங்கள் உங்கள் குடும்பங்களுக்குத் தக்கதாக உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துதெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து, 
ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்துக் கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள். விடியற்காலம்வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம். 
யாத்திராகமம் 12:21-22

🌸பஸ்காவின்
 நியமம் 2:

புசிக்குந் தகுதி..

அதைப் புசிக்கவேண்டடிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள். அது கர்த்தருடைய பஸ்கா. 
யாத்திராகமம் 12:11

🌸பஸ்காவின்
 நியமம் 3:

புசிக்கும் காரணம்..

இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி. அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலைவணங்கி பணிந்துகொண்டார்கள். 
யாத்திராகமம் 12:27

🍒🍒🍒🍒🍒🍒🍒

Passovers mentioned in the gospels.

🌹1. 
The first Passover appears in the Gospel of John, when Jesus went to Jerusalem and drove the money changers out of the temple (John 2:13).

பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது: அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய். 
யோவான் 2:13

தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு. 
யோவான் 2:14

கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, 
யோவான் 2:15

புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள், என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். 
யோவான் 2:16

🌹2.

The second Passover is implied by the feeding of the 5,000, which took place around Passover time
 (John 6:4).

அப்பொழுது யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா சமீபமாயிருந்தது. 
யோவான் 6:4

இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்பை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்றுகேட்டார். 
யோவான் 6:5

தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார். 
யோவான் 6:6

🌹3.

The third Passover is the final Passover, which includes the Last Supper and Jesus's crucifixion (John 13). 

பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். 
யோவான் 13:1

சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம் பண்ணிக்கொண்டிருக்கையில், 
யோவான் 13:2

தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும் தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து, 
யோவான் 13:3

இயேசு கிறிஸ்து கடந்து சென்று நிறைவேற்றிய மூன்றாம் பஸ்கா..
33 ம் வயதில்..

 இரண்டுநாளைக்குப்பின்பு பஸ்கா பண்டிகை வருமென்று அறிவீர்கள், அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.
 மத்தேயு 26:2

🍒🍒🍒🍒🍒🍒🍒

🌸மூன்றாம் பஸ்கா வாரத்தில் பஸ்காவாகிய கிறிஸ்துவின் பாடு மரண நிகழ்வுகள்..

♥️1. தாமே ஜீவ பஸ்கா..

அப்பொழுது யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா சமீபமாயிருந்தது.
இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்பை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்றுகேட்டார். 
யோவான் 6:4-5

♥️2. சுத்திகரிப்பின் பஸ்கா..

யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ளும் பொருட்டு நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள். 
யோவான் 11:55

அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கையில், ஒருவரையொருவர் நோக்கி: உங்களுக் கெப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள். 
யோவான் 11:56


♥️3. பஸ்காவாகிய கிறிஸ்து உயிர்த்தெழுதல் நிழல்..

பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார். 
யோவான் 12:1

♥️4. பஸ்காவாகிய கிறிஸ்துவின் ஒப்பற்ற அன்பு.. 

பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். 
யோவான் 13:1

♥️5. பஸ்காவாகிய கிறிஸ்துவின் போஜன பந்தி ஆயத்தம்.. நினைவு கூறுதல்..

அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார்.
 அந்த வீட்டெஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள்.
 அவர்கள் போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
 லூக்கா 22:8,11,13

♥️5. பஸ்காவாகிய கிறிஸ்துவின் தீட்டு படுத்தப்படாத பாடுகள்..

அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்,அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள். 
யோவான் 18:28

♥️6. பஸ்காவாகிய கிறிஸ்துவின் விடுதலைக்கு அதிகாரத்தின் ஆவல்..

பஸ்காபண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே, ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலைபண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான். 
யோவான் 18:39

♥️7. பஸ்காவாகிய கிறிஸ்துவின் ஆசை..

அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.
 லூக்கா 22:15

♥️8. பஸ்காவாகிய கிறிஸ்துவின் புறக்கணிப்பு..

அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது,அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான். 
அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள்.
அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள். 
யோவான் 19:14-16

🍒🍒🍒🍒🍒🍒🍒

🌺ஆராதனை சிந்தை:

♥️பஸ்காவாகிய கிறிஸ்துவின் நினைவு கூறுதல்..

விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான். 
எபிரேயர் 11:28

🌸ஆராதனை பயிற்சி:

ஆகையால் பழைய புளித்தமாவோடே அல்ல, 
🌺துர்க்குணம் 
inward evil
🌺 பொல்லாப்பு outward hatred என்னும் புளித்தமாவோடும் அல்ல, 
🌸துப்புரவு 
inward purity
🌸 உண்மை
 outward holiness..
 என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ( பஸ்கா ) ஆசரிக்கக்கடவோம். 
1 கொரிந்தியர் 5:8

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

CHURCH A GATHERING OF STEWARDS.

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA